8TH-TAMIL-NEW SYLLABUS-25-26-UNIT-01- ENATHU THAI MOZHI

 

எனது தாய் மொழி

குறிப்புச்சட்டம்

முன்னுரை

எனது தாய்மொழி - தமிழ்

தமிழின் சிறப்புகள்

தாய்மொழியின் முக்கியத்துவம்

முடிவுரை

தாய்மொழி:

தாய்மொழி என்பது ஒருவர் பிறந்ததும் முதலில் கற்றுக்கொள்ளும்

 மொழியாகும். அது எங்கள் வாழ்க்கையின் அடையாளமாக

 அமைகிறது.

 எனது தாய்மொழி –தமிழ்:

Ø  என் தாய்மொழி தமிழ். இது உலகின் மிகப் பழமையான,

செம்மொழியாகப் பரிணமித்த ஒரு இனிய மொழி.

Ø  இலக்கிய வளமும், இலக்கண வளமும் கொண்ட மொழி

Ø  நாளும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் சிறப்பு வாய்ந்த மொழி


 எனது தாய்மொழியாக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது.

 தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இலக்கியம் உலகப் புகழ் பெற்றது.

Ø  திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்றவை தமிழின்

 பெருமைகளை எடுத்துச் சொல்கின்றன.

Ø  தமிழ் மொழி இனிமை மற்றும் தனித்துவம் வாய்ந்தது.

Ø  அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் தந்து சிறந்து


 விளங்குகிறது.

 தாய்மொழியின் முக்கியத்துவம்:

Ø  தாய்மொழி நம்மை சிந்திக்கச் செய்கிறது.

Ø  உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.

Ø  நமது பண்பாடு, மரபு, அடையாளம் தாய்மொழியோடு

 இணைந்துள்ளன.

Ø  தாய்மொழியின் மூலம் பாடங்கள் எளிமையாக புரிந்து விடுகிறது.

Ø  தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என மகாத்மா காந்தியும்


 எடுத்துரைக்கிறார்.

நம் கடமை: 

Ø  தாய்மொழியை மதிக்க வேண்டும்.

Ø  அதன் உயர்விற்காக பாடுபட வேண்டும்.

Ø  மற்ற மொழிகளை கற்கும் போதும், தாய்மொழியை மறக்கக்கூடாது.

 முடிவுரை:

எனது தமிழ் தாய்மொழியை நான் பெருமையாக ஏற்று, பேணி வளர்க்க

 உறுதி செய்கிறேன். தமிழின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்தளவு

 என்னுடைய உழைப்பைக் கொடுக்க வேண்டும். தமிழே நமது 

தாய்மொழி, அதுவே எங்களின் வாழ்வு.

CLICK HERE TO GET PDF

CLICK HERE


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post