Just Released: THIRAN 8th Standard Tamil Annual Exam 2026 Question Paper-PDF

முழு ஆண்டுத் தேர்வு – 2025

தமிழ்

THIRAN ( Targeted Help for Improving Remediation & Academic Nurturing )

வகுப்பு : 8                                                                                 மதிப்பெண் : 100

காலம் : 2.30 மணி

1. ஒத்த ஓசையில்  முடியும் சொற்களை எடுத்து எழுதுக.                              (6 × 2 = 12)

         ( பாடியது, வரங்கள், நடந்தன, துள்ளியது, விலங்குகள், ஓடியது, பறந்தன, தாவரங்கள், வந்தன)

பாடியது

வரங்கள்

துள்ளியது

 

 

 

 

 

 


2. முதல் எழுத்தை மாற்றிப் பறவையின் பெயரை எழுதுக                             (6 × 2 = 12)

அ) வாளி _______           ஆ) சந்தை _______

இ) கன்னம் ________     ஈ)  துயில் ________

உ) பாகம் __________     ஊ) சுறா ______


3. சொற்களுக்குள் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.                                 (6 × 2 = 12)

அ)     வண்ணம்கண்ணாடி              ஆ)    தடி  –எள்ளுப்பூ

இ)      பூமாங்காய்                              ஈ)      தூண்கட்டில்

உ)     ஆறு – ஏடு                                 ஊ)    துண்டுதம்பி


4. தொடருக்குள் இரு தொடர்களை உருவாக்கி எழுதுக                                   (3 × 2 = 6)

அ) திருப்பூர் பின்னலாடை வாங்கி வந்தனர்

ஆ) புலவர் பாடியதைக் கேட்டு மன்னர் மகிழ்ந்தார்

இ) கணினியில் நண்பனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.


5. குறில் நெடில் எழுத்துகளை எழுதித் தொடர்களை நிறைவு செய்க.               (5 × 1 = 5)

அ) __ட்டுக்கிளி ___லியில் இருந்தது.

ஆ) __ழுகுவத்தி __சையில் உள்ளது.

இ) __ள்ளி வண்டு __வில் உள்ளது.

ஈ) __ன்னை மரத்தில் __ன் கூடு உள்ளது.

உ) __டுப்பது __டி இன்பம்.


6. குறிப்புகளைப் பயன்படுத்தி ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.   (4 × 2 = 8)

  1. எலியின் ஒரு வகை ________

அவித்து உண்ணும் சிற்றுண்டி ________

  1. உழவர்களின் நண்பன் _______

இசைக்கருவியின் பெயர் ________

  1. கிளியென முடியும் சொல் _______

காய்கறி வகையில் ஒன்று _______

  1. கார்ப்புச் சுவை உடையது _______

மழை பெய்யும் போது தோன்றுவது_______


7. பொருத்துக                                                                                            (6 × 1 = 6)

அ) ஆறு                -1. கரும்புச் சாற்றிலிருந்து உருவாகும். பொங்கலில் பயன்படுத்துவர்.

ஆ) வெல்லம்         -2. தண்ணீர் உவர்ப்பாக இருக்கும். கப்பல் போக்குவரத்து நடைபெறும்.

இ) வீடு                  -3. வளைந்து வளைந்து ஓடும், படகு சவாரி செய்யலாம்.

ஈ) ஆமை               -4. இனிப்புச் சுவை உடையது. கூட்டில் இருக்கும்.

உ) தேன்                -5. ஓடு இருக்கும். நீண்ட காலம் வாழும் உயிரினம்.

ஊ) கடல்               -6. ஓடு இருக்கும். சுவர் இருக்கும். மனிதர்களின் வாழிடம்


8. தொடருக்கேற்ற வினா உருவாக்குக.                                                            (6 × 1 = 6)

அ) நாங்கள் வழக்கமாக வெள்ளிக்கிழமை கோவிலுக்குச் செல்வோம்.

ஆ) எங்கள் வீட்டு பசு பால் கொடுக்கும்.

இ) இராமன் மட்டைப்பந்து விளையாடினான்

ஈ) தென்றல் தெருவில் அஞ்சலகம் உள்ளது.

உ) தாத்தா பழங்கதைகளைக் கூறுவார்.

ஊ) கீழடியில் அகழாய்வு நடக்கிறது.


9. தொடர்களைச் சரியான முறையில் வரிசைப்படுத்துக.                                       (5 × 1 = 5)

அ) பின்னர் அதில் மலர்கள் மலர்ந்தன.
ஆ) தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றினேன்.
இ) தோட்டத்தில் ஒரு செடி நட்டேன்.
ஈ) அதை பார்த்து நான் மகிழ்ந்தேன்.
உ) சில நாட்களில் அது வளரத் தொடங்கியது.


10. சொற்களைப் படித்து அட்டவணைக்கேற்ப நிரப்புக                                     (5 × 2 = 10)

( அறிவழகி, பேருந்துகள், சேவல், மதன், அப்துல், நாற்காலிகள், மக்கள், மெர்சி, அது )

ஆண்பால்

பெண்பால்

பலர்பால்

ஒன்றன் பால்

பலவின் பால்

 

 

 

 

 

 

 

 

 

 


11. உரைப் பகுதியைப் படித்து விடை எழுதுக.                                            (5 × 2 = 10)
வானில் இருந்து பெய்யும் மழைநீர்தான் உயிர்களுக்கு ஆதாரம் ஆகும். ஓரறிவு உயிர்

முதல்ஆறறிவு உயிர்கள் வரை புவியில் உள்ளன. மழைநீரே அனைத்து உயிர்களுக்கும்

உணவை உருவாக்கித் தருகிறது. மேலும் அந்த உயிர்களுக்கு தாகம் தீர்த்து தானே

உணவாகவும் மழைநீர் பயன்படுகிறது. திருக்குறள் நூலில் இரண்டாம் அதிகாரமாக

‘வான்சிறப்பு’ உள்ளது. இது மழைநீரின் சிறப்பைக் காட்டுகிறது.

அ) மேற்சொன்ன உரை எதைப் பற்றியது?
i) உணவு
ii)
திருக்குறள்
iii)
மழைநீர்

ஆ) சரியா () தவறா () குறியிடுக

i) ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்கள் வரை புவியில் உள்ளன.

ii) ‘வான்சிறப்பு’ என்ற அதிகாரம் வானில் உள்ள கோள்களைப் பற்றியது.

இ) ஒரே சொல்லால் நிரப்புக

அனைத்து உயிர்களுக்கும் உணவாக அமைவது ______

அனைத்து உயிர்களுக்கும் தானே உணவாக அமைவது ______

ஈ) திருக்குறள் நூலில் இரண்டாம் அதிகாரம் எது?

உ) வானம் மழை பொழியாமல் போனால் என்ன நிகழும்?


12. படத்தைப் பார்த்து நான்கு தொடர்கள் எழுதுக.                                       (4 × 2 = 8)


 


 


 


 CLICK HERE 

 

 


 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post