www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : சொற்பூங்கா
அறிமுகம்:
மொழி வளரும் தன்மை உடையது
என்பதையும், ஒரு
சொல்லின் அடிச்சொல்லிலிருந்து பல சொற்கள் கிளைத்துப் பெருகுவதையும், தமிழில் உள்ள ஓரெழுத்து
ஒருமொழிகள் மற்றும் அவற்றின் சிறப்புகளையும் அறிந்துகொள்ளுதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள்:
- பாடநூல்
- ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள்
அடங்கிய அட்டவணை. காணொளிக்காட்சிகள்
நோக்கம்:
- தமிழ்மொழி பழங்காலம் தொட்டு
உயிரோட்டமாக இயங்கி வருவதை உணர்தல்.
- ஓரெழுத்து ஒருமொழிகளின்
இலக்கணம் மற்றும் பயன்பாட்டை அறிதல்.
- இரா. இளங்குமரனாரின்
தமிழ்ப்பற்றைப் புரிந்துகொள்ளுதல்.
ஆசிரியர்
குறிப்பு:
· "செந்தமிழ் அந்தணர்"
என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார்,
· தமிழில்
உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளைத் தொல்காப்பியர் மற்றும் நன்னூலார் வழி நின்று
வகைப்படுத்தியதை விளக்குதல்.
· மொழியில்
சொல்லின் தேய்மானம் இயற்கையானது என்பதையும்,
சொல்
தோன்றும் காலம் மற்றும் இயக்கத்தைப் பற்றியும் தெளிவுபடுத்துதல்.
கருத்துரு
வரைபடம்:
விளக்கம்:
· தமிழில்
சொல் என்பதற்கு நெல், மொழி
எனப் பல பொருள்கள் உண்டு.
· குற்றெழுத்து
தனித்து நின்று சொல் ஆவதில்லை என்பதைத் தொல்காப்பியர் மூலம் விளக்குதல்.
· "யா" என்பது
வினாவிற்கு முன்னால் வந்து நிற்கும் சிறப்பு,
"மா" என்னும் சொல்லின் பல பரிமாணங்கள் ஆகியவற்றை
விரிவாகக் கூறுதல்.
செயல்பாடு
(மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் தமக்குத் தெரிந்த
ஓரெழுத்து ஒருமொழிகளைப் பட்டியலிடுதல்.
- "பூ", "கா", "மா", "யா"
போன்ற சொற்களைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குதல்.
மதிப்பீடு:
- LOT: ஓரெழுத்து
ஒருமொழிகள் எத்தனை என நன்னூலார் குறிப்பிடுகிறார்?
- MOT: "மா" என்னும்
ஓரெழுத்து ஒருமொழி மக்கள் வழக்கிலும் இலக்கியத்திலும் எவ்வாறு திகழ்கிறது?
- HOT: தமிழில் ஓரெழுத்து
ஒருமொழிகளின் பெருக்கம், மொழியின் பழமையையும்
உயிரோட்டத்தையும் எவ்வாறு காட்டுகிறது?
கற்றல்
விளைவுகள்::
- T803: படித்தவற்றைப்பற்றிச்
சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பி புரிதலை மேம்படுத்திக்கொள்ளல்.
- T810: பல்வேறு
வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை
புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
தொடர் பணி:
பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒருமொழிகளின்
பட்டியலை எழுதி, அவற்றில்
உங்களுக்குத் தெரிந்த பத்து சொற்களைக் கொண்டு தொடர்கள் அமைத்து வருக
