எட்டாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – திறன் 10
படித்துப் பொருளுணர்தல்
10.1 உரைப்பகுதியைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடை எழுதுக
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்று பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று. உலகின் முதல்மொழியும் ஆகும். தமிழ்மொழி எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணக் கூறுகளைக் கொண்டு திகழ்கிறது. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுப் பாடலடி உலகிற்கான உயர்ந்த கருத்தை வெளிப்படுத்துகிறது. உலகிலுள்ள எல்லா ஊரும் நம்முடைய ஊரே. உலகில் உள்ள எல்லா மக்களும் நம் உறவினர்களே! என்பதுதான் அதன் கருத்து.
1. ‘தமிழ்‘ என்னும் சொல்லின் பொருள் யாது?
👉 இனிமை
2. ‘உறவினர்‘ என்னும் பொருள் தரும் சொல்லை உரைப்பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.
👉 உலகில் உள்ள எல்லா மக்களும் நம் உறவினர்களே.
3. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?
👉 எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
4. தமிழிலக்கணம், புறநானூறு ஆகிய சொற்களைப் பிரித்து எழுதுக.
👉 தமிழிலக்கணம் – தமிழ் + இலக்கணம்
👉 புறநானூறு – புறம் + நான்கு + நூறு
5. உலகிற்கான உயர்ந்த கருத்தை உணர்த்திய புறநானூற்றுப் பாடலடியை எழுதுக.
👉 ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
10.2 கீழ்க்காணும் பெட்டிச் செய்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
1. மேற்கண்ட செய்தியில் ஊரின் பெயர் இடம்பெற்றுள்ளதா? (ஆம் / இல்லை)
👉 ஆம்
2. ‘நன்மை’ என்பதன் எதிர்ப்பொருள் தருவதாக உரைப்பகுதியில் இடம்பெற்ற சொல்?
👉 தீங்கு
3. ‘உருவாக்கப்படுகின்றன’ என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வேறுசொல் எது?
👉 தயாரிக்கப்படுபவை
4. செய்தியில் நீங்கள் அறிந்துகொண்ட மையக் கருத்தை எழுதுக.
👉 சொப்புச் சாமான்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
5. மேற்கண்ட செய்தியைப் படித்து இரண்டு வினா உருவாக்குக.
👉 • சொப்புச் சாமான்கள் எந்த நூற்றாண்டிலிருந்து தயாரிக்கப்படுகின்றன?
👉 • சொப்புச் சாமான்கள் எதனால் தயாரிக்கப்படுகின்றன?
