🍎 எட்டாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – திறன் 4 : மயங்கொலிகள்
4.1. கலந்துரையாடிக் காரணம் அறிக
கொக்கு : இது என்ன?
வாத்து : இதுவா… இது ஒரு திரவம். ஒரே ஒரு சொட்டு விட்டாலே போதும்... கறை காணாமல் போய்விடும்.
கொக்கு : ஓ… அப்படியா? நான் ஆற்றிற்குச் செல்கிறேன்.
(என்று கூறிய கொக்கு, திரவத்தை எடுத்துக்கொண்டு ஆற்றிற்குச் சென்றது. நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. கொக்கைத் தேடி வாத்து, ஆற்றிற்குச் சென்றது.)
வாத்து : இங்கே என்ன செய்கிறாய்? திரவத்தை எங்கே காணோம்?
கொக்கு : நீதானே சொன்னாய்! ஒரு சொட்டு விட்டாலே கரை காணாமல் போய்விடுமென்று? ஆனால் திரவம் முழுவதும் ஊற்றியும் கூட ஆற்றங்கரை அப்படியே இருக்கிறதே!
வாத்து இதைக் கேட்டதும் சிரித்தது.
வாத்து ஏன் சிரித்தது?
“கரை காணாமல் போய்விடும்” என்ற சொற்றொடரின் பொருள் —
ஆடைகள் அல்லது பொருட்களில் உள்ள கறைகள் மறைந்து விடும் என்பதாகும்.
ஆனால் கொக்கு அதை ஆற்றங்கரை காணாமல் போய்விடும் என்று தவறாகப் புரிந்துகொண்டு, திரவத்தை ஆற்றில் ஊற்றியது.
அந்தப் பிழையை அறிந்த வாத்து சிரித்தது.
4.2. கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு இரண்டு தொடரை எழுதுக
- எ.கா: வேந்தன் / கேட்டது / குரல் / சொன்னார் / குறள்
➡️ வேந்தன் குறள் சொன்னார்.
➡️ வேந்தன் குரல் கேட்டது. - கண்ணன் / வழியில் / துடித்தான் / சென்றான் / வலியில்
➡️ கண்ணன் வலியில் துடித்தான்.
➡️ கண்ணன் வழியில் சென்றான். - குரங்கு / மறத்தில் / தமிழர்கள் / மரத்தில் / சிறந்தவர்கள் / ஏறியது
➡️ குரங்கு மரத்தில் ஏறியது.
➡️ தமிழர்கள் மறத்தில் சிறந்தவர்கள். - பனி / பாத்திமா / நாள் / முழுவதும் / செய்தாள் / பணி / பொழிந்தது
➡️ பாத்திமா நாள் முழுவதும் பணி செய்தாள்.
➡️ நாள் முழுவதும் பனி பொழிந்தது.
