7TH-TAMIL-1ST-TERM-UNIT-1-PEYCHUMOZHIYUM EZHUTHU MOZHIYUM- NOTES OF LESSON

 

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

பருவம்             :       முதல் பருவம்

மாதம்               :       ஜூன்

வகுப்பு             :       ஏழாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       பேச்சுமொழியும் எழுத்து மொழியும்


அறிமுகம்:

தமிழ்மொழியின் இரு வடிவங்களான பேச்சுமொழி மற்றும் எழுத்துமொழி ஆகியவற்றின் இயல்புகள், நுட்பங்கள் மற்றும் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

* பேச்சுமொழி மற்றும் எழுத்துமொழி வேறுபாடுகளை விளக்கும் அட்டவணைகள்.

  • ஊடகங்கள் (வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், மின்னஞ்சல்) சார்ந்த பட அட்டைகள்.
  • வட்டார வழக்குச் சொற்கள் குறித்த கரும்பலகைக் குறிப்புகள்.

நோக்கம்:

* மொழியின் இரு வடிவங்களை (பேச்சு மற்றும் எழுத்து) வேறுபடுத்தி அறிதல்.

  • வட்டார மொழி மற்றும் கிளைமொழி பற்றி புரிந்துகொள்ளுதல்.
  • ஊடகங்களில் தமிழின் பயன்பாட்டினை உணர்ந்து, செழுமையான தமிழினைப் பயன்படுத்த முற்படுதல்.

ஆசிரியர் குறிப்பு:

பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை (இரட்டை வழக்கு) மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துதல்.

ஊடகங்களில் திருத்தமான தமிழின் அவசியத்தை வலியுறுத்துதல்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

Ø  மொழியின் உயிர்நாடியாகப் பேச்சுமொழி விளங்குகிறது,

Ø  ஆனால் எழுத்துமொழி காலம் கடந்து நிலைத்து நிற்கிறது.

Ø  பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடுவதால் வட்டார வழக்குகள் தோன்றுகின்றன.

Ø  இவ்வேறுபாடுகள் காரணமாகத் தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர்.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

 * வீட்டில் பயன்படுத்தும் பேச்சுவழக்குத் தொடர்களைப் பட்டியலிட்டு, அவற்றுக்கு இணையான எழுத்துவழக்குத் தொடர்களை எழுதுதல்.

  • ஊடகங்களை (வானொலி, செய்தித்தாட்கள்) வகைப்படுத்தி அட்டவணைப்படுத்துதல்.

மதிப்பீடு:

* LOT (அறிதல்): மொழியின் முதல் நிலை எது?

  • MOT (புரிதல்): வட்டார மொழி எனப்படுவது யாது?
  • HOT (சிந்தித்தல்): இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

கற்றல் விளைவுகள்:

* T702: மொழியின் நுட்பங்களைச் சுயமாகப் புரிந்துகொள்ளுதல்.

  • T716: மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளைப் புரிந்துகொண்டு தமது உரையாடலில் வெளிப்படுத்துதல்.
  • T720: எழுதும் போது பொருத்தமான சொற்கள் மற்றும் இலக்கணக் கூறுகளைப் பொருத்தமாகப் பயன்படுத்துதல்.

தொடர் பணி:

* நீங்கள் அன்றாடம் பேசும் சொற்களில் உகரம் சேர்ந்து ஒலிக்கும் சொற்களைத் திரட்டி, அவற்றின் எழுத்துவழக்குச் சொற்களை எழுதி வருக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post