8TH-TAMIL-THIRAN-CLO-5-THODARAMAIPPU

 



📚 எட்டாம் வகுப்பு – தமிழ் – திறன் – 5

வகுப்புநிலைத் திறன்கள் – தொடரமைப்பு


5.1. உரிய சொற்களை எடுத்து எழுதி, கதையை நிறைவு செய்க:

ஒரு காட்டில் கழுதைப்புலி ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுதைப்புலி உணவு தேடி அலைந்தது. உணவு எங்கும் கிடைக்காததால் பசியால் வாடியது. அப்போது ஆற்றின் ஓரமாக ஆமை ஒன்றைக் கண்டது. ஆமை, கழுதைப்புலியிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓடியது. ஆனால், கழுதைப்புலி ஆமையின் அருகில் வந்தது. உடனே ஆமை தன் தலையையும் கால்களையும் ஓட்டின் உள்ளே இழுத்துக்கொண்டது.

“ஆமையே! நான் பசியாக உள்ளேன். உன்னைச் சாப்பிடப்போகிறேன்” என்றது கழுதைப்புலி. அதற்கு ஆமை, “அவசரப்படாதே கழுதைப்புலியே! நான் கடும் வெயிலில் நடந்து வந்தேன். அதனால் சுவை குறைந்துவிட்டேன். என்னைத் தண்ணீரில் போட்டால் சுவை கூடிவிடும்” என்றது. ஆமையின் பேச்சில் மயங்கிய கழுதைப்புலி, ஆமையைத் தண்ணீரில் தள்ளியது. தண்ணீரில் விழுந்த ஆமை வேகமாக நீந்தித் தப்பியது. கழுதைப்புலி ஏமாந்தது; மீண்டும் உணவைத் தேடி அலைந்தது.


5.2. படத்தைப் பார்த்துத் தலைப்பிற்கு ஏற்பத் தொடர்கள் எழுதுக:

  • யானை மட்டையை பிடித்து விளையாடியது.
  • குரங்கு பந்தை எறிந்து சிரித்தது.
  • மான் பூவை பார்த்து மகிழ்ந்தது.
  • யானை, குரங்கு, மான் எல்லோரும் சேர்ந்து விளையாடினார்கள்.
  • விலங்குகள் பந்தையும் மட்டையையும் கொண்டு விளையாடினர்.

(சுட்டிய பின் 10 விநாடிகள் காத்திருந்து PDF தானாக திறக்கும்)


✨ கல்விவிதைகள் ✨

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post