📚 TET 2026 - தமிழ் - 10TH-STD-இயல்-6-புறப்பொருள் இலக்கணம்..-வினாக்கள்

  

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026
தமிழ்
பத்தாம் வகுப்பு தரம்.
(Tnpsc, Tet, Trb, Ttse(11th), and All Compulsary Tamil Competative Exams - Purpose )
வினாக்களும், விடைகளும்
இணையவழித் தேர்வு வினாக்கள்
இயல் - 6 

இயல் – 6

புறப்பொருள் - இலக்கணம்….

1. அறம், பொருள், வீடு, கல்வி, வீரம், கொடை, புகழ் போன்றவை

        அ) அகவொழுக்கம்  ஆ) புறவொழுக்கம் இ) நல்லொழுக்கம்   ஈ) தீயொழுக்கம்

2. புறப்பாடல்கள் என்பது…..

        அ) அகவொழுக்கங்களைப் பாடுவது       ஆ) நல்லொழுக்கத்தைப் பாடுவது

        இ) தீயொழுக்கத்தைப் பாடுவது               ஈ) புறவொழுக்கத்தைப் பாடுவது

3. புறத்திணைகள் மொத்தத்தைத் தமிழெண்ணில் காண்க.

        அ) கரு          ஆ) ருஅ      இ) கஉ        ஈ) எஅ

4. வேறுபட்ட ஒன்றைத் தேர்க.

        அ) வெட்சி     ஆ) கரந்தை           இ) வஞ்சி               ஈ) குறிஞ்சி

5. புறத்திணைகளில் பொருத்தும் திணையைத் தேர்க.

        அ) குறிஞ்சி             ஆ) தும்பை            இ) முல்லை          ஈ) நெய்தல்

6. அரசர் எதிரி நாட்டின் ஆநிரைகளைக் கவர்ந்து வருவது

        அ) வெட்சி              ஆ) கரந்தை           இ) நொச்சி             ஈ) உழிஞை

7. “ ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

        அ) ஆடு         ஆ) பறவை                      இ) பசு                              ஈ) குதிரை

8. ஆநிரை என்பது

        அ) ஆடுகளின் கூட்டம்      ஆ) பறவைகளின் கூட்டம்

        இ) பசுக்களின் கூட்டம்      ஈ) குதிரைகளின் கூட்டம்

9. கவர்தல் என்பது

        அ) அள்ளி வருவது            ஆ) சொல்லித் தருவது    

        இ) இழுத்து வருவது          ஈ) மறைப்பது

 10. வெட்சி திணைக்குரிய பூ

        அ) கொட்டைக் கரந்தை    ஆ) இட்டலிப் பூ     இ)  வஞ்சிப்பூ         ஈ) வாகை

11. வெட்சிப் பூ வின் நிறம்

        அ) சிவப்பு      ஆ) நீலம்      இ) வெள்ளை         ஈ) மஞ்சள்

12. அழகுச்செடியாக வீட்டுத் தோட்டங்களிலும், பூங்காக்களிலும் வளர்க்கப்படுவது

        அ) கரந்தை              ஆ) காஞ்சி             இ) வெட்சி            ஈ) வாகை

13. வெட்சியின் எதிர் திணை

        அ) வஞ்சி       ஆ) கரந்தை           இ) காஞ்சி              ஈ) நொச்சி

14. கவர்ந்து செல்லப்பட்ட தம் நாட்டுப் பசுக்கூட்டங்களை மீட்பது

        அ) வஞ்சி       ஆ) கரந்தை           இ) காஞ்சி              ஈ) நொச்சி

15. தம் நாட்டு ஆநிரைகளை மீட்டு வர வீரர்கள் சூடும் பூ

        அ) வஞ்சி       அ) வாகை             இ) காஞ்சி              ஈ) கரந்தை

16. சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கும் ஒரு சிறிய செடி வகையைச் சேர்ந்தது

        அ) வஞ்சி       அ) வாகை             இ) கரந்தை          ஈ) காஞ்சி

17. கரந்தை பூக்களின் தன்மை

        அ) முட்டை வடிவம்           ஆ) நறுமணம்        இ) நீலம்,இளஞ்சிவப்பு  ஈ) அனைத்தும்

18. வஞ்சித்திணைக்கு பொருந்தக் கூடியது

        அ) ஆநிரை கவர்தல்          ஆ) மண்ணாசை   இ) பெண்ணாசை     ஈ) புகழ்ச்சி

19. வஞ்சிப் பூவை சூடுவதன் காரணம்

        அ) பசுக்களை மீட்க                               ஆ) பசுக்களை கவர        

        இ) நாட்டை கைப்பற்ற                           ஈ) நாட்டை மீட்க

20. மண்ணாசைக் காரணமாக நாட்டைக் கைபற்ற வீரரகள் சூடும் பூ

        அ) வெட்சிப்பூ          ஆ) கரந்தைப் பூ     இ) காஞ்சிபூ           ஈ) வஞ்சிப்பூ

21. போர் தொடுக்க வந்த மாற்றரசருடன் எதிர்த்துப் போரிவது

        அ) காஞ்சி     ஆ) வெட்சி            இ) நொச்சி             ஈ) கரந்தை

22. காஞ்சிப்பூவைச் சூடிக்கொள்ளும் வீரர்கள் பற்றிக் கூறும் திணை

        அ) காஞ்சி     ஆ) வெட்சி            இ) நொச்சி             ஈ) கரந்தை

23. காஞ்சிப் பூ என்பது எதிலிருந்து பூக்கிறது?

        அ) செடி        ஆ) கொடி              இ) குறுமரம்           ஈ) புல்வகை

24. பொருத்துக.

        அ) வெட்சி     -        1) கொட்டைக் கரந்தை

        ஆ) கரந்தை   -        2) இட்டலிப்பூ

        இ) வஞ்சி       -        3) குறுமரப் பூ

        ஈ) காஞ்சி       -        4) பஞ்சுப் பூ

        அ) 2,1,4,3     ஆ) 4,3,1,2    இ) 3,1,2,4     ஈ) 2,3,4,1

25. பொருத்துக.

        அ) வெட்சி     -        1) ஆநிரை மீட்டல்

        ஆ) கரந்தை   -        2) எதிர்த்துப் போரிடல்

        இ) வஞ்சி       -        3) ஆநிரை கவர்தல்

        ஈ) காஞ்சி       -        4) மண்ணாசைக் காரணமாகப் போரிடல்

        அ) 2,1,4,3      ஆ) 4,3,1,2    இ) 3,1,4,2    ஈ) 2,3,4,1

26. பளபளப்பான, மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர்கள் அடர்ந்துள்ள பூ

        அ) வஞ்சி                  ஆ) காஞ்சி             இ) இட்டலிப்பூ       ஈ) நொச்சி

27. கொத்து கொத்தாகப் பூக்கும், அதிக மணமுள்ள காஞ்சிப் பூவின் நிறம்

      அ) இளஞ்சிவப்பு          ஆ) நீலநிறம்          இ) மஞ்சள்             ஈ) பச்சை

28. மதில் என்பது

      அ) மாளிகை                ஆ) நீர்நிலை          இ) கோட்டை         ஈ) போர்க்களம்

29. மதிலைக் காத்தல் திணை

      அ) வஞ்சி           ஆ) நொச்சி           இ) உழிஞை          ஈ) தும்பை

30. பகையரசனால் முற்றுகையிடப்பட்ட மதிலைக் காக்க வேண்டி வீரர்கள் சூடியிருக்கும் பூ

      அ) வெட்சி         ஆ) கரந்தை           இ) வஞ்சி               ஈ) நொச்சி

31. நொச்சிப் பூக்குரிய நிலம்

      அ) குறிஞ்சி       ஆ) முல்லை          இ) மருதம்             ஈ) நெய்தல்

32 .நொச்சிப்பூ பூக்கம் தன்மை

      அ) தனித்தனியாக                            ஆ) கொத்துக் கொத்தாக          

      இ) அளவில் பெரியதாக                    ஈ) மிகவும் சிறியதாக

33. மதிலை முற்றுகையிடும் திணை

      அ) வஞ்சி           ஆ) நொச்சி            இ) உழிஞை          ஈ) தும்பை

34. நொச்சியின் எதிர் திணை

        அ) வஞ்சி                 ஆ) வாகை             இ) பாடாண்            ஈ) உழிஞை

35. உழிஞைப் பூவின் நிறம்

        அ) சிவப்பு       ஆ) மஞ்சள்           இ) நீலம்       ஈ) வெண்மை

36. பகைநாட்டு அரசரின் கோட்டையைக் கைப்பற்றும் பொருட்டு மதிலின் நாற்புறமும் சுற்றி வளைக்கும் திணை

        அ) வஞ்சி                 ஆ) நொச்சி            இ) உழிஞை          ஈ) தும்பை

37. வேலிகளில் ஏறிப் படரும் நீண்ட கொடியுடையது

        அ) வெட்சி               ஆ) காஞ்சி             இ) நொச்சி             ஈ) உழிஞை

38. உழிஞைப் பூவும் இலைகளும் கொண்ட தன்மை

        அ) பூ,கூட்டிலை – பெரியது                    ஆ) பூ, கூட்டிலை – சிறியது

        இ) பூ பெரியது – இலை- கூட்டிலை      ஈ) பூ சிறியது, இலை – பெரிய கூட்டிலை

39. உழிஞைக் கொடி இன்று அழைக்கப்படும் விதம்

        அ) பிரண்டை           ஆ) முடக்கொற்றான்       இ) பெரியாநங்கை  ஈ) சிறியாநங்கை

40. வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு போரிடும் திணை

        அ) நொச்சி     ஆ) உழிஞை         இ) தும்பை             ஈ) வாகை

41. எல்லா இடங்களிலும் மலரும் தன்மைக் கொண்டப் பூ

        அ) இட்டலிப் பூ        ஆ) கரந்தைப் பூ     இ) தும்பைப் பூ       ஈ) வஞ்சிப்பூ

42. தும்பைப் பூவின் நிறம்

        அ) மஞ்சள்     ஆ) சிவப்பு    இ) நீலம்       ஈ) வெண்மை

43. வலிமையை நிலைநாட்ட நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற அரசர் சூடும் பூ

         அ) வாகைப் பூ         ஆ) கரந்தைப் பூ     இ) தும்பைப் பூ        ஈ) வஞ்சிப்பூ

44. மங்கிய வெண்ணிறம் கொண்டு கொத்து கொத்தாகப் பூக்கும் பூ

        அ) வாகைப் பூ                    ஆ) கரந்தைப் பூ     இ) தும்பைப் பூ        ஈ) வஞ்சிப்பூ

45. பொருத்துக.

       அ) நொச்சி     -        1) மதிலைச் சுற்றி வளைத்தல்

        ஆ) உழிஞை -        2) மதில் காத்தல்

        இ) தும்பை      -        3) வெற்றி பெற்ற அரசன்

        ஈ) வாகை       -        4) வலிமையை நிலைநாட்டல்

        அ) 2,1,3,4     ஆ) 4,3,1,2    இ) 3,1,4,2     ஈ) 2,3,4,1

46. பொருத்துக.

       அ) நொச்சி     -        1) முடக்கொற்றான்

        ஆ) உழிஞை -        2) மங்கிய நிற வாகை

        இ) தும்பை      -        3) மணி நொச்சி

        ஈ) வாகை       -        4) வெண்ணிற தும்பை

        அ) 2,1,3,4      ஆ) 4,3,1,2    இ) 3,1,4,2    ஈ) 2,3,4,1

47. தும்பைக்கு எதிர் திணையாக கருதப்படும் திணை

        அ) வாகை     ஆ) கரந்தை           இ) நொச்சி             ஈ) வஞ்சி

48. அரசரின், கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை பாடும் திணை

        அ) வாகை      ஆ) கரந்தை           இ) பாடாண்           ஈ) வஞ்சி

49. பாடாண் திணை – என்பதன் சரியான பிரிப்பு முறை

        அ) பா + ஆண் + திணை               ஆ) பாடு + ஆண் + திணை       

        இ) பா+டாண் + திணை                 ஈ) பாடும் + ஆண் + திணை

50. புறத்திணைகளில் கூறப்படாத செய்திகளையும், பொதுவான செய்திகளையும் கூறுவது

        அ) பாடாண்    ஆ) கைக்கிளை     இ) பொதுவியல்     ஈ) பெருந்திணை

51. கைக்கிளை என்பது

        அ) ஒருதலைக் காமம்        ஆ) பொருந்தும் காமம்     

        இ) பொருந்தாக் காமம்        ஈ) இரு தலைக் காமம்

52. கைக்கிளையின் கூற்றுகள் _______ வகைப்படும்

        அ) மூன்று               ஆ) நான்கு             இ) இரண்டு           ஈ) ஐந்து

53. பெருந்திணை என்பது

        அ) ஒருதலைக் காமம்        ஆ) பொருந்தும் காமம்     

        இ) பொருந்தாக் காமம்        ஈ) இரு தலைக் காமம்

54. பெருந்திணையின் கூற்றுகள்

        அ) ஆண்பால் கூற்று, தோழி கூற்று       ஆ) பெண்பால் கூற்று, செவிலியர் கூற்று

        இ) ஆண்பால் கூற்று, செவிலித்தாய் கூற்று     ஈ) ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று

55. எதிர் எதிர் திணைகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்க.

        அ) வெட்சி x கரந்தை                   ஆ) வஞ்சி x காஞ்சி                  

        இ) பொதுவியல் x கைக்கிளை    ஈ) நொச்சி x உழிஞை

56. பசுக்களுக்குத் துன்பம் தராத திணை

        அ) வெட்சி    ஆ) உழிஞை         இ) கரந்தை            ஈ) நொச்சி

57. புறத்திணைகளில் இடம் பெறாத பூவைத் தேர்க

        அ) இட்டலிப்பூ         ஆ) வாகைப்பூ        இ) முருங்கைப்பூ             ஈ) முடக்கொற்றான்

58. புறத்திணைகளில் மரத்திலிருந்து கிடைக்கும் பூ

        அ) கரந்தை              ஆ) வஞ்சி              இ) காஞ்சி              ஈ) உழிஞை

59. புறத்திணைகள் காட்டும் போர்களக் காட்சியின் மூலம் வெளிபடுவது

        அ) ஆசை                ஆ) அழிவு             இ) கஷ்டம்             ஈ) மனித நேயம்

60. நாட்டை கைப்பற்றுவதற்காக காஞ்சிப்பூவை சூட காரணமாக இருப்பது

        அ) மண்ணாசை      ஆ) பெண்ணாசை இ) மதில் காத்தல்  ஈ) மதில் வளைத்தல்

61. எத்திணைகளில் இருநாட்டு அரசர்களும் வலிமையை நிலைநாட்ட போரிட காரணமாகிறது.?

          அ) கைக்கிளை      ஆ) பெருந்திணை    இ) தும்பை          ஈ) கரந்தை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post