8TH-TAMIL-THIRAN-CLO-6-ENAIPPUSOL

 


எட்டாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025

வகுப்புநிலைத் திறன்கள் – திறன் - 6 | இணைப்புச்சொல்

6.1 பின்வரும் இரு தொடரைப் பொருத்தமான இணைப்புச் சொல்லைப் பயன்படுத்தி ஒரே தொடராக மாற்றுக.
( ஆனால், அதனால், எனவே, ஏனெனில் )

1️⃣ நிலா நன்றாகப் பாடுவாள். அவளுக்கு நடனமாடத் தெரியாது.➡️ நிலா நன்றாகப் பாடுவாள் ஆனால் அவளுக்கு நடனமாடத் தெரியாது.
2️⃣ மழை பலமாகப் பெய்தது. வெள்ளம் வந்தது.➡️ மழை பலமாகப் பெய்தது அதனால் வெள்ளம் வந்தது.
3️⃣ வாசு கடினமாக உழைத்தான். வாழ்வில் உயர்ந்தான்.➡️ வாசு கடினமாக உழைத்தான் எனவே வாழ்வில் உயர்ந்தான்.
4️⃣ மிதிலா அமைதியாக இரு. ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.➡️ மிதிலா அமைதியாக இரு ஏனெனில் ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.

6.2 இணைப்புச் சொற்களைப் பயன்படுத்திக் கதையை நிறைவு செய்க.
( எனவே, ஆனால், எனினும், உடனே, ஆகவே )

ஓர் ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அவரின் மகன்கள் இருவரும் சோம்பேறிகள். விவசாயி அவர்களுக்குப் பலமுறை அறிவுரை கூறினார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. ஒரு நாள் விவசாயி நோய்வாய்ப்பட்டார். எனினும் அவரால் வயலுக்குச் செல்ல முடியவில்லை. அவர் தன் மகன்களை அழைத்து, “வயலில் புதையல் இருக்கிறது. அதைத் தோண்டி எடுங்கள்” என்றார். உடனே இருவரும் வயலுக்குச் சென்றனர். ஆனால் எங்கும் புதையல் இல்லை. எனவே வயல் முழுவதும் தோண்டினார்கள். ஆகவே நிலம் பண்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைத்தது. அப்போது தான் அவர்களுக்குப் புதையலின் உண்மையான பொருள் புரிந்தது.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post