இயல் – 6
மதிப்பீடு, மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு
1. சரியான
அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) உழவு,மண்,ஏர்,மாடு ஆ) மண்,மாடு,ஏர்,உழவு
இ) உழவு,ஏர்,மண்,மாடு ஈ) ஏர்,உழவு,மாடு,மண்
2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது _______
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
3. நச்சிலைவேல்
கோக்கோதைநாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில்
குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
அ) பாண்டிய
நாடு, சேர நாடு ஆ)
சோழ நாடு, சேர நாடு
இ) சேரநாடு,
சோழ நாடு ஈ)
சோழநாடு, பாண்டிய நாடு
4. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
__
அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை
முற்றுகையிடல்
5. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு
வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
அ) திருப்பதியும்,திருத்தணியும் ஆ) திருத்தணியும்,திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும்
பழனியும்
6.பாசவர்,
வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள்
அ) வெற்றிலை விற்பவர், நறுமணப் பொருள்
விற்பவர்,இறைச்சிகளை விற்பவர், உப்பு விற்பவர்
ஆ) நறுமணப் பொருள் விற்பவர், இறைச்சிகளை
விற்பவர், வெற்றிலை விற்பவர், உப்பு விற்பவர்
இ) உப்பு விற்பவர், நறுமணப் பொருள் விற்பவர்,
வெற்றிலை விற்பவர், இறைச்சிகளை விற்பவர்
ஈ) இறைச்சிகளை விற்பவர், உப்பு விற்பவர்,
நறுமணப் பொருள் விற்பவர், வெற்றிலை விற்பவர்.
7. அள்ளல்
பழனத்து அரக்காம்பல் வாயவிழ – இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள்.
அ) அள்ளல்,அரக்காம்பல் ஆ) பழனம், வாயவிழ
இ) பழனம், அரக்காம்பல் ஈ)
அள்ளல், பழனம்
8. வறுமையிலும்
படிப்பின் மீது நாட்டம் கொண்டவர்
அ) நேசமணி ஆ) காத்தவராயன் இ)
ம.பொ.சி ஈ) சரபையர்
9. புறத்திணைகளில்
எதிரெதிர் திணைகளைத் தேர்க.
அ) வெட்சி x கரந்தை ஆ) வஞ்சி x காஞ்சி இ) நொச்சி x உழிஞை ஈ) அனைத்தும்
10. பொதுவியல்
திணை என்பது
அ) ஆநிரை மீட்டல் ஆ) பொதுவானவற்றைக் கூறுவது
இ) ஒரு தலைக் காமம் ஈ) வெற்றி பெற்ற மன்னன்
11.தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் எனக் கூறியவர்
அ) நேசமணி ஆ) காத்தவராயன் இ)
ம.பொ.சி ஈ) சரபையர்
12. பகர்வனர்
திரிதரு நகரவீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் – இவ்வடிகள்
இடம் பெற்ற நூல்
அ) முத்தொள்ளாயிரம் ஆ) சிலப்பதிகாரம் இ) தேம்பாவணி ஈ)
சீவக சிந்தாமணி
13. பகர்வனர்
திரிதரு நகரவீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் – இவ்வடிகள்
இடம் பெற்ற எதுகைச் சொற்கள்
அ) பகர்வனர் – திரிதரு ஆ) பகர்வனர் – பட்டினும்
இ) பகர்வனர்- நகரவீதி ஈ)
பருத்தி – நூலினும்
14. கட்டு
நுண்வினைக் காருகர் இருக்கையும்
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் – இவ்வடிகளில்
“ காருகர் “ என்பதன் பொருள்
அ) சிற்பி ஆ) நெசவாளர் இ)
ஓவியர் ஈ) பிட்டு விற்பவர்
15. பட்டினபாக்கம்
என்பது ______ அருகில் உள்ள பகுதி
அ) தேருக்கு ஆ) சந்தைக்கு இ)
கடற்கரைக்கு ஈ) கடைத்தெருவுக்கு
16. மூவேந்தர்களால்
நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே. இவ்வடிகளில் உள்ள தொகைச் சொற்களின் பிரிப்பு
அ) மூன்று + வேந்தர், நான்கு + திசை,
மூன்று + தமிழ்
ஆ) மூ + வேந்தர், நான்கு + இசை, மூன்று
+ தமிழ்
இ) மூன்று + வே + அர், நாற்று + இசை, மூன்று
+ தமிழ்
ஈ) மூன்று + வேந்தர், நான்கு + அசை, மூ
+ தமிழ்
17. முப்பாலை
முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள்.
இவ்வடிகளில் உள்ள தொகைச் சொற்களின் தமிழெண்ணைக் காண்க.
அ) ங, அ ஆ) ரு,எ இ) ங,ரு ஈ) அ,உ
18. நானிலத்தில்
பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை
ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகின்றன. இவ்வடிகளில் உள்ள சங்க இலக்கிய நூல் பெயர்களைத் தேர்க.
அ) நானிலம், தமிழ்ப்பெருமை ஆ) பத்துப்பாட்டு, அறுசுவை
இ) தமிழ்ப்பெருமை, அறுசுவை ஈ) பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
19. கம்பனும்
கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
– இப்பாடல் அடியில் இடம் பெற்றுள்ள புலவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
அ) கம்பன்,கொம்பன்,உமறுப்புலவர்,ஜவாது ஆசுகவி
ஆ) கம்பன், உமறுப்புலவர்,ஜாவது கவி
இ) கம்பன், உமறுப்புலவர்
ஈ) ஜாவது ஆசுகவி, கொம்பன்
20. காசிம்
புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
– இவ்வடிகளில் இடம் பெறாத புலவரைக் காண்க.
அ) திருவள்ளுவர் ஆ) காசிம்புலவர் இ) செய்குதம்பிப் பாவலர் ஈ)
குண்ங்குடியார்
21. தொடரைப்
படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
நூலின் பயன் படித்தல் எனில் கல்வியின் பயன்
___________
அ) எழுத்து ஆ) கற்றல் இ) சோறு ஈ) கரு
22. தொடரைப்
படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து
___________
அ) எழுத்து ஆ) கற்றல் இ)
சோறு ஈ) கரு
23. தொடரைப்
படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை___________
அ) எழுத்து ஆ) கற்றல் இ) சோறு ஈ) கரு
24. தொடரைப்
படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
கல் சிலை ஆகுமெனில், நெல்___________ஆகும்.
அ) எழுத்து ஆ) கற்றல் இ) சோறு ஈ) கரு
25. தொடரைப்
படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது
___________
அ) எழுத்து ஆ) பூவில் இ) சோறு ஈ) கரு
26.கலைச்சொல்
தருக. AGREEMENT
அ) சொற்பொழிவு ஆ) முடியாட்சி இ) ஒப்பந்தம் ஈ) எல்லை
27. கலைச்சொல்
தருக. DISCOURSE
அ) சொற்பொழிவு ஆ) முடியாட்சி இ)
ஒப்பந்தம் ஈ)
எல்லை
28. கலைச்சொல்
தருக. MONARCHY
அ) சொற்பொழிவு ஆ) முடியாட்சி இ) ஒப்பந்தம் ஈ)
எல்லை
29. கலைச்சொல்
தருக. BORDER
அ) சொற்பொழிவு ஆ) முடியாட்சி இ) ஒப்பந்தம் ஈ)
எல்லை
30. கலைச்சொல்
தருக. REBELLION
அ) சொற்பொழிவு ஆ) கிளர்ச்சி இ)
ஒப்பந்தம் ஈ) எல்லை
31. பொருத்துக.
அ) AGREEMENT - 1) எல்லை
ஆ) DISCOURSE - 2) ஒப்பந்தம்
இ) MONARCHY - 3) சொற்பொழிவு
ஈ) BORDER - 4) முடியாட்சி
அ) 2,3,4,1 ஆ) 3,2,1,4 இ) 4,1,3,2 ஈ)
2,1,4,3
32. பொருத்தமற்ற
இணையைத் தேர்க.
அ) REBELLION - கிளர்ச்சி
ஆ) BORDER - எல்லை
இ) AGREEMENT - சொற்பொழிவு
ஈ) MONARCHY - முடியாட்சி
33. என் கதை
என்ற நூலின் ஆசிரியர்
அ) உதய சங்கர் ஆ) கலைஞர் இ) ராஜம் கிருஷ்ணன் ஈ) வெ.இராமலிங்கம்
34. வேருக்கு
நீர் என்ற நூலின் ஆசிரியர்
அ) உதய சங்கர் ஆ) கலைஞர் இ) ராஜம் கிருஷ்ணன் ஈ) மா. நன்னன்
35. நாற்காலிக்காரர்
என்ற நூலின் ஆசிரியர்
அ) ந.முத்துசாமி ஆ) கலைஞர்
இ) ராஜம் கிருஷ்ணன் ஈ) வெ.இராமலிங்கம்
36. குணதரன்
– சொல்லிற்கான பொருளைத் தேர்க.
அ) கொள்கை ஆ) நற்குணம் உள்ளவன் இ)
சிரிப்பு ஈ) மிகுதி
