இயல் – 7
சங்க இலக்கியத்தில் அறம்
1. அறத்தை
மனித உறவின் மையமாகக் கொண்டிருந்த காலம்
அ) நவீன காலம் ஆ) சங்கம் மருவிய காலம் இ)
சங்க காலம் ஈ) இடைக்காலம்
2. சமயக் கலப்பில்லாத
மானிட அறம் இயல்பாக நிலவிய காலம்
அ) நவீன காலம் ஆ) சங்கம் மருவிய காலம் இ)
சங்க காலம் ஈ) இடைக்காலம்
3. சங்க காலத்திற்குப்
பிந்தைய அற இலக்கியங்களின் காலம்
அ) நவீன காலம் ஆ) அறநெறிக் காலம் இ)
சங்க காலம் ஈ) இடைக்காலம்
4. அறநெறிக்
கால அறங்கள்
அ) மதம் சார்ந்தவை ஆ) மனிதம் சார்ந்தவை இ) சமயம் சார்ந்தவை ஈ) உணர்வு சார்ந்தவை
5. சங்க அறங்கள்,
சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல. இதில் இரவல் என்பதன் பொருள்
அ) கடன் ஆ) மதிப்பு இ) நன்றி ஈ) உணர்வு
6. கூற்று
1 : மனிதன் – சமூகக் கடலின் ஒரு துளி
கூற்று 2 : மகிழ்ச்சியைப் பெற மனிதன் பொதுவிதியான
அறத்தை ஏற்க வேண்டும்.
அ) கூற்று1 மற்றும் 2 சரி ஆ) கூற்று 1 மட்டும் சரி; கூற்று 2 தவறு
இ) கூற்று 1 தவறு; கூற்று 2 மட்டும் சரி ஈ) கூற்று 1 மற்றும் 2 தவறு
7. சங்க காலத்தமிழர்கள்
இன்பற்றிருக்க காரணம்
அ) அதிக உழைப்பு ஆ) செல்வம் சேகரிப்பு
இ) பொருள் ஈட்டி அறம் செய்தது ஈ) உற்பத்தியை ஏற்றுமதி செய்தது
8. அறம் செய்வதில்
வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது
அ) நவீன கால மக்கள் கருத்து ஆ) சங்க கால மக்களின் கருத்து
இ) மன்னர்களின் செயல்பாடு ஈ) அமைச்சர்களின் கருத்து
9. அறத்தில்
வணிக நோக்கு என்பது
அ) பெரும் பொருளீட்டல் ஆ) அதிக முதலீடு
இ) எவ்வித நோக்கும் இல்லாத அறம் ஈ) பயன் எதிர்பார்த்து அறம் செய்வது
10. இம்மைச்
செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன்- புறநூனூற்றில் குறிப்பிடப்படும்
வள்ளல்
அ) பாரி ஆ) ஆய் அண்டிரன் இ)
அதியன் ஈ) பெருஞ்சாத்தன்
11. மன்னர்களின்
அறத்தின் குறியீடாக கருதப்படுவது
அ) வில், அம்பு ஆ) கேடயம், வாள்
இ) செங்கோல்,வெண்கொற்றக்குடை ஈ) செங்கோல். அம்பு
12. நீர் நிலை
பெருக்கி, நில வளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பது என்பது
அ) அரசனின் கடமை ஆ) மக்களின் கடமை
இ) அமைச்சர்களின் கடமை ஈ) காவலர்களின் கடமை
13. குற்றங்களை,
அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறுபவர்
அ) ஆவூர் மூலங்கிழார் ஆ) ஊன் பொதிப்
பசுங்குடையார்
இ) நல்லந்துவனார் ஈ) நல்வேட்டனார்
14. சங்க காலத்தில்
அரசன் அறநெறியில் ஆட்சி செய்ய உதவியவர்கள்
அ) மக்கள் ஆ) அமைச்சர்கள் இ) காவலர்கள் ஈ) ஒற்றர்கள்
15. நன்றும்
தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை – எனக் கூறும் நூல்
அ) குறுந்தொகை ஆ) மதுரைக்காஞ்சி இ) புறநானூறு ஈ) சிறுபாணாற்றுப்படை
16. “ அறம்
அறக் கண்ட நெறிமான் அவையம் “ எனக் கூறும் நூல்
அ) அகநானூறு ஆ) பதிற்றுப்பத்து இ) புறநானூறு ஈ) ஐங்குறுநூறு
17. தனிச்சிறப்பு
பெற்ற அறஅவையம் என இலக்கியங்கள் குறிப்பிடும் அவையம் அமைந்த ஊர்
அ) உறையூர் ஆ) துறையூர் இ) பனையூர் ஈ) நாவலூர்
18. மதுரையில்
இருந்த அவையம் பற்றி குறிப்பிடும் நூல்
அ) பட்டினப்பாலை ஆ) சிறுபாணாற்றுப்படை இ) நறுந்தொகை ஈ) மதுரைக்காஞ்சி
19. வீரமற்றோர்,
புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கும்
அறம்.
அ) கொடை அறம் ஆ) உதவி அறம் இ) போர் அறம் ஈ) வாய்மை அறம்
20. தம்மை
விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது எனக் கூறுபவர்
அ) நல்லந்துவனார் ஆ)ஆவூர் மூலங்கிழார் இ)நல்வேட்டனார் ஈ)பெருஞ்சித்திரனார்
21. கூற்று
1 : வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது.
காரணம் : மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து
மற்றவர் மகிழ்ச்சியை நாடுவது தான் உண்மையான மகிழ்ச்சி.
அ) கூற்று ; காரணம் இரண்டும் சரி ஆ) கூற்று தவறு; காரணம் சரி
இ) கூற்று சரி; காரணம் தவறு ஈ) கூற்று,காரணம் இரண்டும் தவறு
22. எழுவரின்
கொடைப் பெருமையைக் கூறும் நூல்
அ) பெரும்பாணாற்றுப்படை ஆ) நெடுநல்வாடை
இ) சிறுபாணாற்றுப்படை ஈ) கூத்தராற்றுப்படை
23. கொடை இலக்கியங்களாக
கருதப்படும் இலக்கியம்
அ) பத்துப்பாட்டு நூல்கள் ஆ) எட்டுத்தொகைகள்
இ) ஆற்றுப்படை இலக்கியங்கள் ஈ)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
24. பதிற்றுப்பத்து
எந்த அரசர்களின் கொடைப்பதிவைக் கூறுகிறது?
அ) பாண்டிய அரசு ஆ) சேர அரசு இ)
சோழ அரசு ஈ) நாயக்கர் அரசு
25. அரியன
என்று கருதாது, தயங்காது கொடுத்தலும் ஈதலால் வரும் இழப்புக்கு வருந்தாமையும் நாள்தோறும்
கொடுத்தலும் என்பது…..
அ) உதவியின் பெருமை ஆ) வாய்மையின் பெருமை
இ)
அறங்கூறவையத்தின் சிறப்பு ஈ)
கொடையின் பெருமை
26. ‘ இல்லோர்
ஒக்கல் தலைவன்’. ‘ பசிப்பிணி மருத்துவன் ‘ என்று போற்றப்படுகிறவர்கள்
அ) மன்னர்கள் ஆ) வள்ளல்கள் இ)
மக்கள் ஈ) இரப்போர்கள்
27.வழங்குவதற்குப்
பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவன்
அ) அதியன் ஆ) பிடவூர் கிழான் இ)
பரணர் ஈ) பெருஞ்சாத்தன்
28. வழங்குவதற்குப்
பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவன் என பாடுபவர்
அ) ஒளவையார் ஆ) கபிலர் இ) பெருஞ்சாத்தன் ஈ) நக்கீரர்
29. வள்ளலின்
பொருள்
அ) மக்களின் பொருள் ஆ) இரவலனின் பொருள்
இ) திரைப்பொருள் ஈ) விளைப்பொருள்
30. இரவலனின்
வறுமை எவரின் வறுமையாகக் கருதப்படுகிறது?
அ) அரசன் ஆ) வள்ளல்கள் இ) அமைச்சர் ஈ) மக்கள்
31. வள்ளலின்
பொருள் இரவலனின் பொருள்; வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை எனக் குறிப்பிடுபவர்.
அ) பெருஞ்சாத்தன் ஆ) நக்கீரர் இ)
பெரும்பதுமனார் ஈ) கபிலர்
32. உலகமே
வறுமையுற்றாலும் கொடுப்பவன் என அறியப்பட்டவர்
அ) அதியன் ஆ) பெருஞ்சாத்தன் இ) பெருஞ்சித்திரனார் ஈ) மலையமான்
33. உலகமே
வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என பாராட்டுபவர்
அ) மாசாத்தியார் ஆ) பெரும்பதுமனார் இ)
கபிலர் ஈ) ஒளவையார்
34. இரவலர்
வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தலை தன் இயல்பாகக் கொண்டவன்
அ) ஆடுகோட்டுபாட்டுச் சேரலாதன் ஆ)
குமணன் இ) மலையமான் ஈ) கபிலன்
35. மறுமையை
நோக்கிக் கொடுக்காதவன்
அ) கபிலன் ஆ) பேகன் இ)
மலையமான் ஈ) சாத்தன்
36. தன்னை
நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடைப்
பெருந்துன்பமாக கருதியவன்
அ) கபிலன் ஆ) பேகன் இ)
மலையமான் ஈ) குமணன்
37. பொருத்துக.
அ) அதியன் - 1) மறுமையை நோக்கிக் கொடுக்காதவன்
ஆ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் - 2) எல்லாவற்றையும் கொடுப்பவன்
இ) பேகன் - 3) உலகம் வறுமைற்றாலும் கொடுப்பவன்
ஈ) மலையமான் திருமுடிக்காரி - 4) இரவலரைத் தேடி வரவழைப்பவன்
அ) 3,4,1,2 ஆ) 4,3,1,2 இ)
3,2,1,4 ஈ) 2,1,4,3
38.எல்லாவற்றையும்
கொடுப்பவன் மலையமான் என பாராட்டுகிறவர்
அ) பெரும்பதுமனார் ஆ) கபிலர் இ) ஒளவையார் ஈ) பரணர்
39. தான் பெற்றதை
பிறருக்கு வழங்கும் பேருள்ளம் கொண்டவராக புறநானூறு மூலம் புலப்படுத்தப்படும் புலவர்
அ) கபிலன் ஆ) பரணர் இ)
பெருஞ்சித்திரனார் ஈ) சாத்தன்
40. வேறுபட்டவரைக்
காண்க.
அ) ஒளவையார் ஆ) பரணர் இ) கபிலர் ஈ) பெருஞ்சாத்தன்
41. வேறுபட்டவரைக்
காண்க.
அ) மலையமான் ஆ) நச்செள்ளையார் இ)
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஈ) அதியன்
42. சங்க இலக்கியங்கள்
குறிப்பிடும் அறங்களில் சிறந்த அறமாகக் கருதப்படுவது
அ) போர் அறம் ஆ) கொடை அறம் இ)
சிறந்த ஆட்சி ஈ) உதவி அறம்
43.உதவி செய்தலை
“ உதவியாண்மை “ எனக் குறிப்பிடுபவர்
அ) கபிலர் ஆ) பரணர் இ) ஈழத்து
பூதன் தேவன் ஈ) நல்லந்துவனார்
44.பிறர் நோயும்
தம் நோய்போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் – இவ்வடிகள் இடம்
பெற்ற நூல்
அ) கலித்தொகை ஆ) பெரியபுராணம் இ) புறநானூறு ஈ) குறுந்தொகை
45. பிறர்
துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி உதவ வேண்டும் எனக் கூறுபவர்
அ) நல்வேட்டனார் ஆ) கபிலர் இ) நல்லந்துவனார் ஈ) பரணர்
46. உண்மையான
செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான் எனக் கூறுபவர்
அ) நல்வேட்டனார் ஆ) கபிலர் இ)
நல்லந்துவனார் ஈ) பரணர்
47. சான்றோர்
செல்வம் என்பது
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே – இவ்வடிகள்
இடம் பெற்ற நூல்
அ) புறநானூறு ஆ) குறுந்தொகை இ) நற்றிணை ஈ) கலித்தொகை
48. செல்வம்
பற்றி தமிழ் இலக்கியம் கூறுவது
அ) பெரும் பொருட்செல்வம் ஆ) அதிகமான கொடைகள்
இ) மன்னர்களின் ஆட்சி முறை ஈ) சிந்தையின் நிறைவு
49.நிறைவடைகிறவனே
செல்வன் எனக் கூறுவது
அ) பகவத் கீதை ஆ) தவோவியம் இ) குரான் ஈ) பைபிள்
50. பொய்யாச்
செந்நா, பொய்படுபறியா வயங்கு செந்நா – சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் இவ்வடிகள் எதனை
உணர்த்துகிறது?
அ) உழைப்பு ஆ) முயற்சி இ)
ஊக்கம் ஈ) வாய்மை
51. இன்பத்தின்
கதவை திறப்பதும் , துன்பத்தின் கதவை திறப்பதும் _______
அ) சாவி ஆ) நாக்கு இ) புத்தகங்கள் ஈ) அறிவு
52. மனிதன்
ஒருவன் தனியாகவும் சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும் அவரது பண்பு நலனை உருவாக்குவதற்கும்
உதவும் விதிமுறை
அ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் ஆ) சங்க இலக்கியங்கள் காட்டும் பாடல்
இ) சங்க இலக்கியங்கள் காட்டும் மேற்கோள் ஈ) சங்க இலக்கியங்களின் நயங்கள்
53. சரியான
முறையில் வரிசைப்படுத்துக.
அ) தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும்
அறம்
ஆ) சிந்தித்துக் அறிந்து கொள்ளும் அறம்
இ)
இயல்பாக அறியும் அறம்
அ) ஆ,இ,அ ஆ) இ,அ,ஆ இ)
ஆ,அ,இ ஈ) இ,ஆ,அ
54. தாம் சிந்திக்காமல்
பிறர் சொல்ல அறியும் அறம்
அ) முதல் தரமானது ஆ) இரண்டாம் தரமானது
இ) மூன்றாம் தரமானது ஈ) நான்காம் தரமானது
55. சிந்தித்து
அறிந்து கொள்ளும் அறம்
அ) முதல் தரமானது ஆ) இரண்டாம் தரமானது
இ) மூன்றாம் தரமானது ஈ) நான்காம் தரமானது
56. சங்க இலக்கியங்கள்
காட்டும் அறம்
அ) அறிய வைத்து அறம் செய்வது ஆ) சொல்லக் கேட்டு அறம் செய்வது
இ) கண்டும் காணாமல் இருப்பது ஈ) இயல்பானது தானே செய்வது
57. கி.பி.ஆறாம்
நூற்றாண்டு தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர்
அ) இமயவரம்பன் ஆ) போதி தர்மர் இ) சேரலாதன் ஈ) நெடுமாறன்
58. பெளத்த
சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவு
அ) சீன தத்துவம் ஆ) ஜப்பானிய தத்துவம் இ)
ஜென் தத்துவம் ஈ) மலேய தத்துவம்
59. குற்றம்
பார்க்கின் சுற்றம் இல்லை – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
அ) ஆத்திசூடி ஆ)
பாரதியார் கவிதைகள்
இ) பாரதிதாசன் கவிதைகள் ஈ) கொன்றை
வேந்தன்
60. கிழமை
பட வாழ் – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
அ) ஆத்திசூடி ஆ)
பாரதியார் கவிதைகள்
இ) பாரதிதாசன் கவிதைகள் ஈ) கொன்றை
வேந்தன்
