www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : எழுத்துகளின் பிறப்பு
அறிமுகம்:
எழுத்துகள் பிறக்கும் இடங்களையும், அவற்றை ஒலிக்கும்
முயற்சியையும் தெரிந்துகொண்டு, எழுத்துகளைச்
சரியாக ஒலிக்கும் திறனைப் பெறுதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள்:
- பாடநூல்
- உறுப்புகளின்
(நாக்கு, பல், அண்ணம், உதடு) செயல்பாட்டைக்
காட்டும் விளக்கப் படங்கள்.
- காணொளிக்காட்சிகள், எழுத்து அட்டவணை
நோக்கம்:
- எழுத்துகளின்
இடப்பிறப்பு மற்றும் முயற்சிப் பிறப்பை வகைப்படுத்த அறிதல்.
- ஒவ்வொரு
எழுத்தும் பிறக்கும் இடத்தையும் முயற்சியையும் கண்டறிந்து துல்லியமாக
ஒலித்தல்.
ஆசிரியர் குறிப்பு:
உயிரெழுத்துகள்
கழுத்தை இடமாகக் கொண்டு பிறப்பது, வல்லினம்.மார்பை இடமாகக் கொண்டு பிறப்பது, மெல்லினம். மூக்கை இடமாகக் கொண்டு பிறப்பது மற்றும்
இடையினம் கழுத்தைப் பிறப்பிடமாகக் கொள்வது ஆகியவற்றைத் தெளிவுபடுத்துதல். முயற்சிப் பிறப்பு என்பது
நாக்கு, பல், உதடு, மேல்வாய் ஆகியவற்றின்
செயல்பாடுகளால் அமைவதை விளக்குதல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
உடலின் உள்ளிருந்து எழும் காற்று, நான்கு இடங்களுள் ஒன்றில்
பொருந்தி, உறுப்புகளின்
முயற்சியால் ஒலிகளாக உருவாவதை விளக்குதல். க், ங், ச், ஞ் போன்ற
மெய்யெழுத்துகளின் முயற்சிப் பிறப்பு முறைகளை விளக்கப்படங்கள் மூலம் விளக்குதல்.
செயல்பாடு (மாணவர்
செயல்பாடு):
- மாணவர்கள்
ஒவ்வொரு எழுத்தையும் ஒலித்துப் பார்த்து, அவை பிறக்கும் உறுப்புகளைக்
கண்டறிதல்.
- ஆய்த
எழுத்து மற்றும் சார்பெழுத்துகளின் பிறப்பு குறித்து வகுப்பில் உரையாடுதல்.
மதிப்பீடு:
- LOT: உதடுகளைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் யாவை?
- MOT: வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் எது?
- HOT: 'ஆய்தம்' - இச்சொல்லில் உள்ள
ஒவ்வோர் எழுத்தின் வகையையும் அது பிறக்கும் இடத்தையும் பட்டியலிடுக.
கற்றல் விளைவுகள்:
- T816: மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம்
மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்.
- T820: கைவினைப் பொருட்கள் தயாரித்தல், கட்டிடக்கலை, உழவுத் தொழில் போன்ற
செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல் (குறிப்பு:
மொழியின் நுணுக்கமான உச்சரிப்புச் சொற்களைப் பயன்படுத்துதல்).
தொடர் பணி:
உங்கள் பெயரில் உள்ள எழுத்துகள்
ஒவ்வொன்றும் பிறக்கும் இடம் மற்றும் முயற்சிப் பிறப்பு முறைகளை எழுதி வருக.
