இயல் – 6
சிலப்பதிகாரம்
1. ‘ வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் ‘ இவ்வடிகள்
இடம் பெற்ற நூல்
அ) கம்பராமாயணம் ஆ) மணிமேகலை இ) சிலப்பதிகாரம் ஈ)
குண்டலகேசி
2. உலக நாடுகளும், தொழில் முனைவோரும் அதிக அக்கறை செலுத்துவது______
அ) உற்பத்தி
செய்தல் ஆ) வாடிக்கையாளரைக் கவர்தல் இ) இலாபம்
ஈ) சந்தைப்படுத்துதல்
3. சிலப்பதிகாரம் காட்டும் வணிக வீதிகள் உள்ள பகுதி
அ) முசிறி ஆ) மரூவூர் பாக்கம் இ) தொண்டி ஈ) வைகுண்டம்
4. கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் – இவ்வடிகளில்
‘ காருகர் ‘ என்போர்
அ) ஓவியர் ஆ) சிற்பி இ) அப்பம் விற்பர்
ஈ) நெசவாளர்
5. தூசும் துகிரும் ஆரமும் அகிலும் – இவ்வடிகளில் ‘ தூசும்
துகிரும் ‘ என்பதன் இலக்கணம்
அ) எண்ணும்மை ஆ) வினைத்தொகை இ) பண்புத்தொகை ஈ) வினைமுற்று
6. கூல வீதி என்பது
அ) துணி விற்கும்
வீதி ஆ) முத்து விற்கும் வீதி இ) தானியம் விற்கும் வீதி ஈ) இரும்பு வீதி
7. பொருத்துக.
அ) காழியர் - 1)
அப்பம் விற்பவர்
ஆ) கூவியர் - 2)
வெற்றிலை விற்பவர்
இ) பாசவர் - 3)
நறுமணப் பொருள் விற்பவர்
ஈ) வாசவர் - 4) பிட்டு விற்பவர்
அ)
4,1,2,3 ஆ) 4,3,1,2 இ) 3,2,1,4 ஈ)
2,1,3,4
8. எண்ணெய் விற்போரைத் தேர்க
அ) கண்ணுள்
வினைஞர் ஆ) பாசவர் இ) வாசவர் ஈ)
ஓசுநர்
9. ஆரமும் அகிலும் என்பதன் பொருள்
அ) பட்டும்,பவளமும் ஆ) துணியும், ஓவியமும் இ) சந்தனும் அகிலும் ஈ) அப்பமும்,பிட்டும்
10. வெறுக்கை என்பதன் பொருள்
அ) வெற்று
கை ஆ) சிவந்த கை இ) வணிகம் ஈ) செல்வம்
11. கள்நொடை ஆட்டியர் என்போர்
அ) மீன் விற்பவர் ஆ) கள் விற்பவர் இ) பிட்டு விற்பவர் ஈ) நெசவாளர்
12. சுண்ணம் என்பதன் பொருள்
அ) வண்ணக்
குழம்பு ஆ) மணச்சாந்து இ) நறுமணப் பொடி ஈ) பருத்தி நூல்
13. சிலப்பதிகாரம் காட்டும் தானிய வகைகள்
அ) 9 ஆ)
8 இ) 10 ஈ)
12
14. கண்ணுள் வினைஞர் என சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்
அ) ஓவியர் ஆ) நெய்பவர் இ) சிற்பி ஈ)
பிட்டு விற்பவர்
15. மண்ணீட்டாளர் என்பவர்
அ) ஓவியர் ஆ) நெய்பவர் இ) சிற்பி ஈ)
பிட்டு விற்பவர்
16. கிழி என்பதன் பொருள்
அ) செல்வம் ஆ) பட்டு இ)
தானியம் ஈ) துணி
17. மாசுஅறு என்பதன் பொருள்
அ) குற்றம்
இல்லாத ஆ) மாசுடன் இ)
தேவையற்ற ஈ) இலாப நோக்குடன்
18. கூலம் என்பது எதைக் குறிக்கிறது?
அ) செல்வம் ஆ) பட்டு இ)
தானியம் ஈ) துணி
19. மீன்விலைப் பரதவர் என்போர்
அ) கறிகளை
விற்பவர்
ஆ) வெற்றிலை விற்போர் இ) எண்ணெய் விற்பவர் ஈ) மீன் விற்பவர்
20. கிழியினும் கிடையினும் என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) எண்ணும்மை ஆ) உம்மைத் தொகை இ) இழிவு சிறப்பும்மை
ஈ) சிறப்பும்மை
21. பொருத்தமான இணையைத் தேர்க.
அ) காருகர் - 1)
ஓவியர்
ஆ) ஓசுநர் - 2)
எண்ணெய் விற்போர்
இ) வெறுக்கை - 3)
நறுமணப் பொடி
ஈ) வாசவர் - 4)
சிற்பி
அ) இ ஆ) ஈ இ) ஆ ஈ)
இ
22. பலவகையாக புலால் கறிகளை விற்பவரை சிலப்பதிகாரம் எவ்வாறு
காட்டுகிறது?
அ) கண்ணுள்
வினைஞர் ஆ) மண்ணீட்டாளர் இ) கூவியர் ஈ) பல்நிண விலைஞர்
23. இறுங்கு என்பது _____
அ) சோளம் ஆ) கம்பு இ)
வரகு ஈ) சாமை
24. இவற்றில் வேறுபட்டதைத் தேர்க.
அ) வரகு ஆ) கேழ்வரகு இ) புல் ஈ)
கோதுமை
25. உமணர் என்போர்
அ) வெற்றிலை
விற்போர் ஆ) ஓவியர் இ) உப்பு விற்பவர் ஈ) நெய்பவர்
26. இசையின் வகைகள்
அ) 2 ஆ) 4 இ) 7 ஈ)
8
27. பெரும்பாண் இருக்கை என்பது யாரைக் குறிக்கிறது?
அ) இசை வகை ஆ) வணிகர் வகை இ) வணிக வீதிகள் ஈ) இசைபாணர்கள் இருக்கை
28. வேறுபட்ட ஒன்றைத் தேர்க.
அ) விளரி ஆ) காருகர் இ) தாரம் ஈ) கைக்கிளை
29. வணிகர்களின் வகைகளில் மாறுபட்டத்தைத் தேர்க.
அ) உழை ஆ) ஓசுநர் இ) மண்ணீட்டாளர் ஈ)
கூவியர்
30. மயங்கிய – என்ற சொல்லின் சரியாக பகுபத பிரிப்பு முறை
அ) மயங்கி
+ க் + அய ஆ) மயங்கு + இ(ன்) + ய் + அ இ) மயங்கி + அய ஈ) மயங்கு + இ + அ
31. மயங்கிய என்ற சொல்லின் பகுபத உறுப்பில் பகுதியாக அமைவதைத்
தேர்க.
அ) ய் ஆ) மயங்கு இ) இ(ன்) ஈ)
அ
32. மயங்கிய பகுபத உறுப்பில் “ ய் “ என்பதன் உறுப்பு
அ) பகுதி ஆ) இடைநிலை இ) உடம்படு மெய் ஈ)
பெயரெச்ச விகுதி
33. குழலிலும், யாழிலும் உள்ள இசையின் வகையில் ஒன்றைத் தேர்க.
அ) பவளம் ஆ) கைக்கிளை இ) செல்வம் ஈ) கிழி
34. கண்ணகியும், கோவலனும் காவிரி பூம்பட்டினம் வழியாக அடைந்த
இடத்தைத் தேர்க.
அ) கொடும்பாளூர் ஆ) கொடு முடி இ) கொற்கை ஈ) கொண்டப்ப
நாயக்கம் பட்டி
35. திருமால் குன்றம் என்பது
அ) சிறுமலை ஆ) அழகர் மலை இ) சுருளி மலை ஈ) விராலிமலை
36. கண்ணகியும், கோவலனும் மதுரையை அடைய உடன் வந்தவர்
அ) மாதவி ஆ) நண்பர்கள் இ) கவுந்தியடிகள் ஈ)
இளங்கோவடிகள்
37. கண்ணகியும், கோவலனும் மதுரையை அடையும் வழிகளாக சிலப்பதிகாரம்
கூறப்பட்டவை
அ) சிறுமலை
வலப்பக்கம் ஆ) திருமால் குன்றம் இடப்பக்கம்
இ) இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதி ஈ) அ,ஆ,இ, அனைத்தும்
38. கோவலனையும், கண்ணகியையும் கவுந்தியடிகள் அழைத்து சென்ற
வழி
அ) சிறுமலை
வலப்பக்கம் ஆ)
திருமால் குன்றம் இடப்பக்கம்
இ) இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதி ஈ) தனி வழி
39. நெடுவேள் குன்றம் என்பது
அ) சிறுமலை ஆ) அழகர் மலை இ)
சுருளி மலை ஈ) விராலிமலை
40. நெடுவேள் குன்றம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
அ) காவிரி
வடக்கரை ஆ) வைகையின் தென்கரை
இ) கங்கை
வடக்கரை ஈ)
யமுனை தெங்கரை
41. கோவலனை இழந்த கண்ணகி மதுரையிலிருந்து வந்து அடைந்த இடத்தைத்
தேர்க.
அ) வேங்கைக்
கானல் ஆ) வேங்கைக் காடு இ) வேங்கை வயல் ஈ) வேங்கைச் சதுக்கம்
42. வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பி விடுவது
___________
அ) நீர் திருப்பு ஆ) ஓடை வழி மாற்றம் இ) வயல் செம்மை ஈ)
மடை
43. உரை என்பது பேசும் மொழியின் ________
அ) நாகரிகம் ஆ) ஓட்டம் இ) ஒழுக்கமான சொற்கள் ஈ) தன்மை
அறிதல்.
44. உரைப்பாட்டு மடை என்பது
அ) நீரை வயலுக்குப்
பாய்ச்சுதல் ஆ) உரையை சீர்ப்படுத்தி
பேசுதல்
இ) உரையினை
செய்யுளாகிய வயலில் பாய்ச்சுதல் ஈ) கட்டுரைப்
பாங்கு
45. உரைப்பாட்டு மடை அமைந்துள்ள காப்பியம்
அ) மணிமேகலை ஆ) சீவக சிந்தாமணி இ) சிலப்பதிகாரம் ஈ) குண்டலகேசி
46. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றைத் தேர்க.
அ) கம்பராமாயணம் ஆ) விவேக சிந்தாமணி இ) பாரதம் ஈ) சிலப்பதிகாரம்
47. ஐம்பெரும் காப்பியங்களில் வேறுபட்டதைத் தேர்க.
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை இ) பெரிய புராணம் ஈ) வளையாபதி
48. முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என சிறப்பிக்கப்படும்
நூல்
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை இ) குண்டல கேசி ஈ) வளையாபதி
49. பொருந்தா ஒன்றைத் தேர்க.
அ) கிட்கிந்தா
காண்டம் ஆ) புகார் காண்டம் இ) மதுரைக் காண்டம் ஈ) வஞ்சிக்காண்டம்
50. சிலப்பதிகாரத்தில் உள்ள செய்யுள் வகை
அ) ஆறு காண்டங்களைக்
கொண்டது ஆ) 3 காண்டங்கள் 36 படலங்கள்
இ) பத்தாயிரம்
செய்யுள்கள் ஈ)
மூன்று காண்டங்கள், 30 காதைகள்
51. இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்பெறும் நூல்கள்
அ) குண்டலகேசி,
வளையாபதி ஆ) சிலப்பதிகாரம், வளையாபதி
ஆ) சிலப்பதிகாரம்,
மணிமேகலை ஈ) வளையாபதி, சீவக சிந்தாமணி
52. சிலப்பதிகாரம் யாரைப் பற்றி பாடுகிறது?
அ) கோவலன்,
கண்ணகி ஆ) மணிமேகலை இ) கவுந்தியடிகள் ஈ) மூவேந்தர்
53. சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
அ) கம்பர் ஆ) இளங்கோவடிகள் இ) பெருங்கெளசிகனார் ஈ) சீத்தலைச் சாத்தனார்
54. இளங்கோவடிகளின் மரபு.
அ) சோழ மரபு ஆ) கள்ளர் மரபு இ) சேர மரபு ஈ)
பாண்டிய மரபு
55. சிலப்பதிகாரம் மூலம் எந்த மன்னர்களின் செய்திகளை அறிய
முடிகிறது?
அ) சேரன் ஆ) மூவேந்தர்களும் இ) சோழன் ஈ) பாண்டியன்
56. மணிமேகலையின் ஆசிரியர்
அ) கம்பர் ஆ) இளங்கோவடிகள் இ) பெருங்கெளசிகனார் ஈ) சீத்தலைச் சாத்தனார்
57.’ அடிகள் நீரே அருளுக’ என யார் யாரிடம் கூறினார்
அ) கம்பர்
இளங்கோவடிகளிடம் கூறினார்
ஆ) பெருங்கெள்சிகனார்
கம்பரிடம் கூறினார்
இ) சீத்தலைச்
சாத்தனார் இளங்கோவடிகளிடம் கூறினார்.
ஈ) கவுந்தியடிகள்
இளங்கோவடிகளிடம் கூறினார்
58. ‘ நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் ‘ எனக் கூறியவர்
அ) கம்பர் ஆ) இளங்கோவடிகள் இ) பெருங்கெளசிகனார் ஈ) சீத்தலைச் சாத்தனார்
59. ‘ நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் ‘ எனக் கூறி
படைக்கப்பட்டக் காப்பியம்
அ) சிலப்பதிகாரம் ஆ) சீறாப்புராணம் இ) பெரியபுராணம் ஈ) சீவகசிந்தாமணி
60. மூவேந்தர் என்ற சொல்லின் சரியான பிரிப்பும், தமிழெண்ணையும்
காண்க.
அ) மூ + வேந்தர்,
ரு ஆ) மூன்று + வேந்தர் , ங இ) மூ+வே+அர், உ ஈ) மூன்று +அந்தர், எ
