8TH-TAMIL-UNIT-1-THAMIZH MOZHI VAZHTHU- NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       ஜூன்

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       தமிழ் மொழி வாழ்த்து


அறிமுகம்:

பாரதியார் இயற்றிய "தமிழ்மொழி வாழ்த்து" பாடலின் மூலம், தமிழின் தொன்மை, அதன் வளம் மற்றும் தமிழின் சிறப்பை இக்கால இளைய தலைமுறைக்கு உணர்த்துதல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல் (எட்டாம் வகுப்பு)
  • பாரதியாரின் புகைப்படம் மற்றும் கவிதைகள் அடங்கிய தொகுப்பு
  • பாடத்தின் பொருளடக்கம் மற்றும் சொல் விளக்கம் குறித்த அட்டைகள்

 நோக்கம்:

  • தமிழ்மொழியின் சிறப்பினை மாணவர்கள் உணர்தல்.
  • செய்யுளைப் படித்து அதன் நயங்களை (எதுகை, மோனை, இயைபு) போற்றும் திறன் பெறுதல்.
  • தமிழ்மொழியின் மேன்மையை உணர்ந்து போற்றிப் பாடும் ஆர்வம் பெறுதல்.

ஆசிரியர் குறிப்பு:

பாரதியாரின் பன்முக ஆற்றலையும், "தமிழ்மொழி வாழ்த்து" கவிதையின் பொருளையும், அதில் கையாளப்பட்டுள்ள எதுகை, மோனை, இயைபு ஆகிய தொடைகளின் சிறப்பையும் விளக்குதல்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

 பாரதியார் தமிழ்த்தாயை எக்காலத்தும் நிலைபெற்று வாழும்படி வாழ்த்துகிறார். அறியாமை இருள் நீங்கி, தமிழ்மொழி மேன்மையுற்று, உலகம் முழுதும் ஒளிர வேண்டும் என்று பாடுகிறார்.

 செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • மாணவர்கள் பாடலை இசையுடன் பாடுதல்.
  • பாடலில் உள்ள எதுகை, மோனை, இயைபு சொற்களைப் பட்டியலிடுதல்.
  • தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்த கலந்துரையாடல்.

மதிப்பீடு:

  • LOT (குறைந்தநிலை சிந்தனை): பாரதியார் தமிழை எவ்வாறு போற்றுகிறார்?
  • MOT (நடுநிலை சிந்தனை): பாடலின் பொருளைச் சுருக்கமாகக் கூறுக.
  • HOT (உயர்நிலை சிந்தனை): பாரதியார் தமிழை "வண்மொழி" என்று அழைக்கக் காரணம் என்ன?

 கற்றல் விளைவுகள்::

  • T810: படித்தவற்றில் காணப்படும் சொற்கள், மரபுத்தொடர்களைப் புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்.
  • T816: மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து, பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்து கொள்ளுதல்.

 தொடர் பணி:

தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை மனப்பாடம்  செய்து வருதல்.

.__________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post