எட்டாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – மதிப்பீடு-2
நானே செய்வேன்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க (10 × 1 = 10)
1. ‘பரவை’ என்னும் சொல்லின் பொருள் கொண்ட தொடர் எது?
அ) நீர் நிறைந்த குளம் ஆ) கூடு கட்டும் மரம் இ) கடல் சூழ்ந்த உலகம் ஈ) நிலவு தோன்றும் வானம்
2. பின் வரும் கூற்று உணர்த்தும் மையக் கருத்து என்ன?
‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ - ஒளவையார்
அ) இயற்கை ஆ) செல்வம் இ) கல்வி ஈ) வீரம்
3. உரைப்பகுதியில் இடம்பெற வேண்டிய இணைப்புச் சொல் வரிசையைத் தெரிவு செய்க.
வானில் கருமேகங்கள் திரண்டன; மின்னல் பளிச் பளிச் என மின்னியது; ________ மழை இல்லை. இன்று எந்த அறிகுறியும் தோன்றவில்லை; எனினும் நன்றாக மழை பெய்தது; ____, சாலையில் தண்ணீர் தேங்கியது.
அ) ஆகையால், ஆயினும் ஆ) ஆனால், அதனால் இ) அதனால், ஆகையால் ஈ) ஏனெனில், ஆயினும்
4. கீழ்க்காணும் நிறுத்தற்குறி வரிசைக்கு ஏற்ற தொடர் எது? ? , .
அ) திருக்குறள் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று பிரிவாக உள்ளது.
ஆ) நான் இன்று அதிகம் பேசமாட்டேன் தெரியுமா? ஏனென்றால் என் தொண்டை வலிக்கிறது.
இ) ஒன்றுபட்டால் உணடு வாழ்வு என்பது ஒற்றுமையை உணர்த்துகிறது.
ஈ) கண்ணுக்கு அழகு செய்வது கண்ணோட்டமே என்று கூறியவர் யார்.
5. ‘கல்வி’ என்னும் தலைப்பிற்குப் பொருந்தும் மேற்கோள்கள் எவை?
அ) கடல் கடந்தும் பொருள் தேடு, கல்வியே அழியாச் செல்வம்
ஆ) கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, செல்வத்தின் பயனே ஈதல்
இ) செல்வத்தின் பயனே ஈதல், கடல் கடந்தும் பொருள் தேடு
ஈ) கல்வியே அழியாச் செல்வம், கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
6. மயங்கொலி பிழையற்ற தொடரைக் கண்டறிக.
அ) பேச்சு மொழிக்கு நாம் தந்த வறிவடிவமே எளுத்து மொழியாகும்
ஆ) பேச்சு மொழிக்கும் எளுத்து மொழிக்கும் சிள வேருபாடுகள் உல்லன.
இ) பேச்சு மொழியில் உனர்ச்சிக் கூருகல் அதிகமாக இருக்கும்
ஈ) எழுத்து மொழியில் காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்பச் சொற்கள் சிதைவதில்லை.
7. ‘அதனால்’ என்னும் இணைப்புச் சொல்லைப் பயன்படுத்த வேண்டிய தொடர்கள் எவை?
அ) அவள் சோகமாக இருந்தாள்; பூனை காணாமல் போய்விட்டது.
ஆ) அவன் வேகமாக ஓடினான். பந்தயத்தில் வெற்றி பெற முடியவில்லை.
இ) நீ அமைதியாக இரு; வெளியே போ.
ஈ) பாஷா நன்றாக குணமாகிவிட்டான். கலைவிழாவிற்கு வந்தான்.
8. படித்து விடை தருக.
ஓர் அறையில் இரண்டு தந்தையும் இரண்டு மகனும் இருக்கின்றனர். ஆனால் மொத்தம் மூன்று பேர் உள்ளனர். அவர்கள் யார்?
அ) அப்பா, பாட்டி, தாத்தா ஆ) மகன், தாத்தா, அம்மா இ) சித்தப்பா, மகன், சித்தி ஈ) தாத்தா, அப்பா, மகன்
9. உரைப்பகுதியைப் படித்து விடையளிக்க.
சிறிய விதை பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கும். அப்பொழுது அதன் நிழலில் அனைவரும் இளைப்பாற முடியும். அதுபோல நாம் செய்யும் சிறிய உதவி மற்றவர்களுக்கு மிகப்பெரிய பயனைத் தரும்.
உரைப்பகுதியில் ‘அதன்’ என்பது எதைக் குறிக்கிறது?
அ) விதை ஆ) உதவி இ) பயன் ஈ) ஆலமரம்
10. சூழலைப் படித்து விடை தருக.
மணி, வள்ளி, சுதன் ஆகியோரின் வீடுகள் அருகருகே உள்ளன... இவர்களில் யார் வீட்டிற்குச் சென்றால் நமக்கு உணவு கிடைக்கும்?
அ) சுதன் ஆ) மணி இ) வள்ளி ஈ) இவர்களில் யாருமில்லை.
விடையும் விளக்கமும்
| வி.எ | சரியான விடை | விளக்கம் |
|---|---|---|
| 1. | இ) கடல் சூழ்ந்த உலகம் | ‘பரவை’ என்பதன் பொருள் கடல் சூழ்ந்த உலகம் (பூமி) ஆகும். |
| 2. | இ) கல்வி | ஒளவையார் கூற்றில் கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| 3. | ஆ) ஆனால், அதனால் | “ஆனால்” — மழை இல்லாத காரணம், “அதனால்” — விளைவு கூறுகிறது. |
| 4. | ஆ) நான் இன்று அதிகம் பேசமாட்டேன் தெரியுமா? ஏனென்றால் என் தொண்டை வலிக்கிறது. | முதல் வாக்கியம் கேள்வி (?), அடுத்தது விளக்கம் (.) கொண்டு முடிகிறது. |
| 5. | ஈ) கல்வியே அழியாச் செல்வம், கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு | இரண்டும் கல்வியின் சிறப்பைக் காட்டும் மேற்கோள்கள். |
| 6. | ஈ) எழுத்து மொழியில் காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்பச் சொற்கள் சிதைவதில்லை. | மயங்கொலி (ஒலி/எழுத்து பிழை) இல்லாத சரியான தொடர் இது. |
| 7. | அ) அவள் சோகமாக இருந்தாள்; பூனை காணாமல் போய்விட்டது. | “பூனை காணாமல் போய்விட்டது; அதனால் அவள் சோகமாக இருந்தாள்.” — காரணம், விளைவு. |
| 8. | ஈ) தாத்தா, அப்பா, மகன் | தாத்தா – அப்பாவின் தந்தை, அப்பா – தந்தையும் மகனும், மகன் – குழந்தை. மொத்தம் 3 பேர். |
| 9. | ஈ) ஆலமரம் | “அதன் நிழலில்” என வந்ததால் அது ஆலமரத்தைக் குறிக்கிறது. |
| 10. | ஆ) மணி | மணி “கடையில் உணவு வாங்கி வந்தார்”; எனவே அவரிடம் உணவு உள்ளது. |
