10th Standard Tamil Daily Special Question Paper | Exam Ready Practice-3-PDF

 



WWW.TAMILVITHAI.COM                           WWW.KALVIVITHAIGAL.COM

பத்தாம் வகுப்பு

தமிழ்

தினசரி சிறப்பு வினாத்தாள்-3-2025

நேரம் : 40 நிமிடம்                                                                                                             மதிப்பெண்:20

பகுதி-அ

அ) உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                                                     (10x1=10)

1. உயிரின வாழ்வின் அடிப்படை______

அ) காற்று  ஆ) தென்றல்  இ) புயல்   ஈ) இயற்கை

2. “மேகசந்தேசம்” என்ற காவிய நூலின் ஆசிரியர்—------

அ) பாரதியார்   ஆ) பாரதிதாசன்   இ) கண்ணதாசன்   ஈ) காளிதாசன்

3. ‘மகிழுந்து வருமா’? என்பது_

அ) வினையெச்சத்தொடர் ஆ) பெயரெச்சத்தொடர் இ) எழுவாய்த்தொடர்  ஈ) விளித்தொடர்

4. “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை இந்தியில் மொழிபெயர்த்த ஆண்டு____

அ)1942  ஆ)1932  இ)1949   ஈ)1939

5. “மதுரை பதிற்றுப்பத்தந்தாதி” என்ற நூலை எழுதியவர்______

அ) பரஞ்சோதி முனிவர்  ஆ) கண்ணதாசன்   இ) கீரந்தையார்   ஈ) பெருஞ்சித்திரனார்

6. காலில் அணியும் அணிகலன்களைக் குறிப்பது______

அ) குழை  ஆ) கிண்கிணி  இ) சூழி  ஈ) சுட்டி

7. விருந்தினரைப்  போற்றுதல்_______கடமையாக இருந்தது.

அ) இல்லறம்  ஆ) துறவறம்  இ) விருந்தினர்   ஈ) விருந்தோம்பல்

8. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்கிறார்_______

அ) மு.கு ஜகந்நாதர் ஆ) மணவை முஸ்தபா  இ) ஷேக்ஸ்பியர்   ஈ) பாரதியார்

9. தொடரின் இறுதியில் இடம் பெற வேண்டிய வினைமுற்று தொடரின் முதலில் அமைந்து பெயரைக் கொண்டு முடிவது_____ தொடர் ஆகும்.

அ) வினையெச்சத்தொடர்                            ஆ) பெயரெச்சத்தொடர்

இ) வினைமுற்றுத்தொடர்                            ஈ) வேற்றுமைத்தொடர்

10.*பேறு” என்பது எவ்வகைத் தொழிற்பெயர்_____

அ) தொழிற்பெயர்                                                      ஆ) முதனிலை தொழிற்பெயர்

இ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்                      ஈ) விகுதி பெற்ற தொழிற்பெயர்

11. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல”பாடல் வரி இடம்பெற்ற நூல்______

அ) கம்பராமாயணம்   ஆ) கலிங்கத்துப்பரணி          இ) குறுந்தொகை   ஈ) புறநானூறு

12. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது___

அ) உரிச்சொல்   ஆ) வேற்றுமை உருபு    இ) எழுவாய்     ஈ)உவமை உருபு

13. “பலர்புகு வாயில் அடைப்புக் கடவுநர்

 வாரீர் உளீரோ” என்று விருந்தோம்பலை பற்றி கூறும் சங்ககால நூல்_____

அ) புறநானூறு            ஆ) அகநானூறு         இ) நற்றிணை   ஈ) குறுந்தொகை

14. கொளுத்தும் வெயிலில் சட்டென தணிந்தது; வானம் இருண்டது; வாடைக்காற்று வீசியது.______

அ) மொட்டின் வருகை        ஆ) வனத்தின் நடனம்          இ) காற்றின் பாடல்   ஈ) நீரின் சிலிர்ப்பு

15. “கேள்வியானன்” இலக்கணக் குறிப்புத் தேர்க.

அ) எண்ணும்மை      ஆ) வினையெச்சம்   இ) தொழிற்பெயர்   ஈ) வினையாலணையும் பெயர்

பிரிவு-2

பகுதி-ஆ

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                                        (3+2=5)

16.அ) “விருந்தினனாக” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக     (அல்லது)

ஆ) “மாற்றம் எனத் தொடங்கி அட்சய பாத்திரம்! வரை  பாடலை அடிபிறழாமல் எழுதுக.

17. “தறிவு” என முடியும் குறளை எழுதுக.

பிரிவு-3

                                                                        பகுதி- இ                                                            (1X5=5)

18. வெங்கடேசனின் மகள் சுபாஷினி, 2/504, ஆலமரத்துக்காடு, எருமாபாளையம், சேலம் என்ற முகவரி சான்றுடன் சேலம் மைய நூலகத்தில் உறுப்பினராகச் சேர ரூ 300 உடன் செல்கிறார். தேர்வர் தம்மை சுபாஷினியாக நினைத்து உரிய படிவம் நிரப்புக.

 CLICK TO GET PDF


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post