“+2 Tamil Public Exam 2026 – Model Questions - 2 (New Syllabus )”

 

பனிரெண்டாம் வகுப்பு

மாதிரி திருப்புதல் மற்றும் பொதுத் தேர்வு-2- 2026

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                         மதிப்பெண் : 90

அறிவுரைகள் :

1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்  உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்    

பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

              ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்

                வேண்டும்.

 ( மதிப்பெண்கள் : 14 )             

           i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக்

   குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

பகுதி-அ

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                                                          (14X1=14)

1. ஆராய்ந்து சொல்கிறவர்______

அ) உறவினர்             ஆ) தூதுவர்    இ) சொல்லியபடி செய்பவர்               ஈ) அரசர்

2. “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்” இத்தொடர் உணர்த்தும் பண்பு____

அ) தயக்கப் பண்பு      ஆ) நேர்மறைப் பண்பு            இ) முரண்பண்பு   ஈ) இவை அனைத்தும்

3. “சூரியனை பிரசவிக்கும் பாறை” எந்த சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது____

அ) வேர்களின் மூச்சு   ஆ) வேர்களின் பேச்சு  இ) திறனின் மூச்சு  ஈ)  கண்ணின் பேச்சு

4. சோழநாட்டில் இறக்குமதி பொருளுக்குச் சுங்கம் வசூலித்த செய்தியைக் கூறும் நூல் ____

அ)  நெடுநல்வாடை  ஆ) மலைபடுகடாம்  இ) பதிற்றுப்பத்து   ஈ) பட்டினப்பாலை

5. தி கிரேட் டிக்கேட்டர் படம் வெளியான ஆண்டு______

அ)  1740  ஆ) 1840  இ) 1640     ஈ) 1940

6. ஓட்டு போடாத

    ஆகாயம் போல- இந்த

    உலகமும் ஒன்றேதான்…- இக்கவிதையில் பயின்று வருவது____

 அ) இறைச்சி   ஆ)  உருவகம்    இ) உள்ளுறை              ஈ) உவமை

7. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க._____

அ)  மாவிலைக்கரி     ஆ) கடுக்காய்  இ) வசம்பு        ஈ)  மணத்தக்காளியிலைச் சாறு

8. ‘உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!’ என்றார் போலும்—--

அ) உத்தமச்சோழன்  ஆ) முகம்மது மீரான்  இ) பாரதிதாசன்          ஈ) பாரதியார்

9. ‘குடும்பம்’ என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ள நூல் —---

அ)  புறநானூறு           ஆ) குறுந்தொகை     இ) தொல்காப்பியம்    ஈ) திருக்குறள்

10. மகரயாழ் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்க_____

அ) 21              ஆ)14              இ) 7                ஈ)  19

11. தமிழில் திணை பாகுபாடு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது___

அ) எழுத்துக்குறிப்பு ஆ) தொடர்க்குறிப்பு இ) பொருட்குறிப்பு     ஈ) சொற்குறிப்பு

12. உயிர்மெய்குறில் மற்றும் உயிர்மெய் நெடிலைத் தேர்ந்தெடுக்க_____

அ)90,216       ஆ) 216,126               இ)90,126        ஈ) 247,126

13. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளை பாடியவர்—---

அ)  மாணிக்கவாசகர்  ஆ) சுந்தரர்   இ) திருநாவுக்கரசர்    ஈ) திருஞானசம்பந்தர்

14. பூட்டிய வீட்டிலும் பூத்துச் சிரிக்கிறது____

அ) மழை        ஆ) காடு          இ) முல்லை                ஈ) புயல்

பகுதி-ஆ / பிரிவு-1

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                         3x2=6

15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

16. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக?

17. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?

18. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் யாவை?

பிரிவு-2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                       (2x2=4)

19. அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை?

20. பின்னணி இசை, படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.

21. திரையில் முதல் வரிசை என்றால் என்ன?

பிரிவு-3

எவையேனும் ஏழு வினாக்களுக்கும் மட்டும் விடையளிக்கவும்.                                           (7x2=14)

22. காப்பியத்தை குறிக்கும் பிற பெயர்கள் யாவை?

23. பகுபத உறுப்பிலக்கணம் (ஏதேனும் ஒன்று தருக.)

 வைத்து (அல்லது)பொலிந்தான்

24. புணர்ச்சி விதி தருக. (ஏதேனும் ஒன்றனுக்கு)  அருங்கானம் (அல்லது) வானமெல்லாம்

25. உவமை தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக

அ) கிணற்றுத்தவளைபோல

ஆ) அச்சாணி இல்லாத தேர் போல

26. கீழ்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக.

அ) விண்மீன், ஒளிர், எரி, விழு

27. திருவளர்ச்செல்வன் திருவளர்ச்செல்வன்- இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?

28. வல்லினமெய்களை எட்டும் நீக்கி எழுதுக

அ)  ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு அறியாமையினை அகற்றி பல நல்லவனற்றை கற்று கொடுக்கும்.

29. தொடரில் உள்ள  பிழைகளை நீக்கி எழுதுக.

 அ) எங்கள் ஊரில் நூலக கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது

ஆ) நம் மானிலம் பாதிக்கப்பட்டது, வரட்சியால் பாதிக்கப்பட்டது

30.கலைச்சொல் தருக.         அ)vice chancellor                     ஆ)Habitat

பகுதி-இ / பிரிவு-1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை யளிக்கவும்.                                        2x4=8

31. “ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்”- இடஞ்சூட்டி பொருள் விளக்குக.

32. அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை?

33. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.

34. ஒருமுக எழினி,பொருமுக எழினி, கரந்துவரல் எழினி விளக்குக.

பிரிவு-2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை யளிக்கவும்.                                        2x4=8

35. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.

36. திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக?

37. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.

38. நல்ல திரைப்படம் பற்றி எழுதுக?     

                 (பிரிவு -இ)

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை யளிக்கவும்.                                         3x4=12

39.அ) நிரல்நிறை அணியை விளக்குக   (அல்லது)

    ஆ) சொற்பொருள் பின்வருநிலையணி விளக்குக.

40. அ) வாகைத்திணையை விளக்குக.   (அல்லது)

ஆ) பொருண்மொழிக்காஞ்சித் துறையை விளக்குக.

            

41. நயம் பாராட்டுக.(மையக்கருத்தை கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை விளக்குக.)

 பிறப்பினால் எவர்க்கும்- உலகில்

      பெருமை வராதப்பா!

சிறப்பு வேண்டுமெனில்- நல்ல

    செய்கை வேண்டுமப்பா!

நன்மை செய்பவரே- உலகம்

   நாடும் மேற்குலத்தார்

திண்மை செய்பவரே- அண்டித்

    தீண்ட ஒண்ணாதார்!                             -  கவிமணி தேசிய விநாயகம்

42. எண்ணங்களை எழுத்தாக்குக. (பக்க எண்:150)

43. பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.

அ) ஆனைக்கும் அடி சறுக்கும்.       (அல்லது)    ஆ) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

(பகுதி-ஈ)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                                    3x6=18

44.அ) தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.                                (அல்லது)

ஆ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.

45.அ) மயிலை சீனி வேங்கடசாமி ஒரு ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக.

                    (அல்லது)

ஆ) திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் கருத்தைக் கட்டுரையாக்குக.

46.அ) நடிகர் திலகத்தைக் கண்ட பாலச்சந்திரனின் நினைவலைகளை நயத்துடன் புலப்படுத்துக.(அல்லது)

ஆ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று சமூகம் பற்றி ஆகியவற்றை விவரிக்க?

பகுதி-உ

அனைத்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.                                                                      (4+2=6)

47.அ) “குழல்வழி” எனத் தொடங்கும் பாடலை பாவகையுடன் எழுதுக.

     ஆ) “படும்” என முடியும் குறளை எழுதுக.

முதல் மதிப்பெண் 100/100  பெற்று வெற்றி பெற வாழ்த்துகள்!

 

வினாத்தாள் உருவாக்கம்.

P.முத்துக்குமார் – முதுகலை ஆசிரியர்

இளந்தமிழ் – முதுகலை ஆசிரியர் குழு

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post