பனிரெண்டாம்
வகுப்பு
மாதிரி
திருப்புதல் மற்றும் பொதுத் தேர்வு-2- 2026
மொழிப்பாடம்
– தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 90
அறிவுரைகள்
:
1) அனைத்து
வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில்
குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2)
நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்
பயன்படுத்தவும்.
குறிப்பு : I ) இவ்வினாத்தாள்
ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்
வேண்டும்.
( மதிப்பெண்கள் : 14 )
i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்
தேர்ந்தெடுத்துக்
குறியீட்டுடன்
விடையினையும் சேர்த்து எழுதவும்.
பகுதி-அ
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
(14X1=14)
1. ‘செம்பரிதி’ எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள
கவிதைத் தொகுப்பு______
அ) சர்ப்பயாகம் ஆ) சூரியநிழல் இ) ஒளிப்பறவை ஈ) நிலவுப்பூ
2. பிழையான தொடரைக் கண்டறிக____
அ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
ஈ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
3. கோடை மழை என்ற சிறுகதை ஆசிரியர் ____
அ) செல்வராஜ் ஆ) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
இ) சாந்தா தத் ஈ) பூமணி
4. (பொய்யா வானம்) புதுப்பெயல் பொழிந்தன- அடிக்கோடிட்ட
சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க ____
அ) உரிச்சொல் தொடர் ஆ) ஈறுகட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) வினைத்தொகை ஈ) இடைச்சொல் தொடர்
5. கடலின் பெரியது______
அ) தினையளவு செய்த உதவி ஆ) உற்ற காலத்தில் செய்த உதவி
இ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி ஈ) கடலை விட செய்த உதவி
6. “மனையுறை மகளிர் ஆடவர் உயிரே” என்று கூறும் சங்க
கால நூல்____
அ) குறுந்தொகை ஆ) பதிற்றுப்பத்து இ) கலித்தொகை ஈ) அகநானூறு
7. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது_____
அ) தமிழ்நாடு ஆ) சென்னை இ) வேலூர் ஈ) கன்னியாகுமரி
8. நன்னூலுக்கு உரை எழுதியவர்—--
அ) மயிலை நாதர் ஆ) இளங்கோவடிகள் இ) திருவள்ளுவர் ஈ) பாரதிதாசன்
9. “பிறனில் விழைவோர் கிளையொடுங்க கெடுப” என்பது எவ்வகை
பாவிகம்—---
அ) சீவக சிந்தாமணி ஆ) சிலப்பதிகாரம் இ) கம்பராமாயணம் ஈ) தண்டியலங்காரம்
10. திரைப்படத்தில் கதை சொல்லலாம் என்பதை முதன் முதலில்
நிகழ்த்திக் காட்டியவர்_____
அ) ஜார்ஜ் மிலி ஆ) சாமிக்கண்ணு வின்சென்ட்
இ) தாமஸ் ஆல்வா எடிசன் ஈ) லூமியர்
சகோதரர்கள்
11. பண்புக்குறியீடுகளைக் கதை மாந்தர்களோடு பொருத்துக___
அ) அறம் - 1)கர்ணன்
ஆ) வலிமை -2)
மனுநீதிச்சோழன்
இ) நீதி -3) பீமன்
ஈ) வள்ளல் -
4)தருமன்
அ)2,4,3,1 ஆ)3,2,1,4 இ)4,3,2,1 ஈ)4,3,1,2
12. ‘கிறித்துவக் கம்பர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?_____
அ) வேதநாயகர் ஆ) கால்டுவெல் இ) எச்.ஏ. கிருட்டினனார் ஈ) ஜி. யு. போப்
13. வடசென்னைப் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படும்—---
அ) மெட்ராஸ் ஆ) மதராசப்பட்டினம் இ) சென்னைப்பட்டினம் ஈ) தமிழ்நாடு
14. “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சுினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே* என்னும் பாரதியின் பாடல்
வெளிப்படுத்துவது ____
அ) தந்தைவழிச் சமூகமுறை ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூகமுறை ஈ) தனிக்குடும்ப முறை
பகுதி-ஆ/பிரிவு-1
எவையேனும் மூன்று வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்கவும். 3x2=6
15. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
16. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு
உருவப்படுத்துகிறார்?
17. மருத்துவத்தில் மருந்துடன் அன்பு நம்பிக்கையும்
ஆற்றும் பாங்கினை எழுதுக.
18. தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாகப்
புறநானூறு கூறுகிறது?
பிரிவு-2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்கவும். (2x2=4)
19. பருவத்தை பயிர் செய்_ நேர மேலாண்மையோடு பொருத்தி
எழுதுக.
20. புக்கில், தன்மனை- சிறு குறிப்பு எழுதுக.
21. ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ நூல் பற்றி குறிப்பு
வரைக?
பிரிவு-3
எவையேனும் ஏழு வினாக்களுக்கும்
மட்டும் விடையளிக்கவும். (7x2=14)
22. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம்- இவ்விரு
சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்க?
23. பகுபத உறுப்பிலக்கணம் (ஏதேனும் ஒன்று தருக.)
கலங்கி (அல்லது) தந்தனன்
24. புணர்ச்சி விதி தருக. (ஏதேனும் ஒன்றனுக்கு)
இனநிரை (அல்லது)பெருந்தேர்
25. கீழ்க்காணும் சொல்லுருப்புகளைப் பிரித்தும் சேர்த்தும்
இருவேறு தொடர்களை அமைக்க.
அ) முன் ஆ) கொண்டு
26. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
அ) வெங்காயம் ஆ) தலைமை
27. உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்?
28. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
அ)புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது.
ஆ)அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான
29. பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க.
அ) கான்- காண் ஆ) கலம்- களம்
30.கலைச்சொல் தருக.
அ) Multiplex complex ஆ)
Customers officer
பகுதி-இ/பிரிவு-1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடை யளிக்கவும். 2x4=8
31. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு
வேண்டுமெனக் கேட்கிறார்?
32. “வருபவர் எவராயினும்
நன்றி
செலுத்து”_ இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக
33. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது?- குறள் வழி
விளக்குக.
34. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத்
தேடினர்?
பிரிவு-2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்கவும். 2x4=8
35. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து
இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
36. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய
கூட்டுக் குடும்பம்- விளக்கம் எழுதுக
37. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில்
குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
38. மணலில் எழுதிய முதல் தற்காலம் வரை எழுதும் முறைகள்
ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
(பிரிவு -இ)
எவையேனும் மூன்று வினாக்களுக்கு
மட்டும் விடை யளிக்கவும். 3x4=12
39.அ) தொழிலுவமைணி விளக்குக. (அல்லது)
ஆ) பொருள் வேற்றுமை அணியை விளக்குக.
40.அ) உங்கள் கனவு ஆசிரியர் குறித்துக் கட்டுரை எழுதுக. (அல்லது)
ஆ) மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் எழுதுக.
41. நயம் பாராட்டுக.(மையக்கருத்தை கருத்தை எழுதி ஏதேனும்
மூன்று நயங்களை விளக்குக.
பூமிச்சருகாம்
பாலையை
முத்து
பூத்த கடல்களாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே- கோடிப்
புதிய தென்றலாக்குவேன்
இரவில் விண்மீன் காசினை- செலுத்தி
இரவலரோடு பேசுவேன்!
இரவெரிக்கும் பரிதியை- ஏழை
விறகெரிக்க வீசுவேன் - நா.காமராசன்
42. கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து நாளிதழ்ச்
செய்தியாக மாற்றுக. (பக்க எண்:150)
43. பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி
எழுதுக.
அ) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை (அல்லது) ஆ) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
(பகுதி-ஈ)
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்கவும்.
3x6=18
44.அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற
உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக. (அல்லது)
ஆ) அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின் வழி விளக்கி
எழுதுக.
45.அ) பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே
நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக. (அல்லது)
ஆ) நீங்கள் வியந்து பார்த்த ஒரு நகரம் குறித்து இருபக்க
அளவில் கட்டுரை எழுதுக.
46.அ) ‘கோடைமழை’ கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேயப்
பண்புகளை விளக்குக. (அல்லது)
ஆ) ‘உரிமைத்தாகம்’ கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப்
புலப்படுத்துக.
பகுதி-உ
அனைத்து வினாக்களுக்கு விடையளிக்கவும்
.(4+2=6)
47.அ) “பாதகர்” எனத் தொடங்கும் பாடலை பாவகையுடன் எழுதுக.
ஆ) “செயல்” என முடியும் குறளை எழுதுக.
முதல் மதிப்பெண் 100/100 பெற்று வெற்றி
பெற வாழ்த்துகள்!
வினாத்தாள் உருவாக்கம்.
P.முத்துக்குமார் – முதுகலை
ஆசிரியர்
இளந்தமிழ் – முதுகலை ஆசிரியர்
குழு
