www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : ஆழிக்கு இணை
அறிமுகம்:
சந்தக்கவிமணி
தமிழழகனார், தமிழையும் கடலையும் ஒப்பிட்டு, இரட்டுறமொழிதல்
(சிலேடை) அணி மூலம் பாடிய பாடலை அறிந்துகொள்ளுதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள்:
- பாடநூல்
- தமிழ் மற்றும் கடல் ஆகியவற்றின் ஒற்றுமையை
விளக்கும் ஒப்பீட்டு விளக்கப்படம்.
நோக்கம்:
- இரட்டுறமொழிதல் அணியின் சிறப்பை உணர்தல்.
- தமிழின் சிறப்புகளையும் (முத்தமிழ், முச்சங்கம், காப்பியம்), கடலின்
சிறப்புகளையும் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளுதல்.
ஆசிரியர்
குறிப்பு:
தமிழழகனாரின்
இயற்பெயர் சண்முகசுந்தரம் என்பதையும், அவர் ஏன்
'சந்தக்கவிமணி' என்று
அழைக்கப்படுகிறார் என்பதையும், பாடலின் பொருள்
இருபொருள் தருமாறு அமைந்துள்ள சிலேடை நயத்தையும் விளக்குதல்.
கருத்துரு
வரைபடம்:
விளக்கம்:
தமிழையும்
கடலையும் ஒரே பாடலில் இரட்டுறமொழிதல் அணியின் மூலம் ஒப்பிட்டு, இவ்விரண்டின்
மேன்மைகளையும் கவிஞர் விளக்குவதைக் கூறல்.
செயல்பாடு
(மாணவர் செயல்பாடு):
- பாடலைச் சீர்பிரித்துப் பொருள் உணர்ந்து
வாசித்தல்.
- தமிழ் மற்றும் கடல் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்
ஒத்த பண்புகளைப் பட்டியலிடுதல்.
மதிப்பீடு:
- LOT: தமிழ்த்தாய் எவற்றை
அணிகலன்களாக அணிந்துள்ளாள்?
- MOT: இரட்டுறமொழிதல் அணி என்றால்
என்ன?
- HOT: தமிழுக்கும் கடலுக்கும் உள்ள
ஒற்றுமைகளாக நீங்கள் கருதுவன யாவை?
கற்றல்
விளைவுகள்::
- T810: படித்தவற்றில் காணப்படும்
சொற்கள் மற்றும் மரபுத்தொடர்களைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
- T822: பாடல், கட்டுரை
எழுதும் போது பல்வேறு புலப்பாட்டு உத்திகளை (இங்கு இரட்டுறமொழிதல் அணி) இனம்
கண்டு பயன்படுத்துதல்.
தொடர்
பணி:
இருபொருள்
தரும் (சிலேடை) சொற்களைச் சேகரித்து, அவற்றுக்கான
இரு பொருள்களையும் எழுதி வருக.
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
