📚 TET 2026 - தமிழ் - 10TH-STD-இயல்-6-மங்கையராய் பிறப்பதற்கே..-வினாக்கள்

 

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026
தமிழ்
பத்தாம் வகுப்பு தரம்.
(Tnpsc, Tet, Trb, Ttse(11th), and All Compulsary Tamil Competative Exams - Purpose )
வினாக்களும், விடைகளும்
இணையவழித் தேர்வு வினாக்கள்
இயல் - 6 

இயல் – 6

மங்கையராய் பிறப்பதற்கே ….

1.   உலகில் ஆடுவாரும்,பாடுவாரும், பிறதிறன் காட்டுவாரும் உளர். அவர்களில் வென்றவர்களின் திறன்

அ) பாராட்டு         ஆ) செல்வம்              இ) வெற்றி     ஈ) ஆளுமை

2.  ஐ.நா.அவையில் செவ்வியல் இசையைப் பாடியவர்

அ) பால சரஸ்வதி  ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி  இ) சின்னப்பிள்ளை   ஈ) இராஜம் கிருஷ்ணன்

3. கூற்று 1 : “ காற்றினிலே வரும் கீதம் “ பாடலைப் பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

    கூற்று 2 : “ இசைப்பேரரசி” பட்டம் பெற்றவர்.

  கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டிற்கும் உரிய பெண் ஆளுமைக்குரியவர்

 அ) பால சரஸ்வதி  ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி  இ) சின்னப்பிள்ளை  ஈ) இராஜம் கிருஷ்ணன்

4. எம்.எஸ்.சுப்புலட்சுமி சென்னை மியூசிக் அகாதெமியில் மேதைகள் முன்னிலையில் கச்சேரி செய்த போது அவருக்கு வயது.

        அ)         15     ஆ)    16      இ)  17         ஈ) 18

5. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நடித்த திரைப்படம்

        அ) மீரா          ஆ) மகாபாரதம்       இ) இராமாயணம்    ஈ) பூம்புகார்

6. ‘ இரகுபதி இராகவ இராஜாராம் ‘ என்றப் பாடலைப் பாடியவர்

        அ) பி.சுசீலா    ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி  இ) எஸ்.ஜானகி      ஈ) வாணி ஜெயராம்

7. ‘ இரகுபதி இராகவ இராஜாராம் ‘ என்றப் பாடல் யார் முன்னிலையில் பாடப்பட்டது?

        அ) நேரு        ஆ) சரோஜினி நாயுடு        இ) காந்தி     ஈ) சுபாஷ் சந்திர போஸ்

8. “ ஹரி தும் ஹரோ” என்னும் மீரா பஜன் பாடல் சென்னை வானொலியில் ஒலிபரப்பிய ஆண்டு

        அ) 1946        ஆ) 1947     இ) 1950       ஈ) 1952

9. எம்.எஸ்.சுப்புலட்சுமியைத் தொட்டுத் தடவி பாராட்டியவர்

        அ) மேரி         ஆ) கஸ்தூரிபா       இ) சரோஜினி நாயுடு         ஈ) ஹெலன் கெல்லர்

10.எம்.எஸ்.சுப்புலட்சுமி தாமரையணி விருது பெற்ற ஆண்டு

        அ) 1950         ஆ) 1954     இ) 1960       ஈ) 1965

11. எம்.எஸ்.சுப்புலட்சுமி இங்கிலாந்தில் பாடிய ஆண்டு

        அ) 1947        ஆ) 1970      இ) 1975       ஈ) 1963

12. எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ,நா.அவையில் பாடிய ஆண்டு

        அ) 1966        ஆ) 1963     இ) 1954       ஈ) 1947

13. எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலித்த ஆண்டு

        அ) 1966        ஆ) 1963     இ) 1954       ஈ) 1947

14. மகசேசே விருது எந்த விருதுக்கு இணையாக கருதப்பட்டது?

        அ) சாகித்திய அகாதெமி     ஆ) நோபல் பரிசு    இ) கிராமி விருதி    ஈ) பத்ம விருதுகள்

15.மகசேசே விருது எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கிடைத்த ஆண்டு

        அ) 1966        ஆ) 1963     இ) 1974      ஈ) 1947

16. நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என கருதப்பட்ட நூற்றாண்டு

        அ) 17             ஆ)    18      இ)      19      ஈ) 20

17. நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என்ற எண்ணத்தைத் தகர்த்தவர்

        அ) பாலசரஸ்வதி ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி இ) இராஜம்கிருஷ்ணன் ஈ) சின்னப்பிள்ளை

18. இந்திய அரசின் “ தாமரைச் செவ்வணி “ விருதைப் பெற்றவர்.

        அ) பாலசரஸ்வதி ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி இ) இராஜம்கிருஷ்ணன் ஈ) சின்னப்பிள்ளை

19. காஞ்சிபுரத்தில் பரதநாட்டியத்திற்காக முதன்முதலில் மேடையேறிய போது பாலசரஸ்வதியின் வயது

        அ) 6              ஆ) 7           இ) 8            ஈ) 9

20. பதினைந்து வயதில் பாலசரஸ்வதி நடன நிகழ்ச்சி நடத்திய “ சங்கீத சமாஜம் “ அமைந்துள்ள  இடம்

        அ) காஞ்சிபுரம்          ஆ) திருநெல்வேலி          இ) சென்னை        ஈ) சேலம்

21. சென்னையில் நடைபெற்ற நடன கச்சேரியைக் கண்டு பாராட்டியவர்

        அ) இரவிசங்கர்        ஆ) உதய சங்கர்     இ) இராஜாஜி          ஈ) காந்தி

22. பாலசரஸ்வதி ஆடிய நடனம்

        அ) நவீன நடனம்     ஆ) மரபுசார் நடனம்              இ) பொழுதுபோக்கு  ஈ) புதிய வகை

23. கிழக்கு மேற்கு சந்திப்பு நிகழ்வு எங்கு நடைபெற்றது?

        அ) ஈரான்       ஆ) கொலம்பஸ்     இ) டோக்கியோ      ஈ) புது தில்லி

24. ஆன்மிக பட்டறிவை எவ்வகை நடனத்தால் வழங்க முடியும்?

        அ) குச்சிப்புடி           ஆ) கதக்களி          இ) கதக்       ஈ) பரதநாட்டியம்

25. பால சரஸ்வதி நடன நிகழ்ச்சி நடத்திய வெளிநாடுகள்

        அ) சேலம்,சென்னை          ஆ) அமெரிக்கா, ஐரோப்பா         

        இ) தமிழ்நாடு, கர்நாடகம்     ஈ) இலண்டன், காரைக்கால்

26. தமிழில் எழுதிய பெண்களில் முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டிக் கதைகளை எழுதியவர்.

        அ) சிவசங்கரி           ஆ) அம்பை            இ) இராஜம் கிருஷ்ணன்         ஈ) வாசந்தி

27. சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்.

        அ) இராஜம் கிருஷ்ணன்             ஆ) அம்பை            இ) சிவசங்கரி        ஈ) வாசந்தி

28. இராஜம் கிருஷ்ணனின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்.

        அ) குறிஞ்சித் தேன்    ஆ) மண்ணகத்து பூக்கள்   இ) வேருக்கு நீர்   ஈ) கரிப்பு மணிகள்

29. ‘ கரிப்பு மணிகள்’ என்ற நூல்கள் எந்தப் பகுதி தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தியது?

        அ) கடலூர்     ஆ) கன்னியாகுமரி          இ) தூத்துக்குடி      ஈ) விழுப்புரம்

30. கரிப்பு மணிகள் என்ற புதினம்

        அ) பெண்குழந்தைகள் கொலைக்கான காரணம்

        ஆ) அமைப்புச் சாரா தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல்

        இ) மீனவர் வாழ்க்கையின் சிக்கல்

        ஈ) உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கை

31. நீலகிரி,படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து எழுதியது

        அ) மண்ணகத்துப் பூக்கள்                       ஆ) குறிஞ்சித்தேன்  

        இ) அலைவாய்க் கரையில்                      ஈ) சேற்றில் மனிதர்கள்

32. கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசும் புதினம்

        அ) மண்ணகத்துப் பூக்கள்                       ஆ) குறிஞ்சித்தேன்  

        இ) அலைவாய்க் கரையில்                     ஈ) சேற்றில் மனிதர்கள்

33. அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டும் புதினம்

        அ) மண்ணகத்துப் பூக்கள்                       ஆ) குறிஞ்சித்தேன்  

        இ) அலைவாய்க் கரையில்                     ஈ) சேற்றில் மனிதர்கள்

34. தீப்பெட்டித் தொழிலில் முடக்கி, தீக்குச்சிகளை அடைப்பதுப் போல குழந்தைத் தொழிலாளர்களின் அவலத்தை கூறும் புதினம்

        அ) கூட்டுக் குஞ்சுகள்                           ஆ) குறிஞ்சித்தேன்  

        இ) அலைவாய்க் கரையில்                     ஈ) சேற்றில் மனிதர்கள்

35. பெண் குழந்தைக் கொலைக்கான காரணங்களை எழுதியது

        அ) மண்ணகத்துப் பூக்கள்                      ஆ) குறிஞ்சித்தேன்  

        இ) அலைவாய்க் கரையில்                     ஈ) சேற்றில் மனிதர்கள்

36. சரியாகப் பொருந்திய இணையைத் தேர்க.

        அ) அலைவாய்க் கரையில் – வேளாண்த் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல்.

        ஆ) மண்ணகத்துப் பூக்கள்  - குழந்தைத் தொழிலாளர்களின் அவலம்

        இ) குறிஞ்சித் தேன் - நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள்

        ஈ) சேற்றில் மனிதர்கள் – உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கை

37. எழுத்துகளில் நேர்மையான சினம், அறச் சீற்றம் இருக்க வேண்டும் என வேண்டுகோள் வைப்பவர்.

        அ) சிவசங்கரி           ஆ) அம்பை            இ) இராஜம் கிருஷ்ணன்         ஈ) வாசந்தி

38. தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாக செவ்வியல் நடனம் திகழக் காரணமாக இருந்தவர்.

        அ) பாலசரஸ்வதி ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி இ) இராஜம்கிருஷ்ணன் ஈ) சின்னப்பிள்ளை

39. சண்முக வடிவு சுப்புலட்சுமியின் ஊர்

        அ) தஞ்சாவூர்           ஆ) மயிலாப்பூர்       இ) மதுரை             ஈ) தூத்துகுடி   

40. பெண்கள் என்றால் குடும்பக் கதை எழுத வேண்டும் என்ற படிமத்தை உடைத்தவர்

       அ) சிவசங்கரி           ஆ) அம்பை            இ) இராஜம் கிருஷ்ணன்         ஈ) வாசந்தி

41.மதுரையின் முதல் பட்டதாரி பெண்

       அ) இராஜம் கிருஷ்ணன்    ஆ) அம்பை    இ) சின்னப்பிள்ளை        ஈ) கிருஷ்ணம்மாள்

42.சுவீடன் அரசின் கிருஷ்ணம்மாள் அவர்கள் பெற்ற விருது.

        அ) காந்தி அமைதி விருது                      ஆ) வாழ்வுரிமை விருது  

        இ) தாமரைத்திரு விருது                        ஈ) தாமரைச் செவ்வணி விருது

43. சுவிட்சர்லாந்து அரசின் விருது

        அ) காந்தி அமைதி விருது                     ஆ) வாழ்வுரிமை விருது  

        இ) தாமரைத்திரு விருது                        ஈ) தாமரைச் செவ்வணி விருது

44. கிருஷ்ணம்மாள் கலந்துக் கொண்ட சுதந்திரப் போராட்டங்கள்

        அ) ஒத்துழையாமை இயக்கம்       ஆ) சட்ட மறுப்பு இயக்கம்

        இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்         ஈ) அனைத்தும்.

45. நாட்டின் விடுதலைக்குப் பின் கணவருடன் இணைத்து கிருஷ்ணம்மாள் கலந்துக் கொண்ட இயக்கம்.

        அ) விடுதலை இயக்கம்                ஆ) மறுமலர்ச்சி இயக்கம் 

        இ) பூதான இயக்கம்                  ஈ) தன்னாட்சி இயக்கம்

46. வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்த இயக்கம்.

        அ) உழுபவருக்கே நில உரிமை இயக்கம்                   ஆ) மறுமலர்ச்சி இயக்கம் 

        இ) பூதான இயக்கம்                                                ஈ) தன்னாட்சி இயக்கம்

47. “உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்.” – இது யாருடையக் கூற்று.

        அ) இராஜம் கிருஷ்ணன்    ஆ) கிருஷ்ணம்மாள்  இ) சின்னப்பிள்ளை  ஈ) பாலசரஸ்வதி

48.காந்தியடிகளிடமும், வினோபாபாவேயுடனும் பணியாற்றியவர்.

        அ) கிருஷ்ணம்மாள் ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி  இ) சின்னப்பிள்ளை  ஈ) பாலசரஸ்வதி

49. எழுத படிக்கத் தெரியாத இவரை எழுதாத ஊடகங்களே இல்லை என்று கூறப்படுபவர்.

        அ) கிருஷ்ணம்மாள் ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி  இ) சின்னப்பிள்ளை  ஈ) பாலசரஸ்வதி

50. பெண்களை குழுவாகச் சேர்த்து, விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வேலைகளை பங்கிட்டு, கூலியை சரி சமமாகப் பிரித்துக் கொடுத்தவர்.

        அ) கிருஷ்ணம்மாள் ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி  இ) பாலசரஸ்வதி ஈ) சின்னப்பிள்ளை

51. சுனாமி வந்து பேரரழிவு ஏற்படுத்திய ஆண்டு

        அ) 2003        ஆ) 2004     இ) 2005      ஈ) 2006

52. சின்னப்பிள்ளை அவர்கள் ஏற்படுத்திய குழு

        அ) உழவன்   ஆ) பெண்கள்       இ) களஞ்சியம்       ஈ) சமபங்கு

53. இந்திய நாட்டின் முதன்மை அமைச்சராக இருந்தவர்

        அ) காமராஜர்            ஆ) காந்தி              இ) வாஜ்பாய்          ஈ) அப்துல்கலாம்

54. பெண் ஆற்றல் விருது, சின்னப்பிள்ளை அம்மையாருக்கு வழங்கிய முதன்மை அமைச்சர்

        அ) இந்திர காந்தி      ஆ) வாஜ்பாய்         இ) மன்மோகன் சிங்         ஈ) மோடி

55. சின்னப்பிள்ளை அம்மையார் பெற்ற தமிழ்நாடு அரசின் விருது

        அ) சாகித்திய அகாதெமி               ஆ) ஆளுமை விருது      

        இ) ஒளவை விருது                      ஈ) சமூக சிந்தனையாளர் விருது

56. “ ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து

        அரசு பட அமர் உழக்கி “ – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்

        அ) மதுரைக்காஞ்சி  ஆ) புறநானூறு       இ) அகநானூறு      ஈ) பதிற்றுப்பத்து

57. “ ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து

        அரசு பட அமர் உழக்கி “ – இவ்வடிகள் குறிப்பிடும் மாவட்டம்.

        அ) நாகப்பட்டிணம்   ஆ) திருவாரூர்      இ) திருத்தணி        ஈ) மதுரை

58. “ ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து

        அரசு பட அமர் உழக்கி “ – இவ்வடிகள் குறிப்பிடும் மாவட்டம்.

        அ) உழக்கி     ஆ) இறுத்தி           இ) ஆலங்கானம்             ஈ) அரசு

59. பொருத்துக.

        அ) எம்.எஸ்.சுப்புலட்சுமி               -        1) எழுத்தாளர்

        ஆ) பால சரஸ்வதி                         -        2) இசைப்பேரரசி

        இ) இராஜம் கிருஷ்ணன்              -        3) களஞ்சியம்

        ஈ) சின்னப்பிள்ளை                       -        4)  பரதநாட்டியம்

        அ) 2,4,1,3      ஆ) 3,1,4,2    இ) 4,2,1,3     ஈ) 2,3,4,1

60. கூற்று 1 : மகசேசே விருது பெற்ற முதல் எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன்

      கூற்று 2 : மகசேசே விருது இசைக்குக் கொடுக்கப்படும் உயரிய விருது.

        அ) கூற்று 1 சரி; கூற்று 2 தவறு    ஆ) கூற்றுகள் இரண்டும் சரி

        இ) கூற்று 1 தவறு ; கூற்று 2 சரி   ஈ) கூற்றுகள் இரண்டும் தவறு


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post