🦚 எட்டாம் வகுப்பு – தமிழ் திறன் – திறன் 3
வகுப்புநிலைத் திறன்கள் – திறன் - 3 : சுட்டு, வினா
3.1 நிகழ்வைப் படித்து உரிய வினாவிற்கு விடையளிக்க
ஆதனும் மதனும் நண்பர்கள். ஆதனின் வீட்டிற்கு மதன் விளையாட வந்தான்.
“உங்கள் வீட்டு நாய் எங்கே சென்றது?” எனக் கேட்டான் மதன்.
“அது வெளியில் விளையாடுகிறது” என்றான் ஆதன்.
அப்போது, தெருவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.
இருவரும் அந்த திசையை நோக்கிச் சென்றனர்.
அங்கே, ஆதனின் நாய்க்குட்டி கால் அடிபட்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தது.
"ஐயோ! இதற்கு என்ன ஆனது?" என்று பதறினான் ஆதன்.
மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம் என்றான் மதன்.
கால்நடை மருத்துவர் நாய்க்குட்டிக்குச் சிகிச்சை அளித்தார்.
இருவரும் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்தனர்.
இருவரின் செயலைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டினர் பெற்றோர்.
1️⃣ சுட்டுச் சொல் இடம் பெற்றிருக்கும் தொடர்கள்:
1. “அது வெளியில் விளையாடுகிறது” என்றான் ஆதன்.
2. “அங்கே, ஆதனின் நாய்க்குட்டி கால் அடிபட்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தது.”
2️⃣ நிகழ்விலிருந்து இரண்டு வினாக்கள்:
➤ ஆதனின் நாய் எங்கே சென்றது?
➤ நாய் எப்படிக் காயமடைந்தது?
3.2 அடிக்கோடிட்ட சொல் விடையாக அமையுமாறு வினா எழுதுக
🔹 தீபிகா நேற்றுப் பச்சை வண்ணக் கிளியைப் பார்த்து மகிழ்ந்தாள்.
👉 நேற்றுப் பச்சை வண்ணக் கிளியைப் பார்த்து மகிழ்ந்தவர் யார்?
🔹 பரிதி பூந்தோட்டத்தில் மலர்கள் பறித்தான்.
👉 பரிதி பூந்தோட்டத்தில் எதை பறித்தான்?
🔹 இளமதி நேற்று திருவிழாவிற்குச் சென்றாள்.
👉 நேற்று திருவிழாவிற்குச் சென்றவர் யார்?
🔹 அப்பா பழக்கலவை செய்தார்.
👉 பழக்கலவை செய்தவர் யார்?
