🌿 எட்டாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025 🌿
  
  வகுப்புநிலைத் திறன்கள் – திறன் - 2
திணை, பால், எண், இடம் , காலம்
    2.1. நிகழ்வைப் படித்து உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புக:
புத்தகங்கள், நூலகம் , புத்தகம் , பாவனா, தோழி , பாடல் , சிறுவர் பாடல்கள், நூலகர்
பாவனா பாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளப் போகிறாள். அதற்காகச் சிறந்த பாடல் பாட முடிவெடுத்தாள். எனவே, நூலகம் சென்றாள். நூலகத்தில் நூலகர் இருந்தார். அவருக்கு வணக்கம் தெரிக்வித்தாள். பின்பு புத்தகத்தைத் தேடத் தொடங்கினாள். “எத்தனை புத்தகங்கள்! இவற்றில் நான் எப்படித் தேடுவேன்?” என்று மலைத்துப் போனாள். அப்போது, அவள் தோழி மேகலை வந்தாள். புத்தகம் தேட உதவிசெய்தாள். சிறுவர் பாடல்கள் என்ற தலைப்பு பாவனாவின் கண்ணில் பட்டது. “ஆகா! கிடைத்து விட்டது” என்று மகிழ்ந்தாள். ஆவலுடன் புத்தகத்தை எடுத்துப் பாடலை எழுதிக்கொண்டாள்.
2.2. சொற்களை தொடரில் அமைத்து எழுதுக
| சொற்கள் | தொடர் | 
|---|---|
| குமார் | குமார் பள்ளிக்கு சென்றான். | 
| நிலானி | நிலானி பாடல் பாடினாள். | 
| பேருந்து | பேருந்து நிலையத்தில் நின்றது. | 
| மாடுகள் | மாடுகள் புல் மேய்கின்றன. | 
| நண்பர்கள் | நண்பர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். | 
