10th Tamil Important Questions 2026 | 50 Marks Special Test -2 for Slow Learners-pdf

 


 பத்தாம் வகுப்பு

மெல்லக் கற்கும் மாணவர்கள்

சிறப்பு அடைவுத் தேர்வு-2-2026

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 60 நிமிடம்                                                                                             மதிப்பெண் : 50

பகுதி - 1

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                                 15X1=15

1. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’ – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை_________

அ) நிலத்திற்கேற்ற விருந்து                         ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து                                 ஈ) உற்றாரின் விருந்து

2. தொடர்களை முழுமை செய்வதற்குப் பொருத்தமான தொழிற்பெயர்களைத் தெரிவு செய்க.

   பொது வாழ்வில் ________ கூடாது. __________ இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது.

அ)  புதையல், புதைத்தல்  ஆ) சுட்டல், சுடுதல்   இ) நடித்தல், நடிப்பு  ஈ) காணுதல்,காட்சி

3. எழுவரின் கொடைப் பெருமையைக் கூறும் நூல்______.

            அ) புறநானூறு            ஆ) சிறுபாணாற்றுப்படை      இ) குறுந்தொகை                 ஈ) நற்றிணை

4. வெண்பா ________________ ஓசை உடையது.

அ) செப்பல்                ஆ) அகவல்                            இ) துள்ளல்                 ஈ) தூங்கல்

5. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம் ___________

) நாட்டைக் கைபற்றுதல்                           ) ஆநிரை கவர்தல்           

) வலிமையை நிலைநாட்டல்                    ) கோட்டையை முற்றுகையிடல்

6.  காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது.

அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்  இ) தாளும் ஓலையும்  ஈ) சருகும் சண்டும்

7. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று ------வேண்டினார்.

அ) கருணையன், எலிசபெத்துக்காக          ஆ) எலிசபெத், தமக்காக

இ) கருணையன், பூக்களுக்காக                  ஈ) எலிசபெத், பூமிக்காக

8. வீசுதென்றல் – தொகையின் வகையைத் தேர்க.

) வேற்றுமைத் தொகை ) வினைத் தொகை  ) பண்புத் தொகை  ) உவமைத் தொகை

9. பின்வருவனவற்றுள் முறையான தொடர்.

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு     

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு           

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

10. பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்?

அ) பெரிய கத்தி ஆ) இரும்பு ஈட்டி  இ) உழைத்தால் கிடைத்த ஊதியம் ஈ) வில்லும் அம்பும்

11. பொருத்தமானதைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க:- உப்பில்லா பண்டம் _______

அ) குப்பையிலே        ஆ) உள்ளளவும்      இ) மூன்று நாள்           ஈ) ஒரு சோறு பதம்

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“ விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் “

12. பாடல் இடம் பெற்ற நூலைத் தேர்க.

அ. நற்றிணை            ஆ. பரிபாடல்               இ. முல்லைப்பாட்டு                ஈ. மலைபடுகடாம்

13. இப்பாடல் இடம்பெற்றுள்ள அடிமோனையைத் தேர்க.

அ. உருஅறி – உந்துவளி       ஆ. கருவளர் - உருஅறி               

இ. விசும்பில் – கருவளர்          ஈ. உருஅறி – கிளர்ந்த

14. ‘ ஊழ் ஊழ் ‘ இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க_______

அ. உரிச்சொல்தொடர்  ஆ.பெயரெச்சத் தொடர் இ.வினையெச்சத் தொடர் ஈ.அடுக்குத் தொடர்

15. பாடலின் ஆசிரியரைத் தேர்க_____

அ. இளங்கோவடிகள்   ஆ. பரஞ்சோதி முனிவர்       இ. கீரந்தையார்  ஈ. பெருங்கெளசிகனார்

 பகுதி – 2

ஆ) விடைக்கேற்ற வினா அமைக்க:-                                                                           10X1=10

16.காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்.

17.குழந்தை, தன் கைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி, தலை நிமிர்ந்தும் முகமசைத்தும் ஆடும் பருவம் செங்கீரை பருவம் ஆகும்.

18. 1942 ஆகஸ்ட் 13 ஆம் நாள் ம.பொ.சி. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

19. வலிமையை நிலைநாட்ட தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவது தும்பைத்திணை

20. தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கியவர் கலைஞர்.

21. உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார் நல்வேட்டனார்.

22. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடும் பாடல்கள் திருவெம்பாவை, திருப்பாவை.

23. மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் தேவநேயபாவாணர்.

24. புதிய படைப்புகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவுகிறது.

25. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்

பகுதி – 3

இ) அனைத்து வினாவிற்கும் விடையளிக்க.                                                                       2X5=10

26. 636015 என்ற பின்கோடு கொண்ட சேலம் மாவட்டத்தில், குண்டு போடும் தெரு, கிச்சிப்பாளையம், வீட்டு எண் : 60 என்ற முகவரியில் வசித்து வரும், ரமேஸ், அமுதா  என்பவர்களின் மகள் நந்தினி என்பவர், தந்தை கொடுத்த 300 ஐக் கொண்டு அங்குள்ள கிளை நூலகத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறார். அவருக்குரிய விண்ணப்பம் எழுதுக.

27.மதுரை மாவட்டம், கம்பன் நகர், காந்தி தெருவிலுள்ள 112 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் நிலவன், வெண்மதி ஆகியோரின் மகன் பொன்ராஜ், என்பவர் வயது 25 என்பவர், கணினியில் பி.எஸ்.சி படித்து, தட்டச்சு தொழில் நுட்பத்தில் ஆங்கிலம் மற்று தமிழ் மேல்நிலை முடித்துள்ளார். அவர் அங்குள்ள நாளிதழ் நிறுவனத்தில் ஆய்வாளர் பணி வேண்டி விண்ணப்பிக்கிறார். தேர்வர் தம்மை பொன்ராஜ்ஜாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள  படிவத்தை நிரப்புக.

பகுதி – 4

ஈ) அனைத்து வினாவிற்கும் விடையளிக்க.                                                                       3X5=15

28. மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ என்னும் தலைப்பில் நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற உன் தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

29. இன்சொல் பேசுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி எழுதுக.

30. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

                                                                       

click here

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post