www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : தமிழ் வரிவடிவ வளர்ச்சி
அறிமுகம்:
மனிதன் தன் கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மொழியைக்
கண்டுபிடித்ததையும், மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துகளை
உருவாக்கியதையும், காலந்தோறும் தமிழ் எழுத்துகளில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களையும் அறிந்துகொள்ளுதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள்:
- பாடநூல்
- பழைய தமிழ் வரிவடிவங்கள்
மற்றும் தற்போதைய எழுத்துகளை ஒப்பிடும் விளக்கப்படம். காணொளிக்காட்சிகள், எழுத்து அட்டவணை
நோக்கம்:
- தமிழ் எழுத்துகளின் தோற்றம்
மற்றும் வளர்ச்சி நிலைகளை அறிந்துகொள்ளுதல்.
- எழுத்துச் சீர்திருத்தத்தின்
தேவையை உணர்தல்.
- வீரமாமுனிவர் மற்றும் தந்தை
பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்ளுதல்.
ஆசிரியர்
குறிப்பு:
·
ஓவிய எழுத்து, ஒலி எழுத்து வடிவங்களின்
தொடக்கத்தை விளக்குதல்.
·
கல்வெட்டுகள் மற்றும்
செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்து,
தமிழி
எழுத்துகளின் வேறுபாடுகளைக் கற்பித்தல்.
·
வீரமாமுனிவர் மற்றும்
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்கள் நவீன கணினிப் பயன்பாட்டிற்குத் தமிழை
எவ்வாறு ஏதுவாக்கின என்பதை வலியுறுத்துதல்.
கருத்துரு
வரைபடம்:
விளக்கம்:
எழுத்துகளின்
வரிவடிவ மாற்றங்கள் எழுதப்படும் பொருள்களின் தன்மை (கல், ஓலை), அழகுணர்ச்சி ஆகியவற்றால்
ஏற்பட்டதை விளக்குதல்.
செயல்பாடு
(மாணவர் செயல்பாடு):
- பழைய வரிவடிவச் சொற்களை இன்றைய
வரிவடிவில் மாற்றி எழுதும் பயிற்சி.
- எழுத்துச் சீர்திருத்தத்தின்
அவசியம் குறித்த குழு விவாதம்.
மதிப்பீடு:
- LOT: தமிழ்
எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெறக் காரணமாக அமைந்தது எது?
- MOT: வீரமாமுனிவர்
மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் இரண்டினை விளக்குக.
- HOT: தற்காலத்
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவன யாவை?
கற்றல்
விளைவுகள்::
- T811: படித்த
பிறகு பல்வேறு எழுத்தியியல் நடைகளையும், முறைகளையும் (விவரண முறை, இயற்கை அழகின்
வர்ணனை முறை போன்றவை) இனங்காணுதல்.
- T813: தேவைப்படின்
பார்வை நூல்களாகிய அகராதிகள், கலைக்களஞ்சியம் போன்றவற்றையும்
இணையதளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல்.
தொடர் பணி:
உரைநடைப்
பகுதியில் உள்ள பழைய வரிவடிவங்களை அடையாளம் கண்டு, இன்றைய தமிழ் எழுத்துகளுடன் ஒப்பிட்டு ஒரு
அட்டவணை தயார் செய்து வருக.
