இயல் – 6
முத்தொள்ளாயிரம்
1.புலவரிகள் தங்களின் கவிமரமாகக் கொண்டிருந்தது………
அ) மன்னர்களைப்
பாடுதல் ஆ) ஆற்றுப்படுத்துதல்
இ) பொருளுடன்
எழுதுதல் ஈ)
நாட்டின் வளத்தைப் பாடுவது
2. பிற்கால காப்பியங்களில் தவறாது இடம் பெற்றவை____________
அ) மன்னர்களின்
சிறப்பு ஆ) நாட்டு வளம் இ) தமிழின் சிறப்பு ஈ) ஆற்றுப்படுத்துதல்
3. சேரன்,சோழன்,பாண்டியன் ஆகியோரின் நாட்டின் வளங்களை நயமாக
எடுத்துரைக்கும் நூல்
அ) சிலப்பதிகாரம் ஆ) குறுந்தொகை இ) முத்தொள்ளாயிரம் ஈ)
அகநானூறு
4. அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ – இவ்வடிகளில் “
அள்ளல், அரக்காம்பல் “ என்பவை
அ) சேறு,செந்தாமரை ஆ) நீர், வயல் இ) முத்து, சேறு ஈ) பவளம், செந்தாமரை
5. வெரீஇ என்பதன் பொருள்
அ) கூவுதல் ஆ) அஞ்சி இ) வயல் ஈ) சேறு
6. புள்ளினம் என்பதன் பொருள்
அ) காடுகள் ஆ) நீர்நிலைகள் இ) வயல்கள் ஈ) பறவைகள்
7. நச்சிலைவேல்
கோக்கோதை நாடு – என்பதில் குறிக்கப்படும் நாடு
அ) சேர
நாடு ஆ) சோழ நாடு இ) பாண்டிய நாடு ஈ) பல்லவர் நாடு
8. காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி – இவ்வடிகள் இடம்
பெற்ற நூல்
அ) தொல்காப்பியம் ஆ) முத்தொள்ளாயிரம் இ) புறநானூறு ஈ) பரிபாடல்
9. நாவலோஓ – என்பதன் பொருள்
அ) நெல் ஆ) வயல் இ) வாழ்த்து ஈ) நீர்
10. கொல்யானை – என்பதன் இலக்கணம்.
அ) பண்புத்தொகை ஆ) வினைமுற்று இ) வேற்றுமைத்தொகை ஈ)
வினைத்தொகை
11. அள்ளல் பழனத்து அரக்காம்பல் என்னும் இச்செய்யுளில் இடம்
பெறும் அணி
அ) உவமை அணி ஆ) தற்குறிப்பேற்ற அணி இ) வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ) தீவக அணி
12. நல்யானைக் கோக்கிள்ளி நாடு என குறிப்பிடப்படுவதில் குறிக்கப்படும்
நாடு
அ) சேர நாடு ஆ) சோழ நாடு இ) பாண்டிய நாடு ஈ)
பல்லவர் நாடு
13. நந்தின் இளஞ்சினையும் புன்னக் குவிமொட்டும் – இதில்
“ நந்து “ என்பதன் பொருள்
அ) வயல் ஆ) சேறு இ) சங்கு ஈ)
பாக்கு
14. நந்தின் இளஞ்சினையும் புன்னக் குவிமொட்டும் – இதில்
“ குவிமொட்டு “ என்பதன் இலக்கணம்
அ) பண்புத்தொகை ஆ) வினைமுற்று இ) வேற்றுமைத்தொகை ஈ)
வினைத்தொகை
15. இளங்கமுகு என்பதில் “ கமுகு “ என்பதன் பொருள்
அ) வயல் ஆ) சேறு இ) முத்து ஈ)
பாக்கு
16. நகைமுத்த வெண்குடையான் நாடு எனபதில் குறிக்கப்படும் நாடு
அ) சேர நாடு ஆ) சோழ நாடு இ)
பாண்டிய நாடு ஈ) பல்லவர் நாடு
17. பொருத்துக.
அ) அள்ளல்
- 1) பாக்கு
ஆ) பழனம் - 2) முத்து
இ) நந்து - 3) நீர் மிக்க வயல்
ஈ) கமுகு - 4) சேறு
அ)
3,4,1,2 ஆ) 4,3,2,1 இ) 4,1,3,2 ஈ)
2,1,4,3
18. தென்னன் என்பவன்
அ) சேரன் ஆ) பல்லவன் இ) பாண்டியன் ஈ)
சோழன்
19. பொருத்தமான இணையைக் காண்க.
அ) நச்சிலைவேல்
கோக்கோதை நாடு - 1) பாண்டிய நாடு
ஆ) நல்யானைக்
கோக்கிள்ளி நாடு - 2) சோழ நாடு
இ) நகை முத்த
வெண்குடையான் நாடு - 3) சேரநாடு
அ) ஆ ஆ) இ இ) அ ஈ)
அனைத்தும் தவறு
20. கூற்றிசைத்தால் என்ற சொல்லினைப் பிரித்து எழுதுக.
அ) கூற்றி
+ இசைத்தால் ஆ) கூற்று + இசைத்தால்
இ) கூறு
+ இசைத்தல் ஈ) கூற்று + இசைத்தல்
21. நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் – என்னும்
செய்யுளில் இடம் பெற்றுள்ள அணி
அ) உவமை
அணி ஆ) தற்குறிப்பேற்ற அணி இ) வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ) தீவக அணி
22. கைச்சிறக்கால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ – இவ்வடிகளில்
“ பார்ப்பு “ என்பதன் பொருள்
அ) வயல் ஆ) முத்து இ) குஞ்சு ஈ)
ஆம்பல்
23. திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் – இவ்வடியில்
இடம் பெற்ற “ முத்தம் “ என்பதன் பொருள்
அ) வயல் ஆ) முத்து இ) குஞ்சு ஈ)
ஆம்பல்
24.சேறு உள்ள நீர்மிக்க வயல்களில் மலர்ந்துள்ள மலரின் வண்ணம்
அ) சிவப்பு ஆ) மஞ்சள் இ) அரக்கு ஈ)
வெந்திய வண்ணம்
25. உழவர்கள் நெற்போர் மீதேறி நின்று கொண்டு மற்ற உழவர்களை
எவ்வாறு அழைத்தனர்?
அ) நலமா? ஆ) அறுவடை முடிந்ததா? இ) அங்கே
யாரு?
ஈ) நாவலோ
26. யானைப்படைகள் கொண்ட நாடு
அ) சோழ
நாடு ஆ) பாண்டிய நாடு இ) சேர நாடு ஈ)
பல்லவ நாடு
27. சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் காட்சி அளித்த விதம்
அ) பூ மொட்டு ஆ) கற்கண்டு இ) முத்து ஈ) தங்கம்
28. வெண்கொற்றக் குடையைக் கொண்டவன் நாடு
அ) சோழ நாடு ஆ)
பாண்டிய நாடு இ) சேர நாடு ஈ) பல்லவ நாடு
29. பகைவர் அஞ்சும் வேலினைக் கொண்டவன் நாடு
அ) சோழ நாடு ஆ) பாண்டிய நாடு இ) சேர நாடு ஈ) பல்லவ
நாடு
30. வெண்குடை – என்பதன் இலக்கணம்
அ) வினைமுற்று ஆ) வினைத்தொகை இ) அளபெடை ஈ)
பண்புத்தொகை
31. இளங்கமுகு – என்பதன் இலக்கணம்
அ) வினைமுற்று ஆ) வினைத்தொகை இ) அளபெடை ஈ)
பண்புத்தொகை
32. வெரீஇ – என்பதன் இலக்கணம்
அ) இன்னிசை
அளபெடை ஆ) சொல்லிசையளபெடை
இ) செய்யுளிசை
அளபெடை ஈ) ஒற்றளபெடை
33. கொண்ட – என்பதன் சரியான பகுபத உறுப்பு பிரிப்பு முறையைத்
தேர்க.
அ) கொண்
+ ட் + அ ஆ) கொள் + ட இ) கொள்(ண்)+ட்+அ ஈ) கொள்(ண்) +ட
34. கொண்ட – என்ற சொல்லின் பகுபத உறுப்பில் இறுதியாக வருவதைத்
தேர்க
அ) அ–பெயரெச்ச
விகுதி ஆ)கொள்–விகுதி இ)ண்–விகாரம்
ஈ)ட்–இறந்தகால இடைநிலை
35. முத்தொள்ளாயிரம் நூல் எழுதப்பட்ட பாவகை
அ) ஆசிரியப்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
36. முத்தொள்ளாயிரம் என்னும் நூலில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை
அ) 800 ஆ) 600 இ) 900 ஈ)
700
37. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள
செய்யுள்களின் எண்ணிக்கை
அ)
108 ஆ) 109 இ) 110 ஈ) 111
38. முத்தொள்ளாயிரம் எழுதிய ஆசிரியரின் காலம் _________ நூற்றாண்டு
அ) ஆறாம் ஆ) ஏழாம் இ) எட்டாம் ஈ) ஐந்தாம்
39. முத்தொள்ளாயிரம் சேர நாட்டை எவ்வாறு குறிப்பிடுகிறது?
அ) ஏர்க்களச்
சிறப்பு, படைச்சிறப்பும் உடைய நாடு ஆ) முத்துடை
நாடு
இ) அச்சமில்லாத
நாடு ஈ) கொடை சிறந்த நாடு
40. அ) ஏர்க்களச் சிறப்பு, படைச்சிறப்பும் உடைய நாடாக முத்தொள்ளாயிரம்
குறிப்பிடும் நாடு
அ) சோழ
நாடு ஆ) பாண்டிய நாடு இ) சேர நாடு ஈ)
பல்லவ நாடு
41. முத்துடை நாடாக முத்தொள்ளாயிரம் குறிப்பிடும் நாடு
அ) சோழ நாடு ஆ) பாண்டிய நாடு இ) சேர நாடு ஈ) பல்லவ நாடு
42. வேந்தர் என்பவர்
அ) குடிமக்கள் ஆ) வள்ளல்கள் இ) படை வீரர்கள் ஈ) அரசர்
