இயல் – 6
சிற்றகல் ஒளி
1. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய
ஆண்டாக கருதப்படும் ஆண்டு.
அ) 1907 ஆ)
1905 இ) 1906 ஈ) 1947
2. வ.உ.சி.அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய
ஆண்டு
அ) 1919 ஆ) 1931 இ) 1920 ஈ) 1906
3. ஆயிரம் விளக்கு வட்டம், சால்வன் குப்பம் பகுதியில் பிறந்தவர்
அ) நேசமணி ஆ) ம.பொ.சிவஞானம் இ) காமராசர் ஈ) தேவசகாயம்
4. ஞானப்பிரகாசம் என்னும் பெயரை ‘ சிவஞானி
‘ என மாற்றியவர்
அ) பொன்னுசாமி ஆ) சிவகாமி இ)
இராஜாஜி ஈ) சரபையர்
5. ம.பொ.சி.அவர்களுக்கு பால பாடங்களாக அமைந்தது
அ) சிலப்பதிகாரம் ஆ) பவளகொடி மாலை இ) மகாபாரதம் ஈ) ஆத்திசூடி
6. ம.பொ.சி இலக்கிய அறிவு பெற்ற விதம்
அ) சொற்பொழிவு கேட்பதன்
மூலம் ஆ) சொற்பொழிவாற்றியதன் மூலம்
இ) இலக்கிய நூல்களை முறையாக
கற்றதால் ஈ) கல்வியைக் கற்றதால்
7. ம.பொ.சியின் கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமைக்குரியவர்
அ) சரபையர் ஆ)
ஞானியாரடிகள் இ) பொன்னுசாமி ஈ) காமராசர்
8. கூற்று 1: ஏழ்மையிலும் படிப்பில் நாட்டம் கொண்டவர் ம.பொ,சி
கூற்று 2 : பல வீடுகளுக்குச் சென்று பழைய புத்தகங்களை வாங்கிப்
படிப்பார்
கூற்று 3 : உணவுக்கான பணத்தில் புத்தகம்
வாங்கி, பல வேளைகளில் பட்டினி கிடந்தார்.
அ) அனைத்துக் கூற்றுகளும் சரி
ஆ) கூற்று 1,2 – சரி ; கூற்று 3 – சரி
இ) கூற்று 1,3 – சரி, கூற்று
2 – தவறு ஈ) அனைத்து கூற்றுகளும் தவறு
9. காந்தி – இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு
அ) 1930 ஆ) 1929 இ) 1931 ஈ) 1942
10. 30.09.1932-இல் ம.பொ.சி எத்தலைப்பிலான துண்டறிக்கையை வழங்கியதற்காக சிறையிலிடப்பட்டார்?
அ) தமிழா! துள்ளி எழு ஆ) வந்தே மாதரம் இ) ஜெய்ஹிந்த்
ஈ) போராடுவோம் மடியும் வரை
11. ‘ இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு ‘ என்ற தீர்மானத்தைப் பம்பாயில்
கூடி அகில இந்திய பேராயக் கட்சி ஒரு மனதாக நிறைவேற்றிய ஆண்டு____
அ) 15-08-1943 ஆ) 08-05-1942 இ) 08-08-1942 ஈ) 10-12-1945
12. வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சியாக அமைந்த ஆண்டு
அ) 1947 ஆ) 1946 இ) 1945 ஈ)
1943
13. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள், மாதம் மற்றும் ஆண்டு
அ) 05-12-1946 ஆ) 01-11-1956 இ) 05-09-1949 ஈ) 15-07-1962
14. குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
அ) மார்ஷல் நேசமணி ஆ) ம.பொ.சிவஞானம் இ) காமராசர் ஈ) தேவசகாயம்
15. மார்ஷல் நேசமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சிலையும் மணிமண்டபமும் அமைத்துள்ள
மாவட்டம்.
அ) கன்னியாகுமரி ஆ) நாகர்கோவில் இ) திருநெல்வேலி ஈ) தூத்துக்குடி
16. சர்தார்.கே.எம்.பணிக்கர் தலைமையில் அமைந்த மொழிவாரி ஆணையம் ‘ சித்தூர்
‘ மாவட்டம் முழுவதையும் எந்த மாநிலத்துடன் இணைத்தது?
அ) கேரளா ஆ) தமிழ்நாடு இ) ஆந்திரா ஈ)
கர்நாடகா
17. மாலவன் குன்றம், வேலவன் குன்றம் என்பவை
அ) திருப்பதி, திருத்தணி ஆ) திருத்தணி, திருப்பதி இ) திருப்பதி, திருச்செந்தூர்
ஈ) திருப்பரங்குன்றம், பழனி
18. திருத்தணி வரையுள்ள தமிழ்நிலங்கள் மீட்கப்படக் காரணமாக அமைந்த ஆணையம்
அ) கே.எம்.பணிக்கர் ஆணையம் ஆ) படாஸ்கர்
ஆணையம் இ) தார் ஆணையம் ஈ) ஃபசலி ஆணையம்
19. ஆந்திராவிற்கு சென்னை தலைநகராக இருக்க வேண்டுமென ஆந்திர தலைவர்கள் கூறிய
போது, தலைநகரைக் காக்க தன் முதலமைச்சர் பதவியைத் துறக்க முன் வந்த முதலமைச்சர்
அ) காமராசர் ஆ) பனகல் ராஜா இ) இராஜாஜி ஈ)
சுப்பராயலு
20. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்- என ம.பொ.சி முழங்கிய போது அப்போதைய
மாநகரத் தந்தை
அ) வாஞ்சு ஆ) இராஜாஜி இ) தாணுலிங்கம் ஈ)
செங்கல்வராயன்
21. ம.பொ.சி. அவர்களின் தெற்கெல்லைக் கிளர்ச்சி முதல் பேச்சு நடத்திய மாவட்டம்
அ) கன்னியாகுமரி ஆ) நாகர்கோவில் இ) இராமநாதபுரம் ஈ) திருநெல்வேலி
22. இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில் தமிழனத்தை ஒன்றுபடுத்தும்
இலக்கியமாக ம.பொ.சி கருதியது_______
அ) சிலப்பதிகாரம் ஆ) கம்பராமாணயம் இ) திருக்குறள்
ஈ) அகநானூறு
23. தமிழினத்தின் பொதுச் சொத்தாக ம.பொ.சி கருதிய நூல்
அ) சிலப்பதிகாரம் ஆ) கம்பராமாணயம் இ) திருக்குறள்
ஈ) அகநானூறு
24. சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர்
அ) மங்கலங்கிழார் ஆ) ஈ.எஸ்.தியாகராஜன் இ) ம.பொ.சி ஈ) விநாயகம்
25. தெற்கெல்லைக் கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாகிச் சூடு
காரணமாக உயிர் நீத்தவர்கள் ___________
அ) நதானியல்,தாணுலிங்கம் ஆ)
நேசமணி, ம.பொ.சி
இ) மங்கலங்கிழார், விநாயகம் ஈ)
தேவசகாயம், செல்லையா
26. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு சேர வேண்டும் என தமிழரசு கழகம்
விண்ணப்பித்த ஆணையம்
அ) வாஞ்சு ஆணையம் ஆ) பணிக்கர் ஆணையம்
இ) பசலி ஆணையம் ஈ)
படாஸ்கர் ஆணையம்
27. 1953 இல் சென்னை தமிழருக்கே உரியது என உறுதியளித்த அன்றைய பிரதமர்
அ) நேரு ஆ) குசாரிலால் நந்தா இ) லால் பகதூர் சாஸ்திரி ஈ) இந்திரா காந்தி
28. தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கட மலையாகவும், தெற்கெல்லை குமரி முனையாகவும்
குறிப்பிடும் சங்க நூல்கள்
அ) குறுந்தொகை, புறநானூறு ஆ) அகநானூறு,மணிமேகலை
இ) சிலப்பதிகாரம், புறநானூறு ஈ) குண்டலகேசி, மணிமேகலை
29. ஒரு நாட்டின் தவப்பயனாக ம.பொ.சி.கருதியது.
அ) இயற்கை எல்லை ஆ) ஒழுக்கமான மனிதர்கள் இ) அதிகமான நூல்கள் ஈ) நிறைந்த கல்வி
30. ஆஸ்டிரியா நாட்டு தலைநகரம் _________
அ) சால்ஸ்பர்க்
ஆ)
கிராஸ் இ) லின்ஸ்
ஈ) வியன்னா
31. ஆஸ்டிரியா நாட்டின் அருங்காட்டியகத்தில் இருந்த அரிய கையெழுத்துச் சுவடி
எத்தாளில் அச்சடிக்கப்பட்டிருந்தது?
அ) பார்ச்மென்ட் ஆ) உலோகத் தாள்கள் இ) பேப்பிரஸ் ஈ) செப்புத்தாள்
32. எகிப்து நாட்டில் உள்ள துறைமுகம்
அ) ஷாங்காய் ஆ) ரோட்டர்டாம் துறைமுகம் இ)
ஜெபல் அலி ஈ) அலெக்ஸண்டிரியா
33. சேர நாட்டின் துறைமுகம்
அ) பூம்புகார் ஆ)
முசிறி இ)
கொற்கை ஈ) மருங்கை
34. தமிழ்
வணிகருக்கும், கிரேக்க வணிகருக்கும் வணிக ஒப்பந்தம் ஏற்படுத்திய நூற்றாண்டு
அ) கி.பி. 2
ஆ) கி,பி .4 இ) கி.மு. 2 ஈ) கி.மு.4
35. ‘
எனது போராட்டம் ‘ என்ற நூலை எழுதியவர்
அ) ந.முத்துசாமி ஆ) கு.அழகிரிசாமி இ) ம.பொ.சி ஈ) உதயசங்கர்
36. கூற்று
1 : ம.பொ.சி நாற்காலிக்காரர் என்ற நூலை எழுதினார்.
கூற்று 2 : 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவைத்
தலைவர் பதவி வகித்துள்ளார்.
அ) கூற்று 1 – சரி; கூற்று 2 – தவறு ஆ) கூற்று 1 – தவறு; கூற்று
2 – சரி
இ) கூற்றுகள் இரண்டும் சரி ஈ) கூற்றுகள்
இரண்டும் தவறு
37. தமிழரசு
கழகத்தைத் தொடங்கியவர்.
அ) விநாயகம் ஆ) ஈ.எஸ்.தியாகராஜன் இ)
செல்லையா ஈ. ம.பொ.சி
38. ம.பொ.சி
அவர்களின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
அ) எனது போராட்டம் ஆ)
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
இ) வள்ளுவர் வகுத்த வழி ஈ) வள்ளலார் வளர்த்த தமிழ்
39. தமிழ்நாடு
அரசு ம.பொ.சி அவர்களுக்கு சிலை அமைத்துள்ள ஊர்கள்
அ) சேலம், சென்னை ஆ) திருத்தணி,
வேலூர்
இ) வேலூர்,தூத்துக்குடி ஈ) திருத்தணி,
சென்னை
40. ம.பொ.சியின் நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு
