பத்தாம் வகுப்பு
மெல்லக் கற்கும் மாணவர்கள்
சிறப்பு அடைவுத் தேர்வு-3-2026
மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 60 நிமிடம் மதிப்பெண் : 50
பகுதி - 1
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
15X1=15
1. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று வந்துள்ள
அணியைத் தேர்க
அ) வஞ்சப் புகழ்ச்சி
அணி ஆ) உருவக அணி
இ) உவமை அணி ஈ)
எடுத்துக்காட்டு உவமை அணி
2.
‘ வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் ‘ – என்ற அடிகள் இடம் பெற்ற நூல்
அ) புறநானூறு ஆ) நற்றிணை இ) சிலப்பதிகாரம் ஈ) குறுந்தொகை
3. ‘ சிலம்புச் செல்வர்
‘ என்று போற்றப்படுபவர்________
அ) இளங்கோவடிகள் ஆ) பெருஞ்சித்திரனார் இ) ம.பொ.சிவஞானம் ஈ) சரபையர்
4.
“ வளிமிகின் வலி இல்லை “ என காற்றின் ஆற்றலைக் கூறுபவர்
அ) இளநாகனார் ஆ) ஐயூர் முடவனார் இ) தனிநாயகம் ஈ)
இளங்கோவடிகள்
5. மணிமேகலையின் ஆசிரியர்__________________
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச் சாத்தனார் இ) தனிநாயகம் ஈ) பரணர்
6. நாலெழுத்தில்
கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும். இப்புதிருக்கான விடையைத் தேர்க
அ) விண்மீன் ஆ) நறுமணம் இ) புதுமை ஈ)
காற்று
7.
காட்டு விலங்குகளைச் ___தடை செய்யப்பட்டுள்ளது.செய்த தவறுகளைச் ___திருத்த உதவுகிறது.
அ) சுட்டல், சுடுதல் ஆ) தொடுத்தல்,
தொடுதல் இ) நடித்தல், நடிப்பு ஈ) புதையல், புதைத்தல்
8. கானடை என்பதைப் பிரித்தால் வரும்
பொருந்தாதத் தொடர் எது?
அ) கான் அடை – காட்டைச்
சேர் ஆ) கான் உடை – காட்டின் உடை
இ) கான் நடை – காட்டுக்கு
நடத்தல் ஈ) கால் நடை – காலால் நடத்தல்
9 தொடரைப்
படித்து விடையைத் தேர்ந்தெடுக்க: கல்சிலை ஆகுமெனில், நெல் ________ ஆகும்.
அ) சோறு ஆ) கற்றல் இ) எழுத்து ஈ) கரு
அ) திணை ஆ) மரபு இ) பால் ஈ)
காலம்
11.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் - இக்குறளில் வந்துள்ள அளபெடை_____
அ) ஒற்றளபெடை ஆ) சொல்லிசை இ) உயிரளபெடை ஈ) இன்னிசை
12.
பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்_____
அ) புதுமை ஆ) விண்மீன் இ) நறுமணம் ஈ)
காற்று
13.
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ்
வுலகு- இக்குறளில் ‘ கடமை ‘ குறிக்கும் சீரைத் தேர்க
அ) சிதையாமல் ஆ) கண்ணோட இ) வல்லார் ஈ) கருமம்
14.
குட்டி இளவரசன் – என்ற நூலின் ஆசிரியர்–
அ) வல்லிக்கண்ணன் ஆ) வெ.ஸ்ரீராம் இ) மா.நன்னன் ஈ) உதய சங்கர்
15.
மாடியிலிருந்து இறங்கினார் முகமது – இத்தொடரில் தடித்தச்
சொற்களில் உள்ள தொடரின் வகையைத் தேர்க
அ) பெயரெச்சத் தொடர்
ஆ)விளித்தொடர் இ) வேற்றுமைத் தொடர் ஈ) வினைமுற்றுத் தொடர்
பகுதி
– 2
ஆ):- உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு
விடை தருக 5X3=15
16. மலேசிய மண்ணில், சுபாஷ் சந்திரபோசின் இந்திய
இராணுவத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு வீரர் ‘மலேயா கணபதி ‘ என்பவர். ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டு
இறந்ததை அறிந்து கலைஞர் ‘ கயிற்றில் தொங்கிய கணபதி ‘ என்ற சிறிய கட்டுரை நூலை எழுதிய
போது அவருக்கு வயது இருபத்தி இரண்டு. அனைத்து இந்தியர்களிடமும் இருந்த ஆங்கிலேய எதிர்ப்புணர்வு,
கலைஞரிடமும் இருந்தது என்பதைக் காட்டும் நூல் இது.
அ) கலைஞரிடம்
இருந்த எதிர்ப்புணர்வைக் காட்டிய நூல் எது?
ஆ) இந்திய
இராணுவத்தில் பணியாற்றிய தமிழ்நாட்டு வீரர் யார்?
இ) கலைஞர்
கயிற்றில் தொங்கிய கணபதி என்ற நூலை எழுதும் போது அவருடைய வயது
யாது?
17. ‘ உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஒளவையார்.இரவலர் வராவிட்டாலும்
அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார்.
பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர். தன்னை நாடி வந்த பரிசலன் பொருள்
பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன்
வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் கொடுப்பவன்
திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.
அ. அதியன் குறித்து ஒளவையார் கூறுவது யாது?
ஆ. குமணன் வருந்த காரணமாக பெருந்தலைச் சாத்தனார் கூறுவது யாது?
இ. திருமுடிக்காரிக் குறித்து கபிலர் கூறுவது யாது?
18. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன.
புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில்
முதலிடம் ஆங்கிலம், இரண்டாமிடம் மலையாளம். மொழிபெயர்ப்பினால் புதிய சொற்களை உருவாகி
மொழிவளம் ஏற்படுகிறது.
அ. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன?
ஆ. தமிழ் நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
இ. மொழிபெயர்ப்பின் பயன் என்ன?
19. கொடையின்
சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது, பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது.
எழுவரின் கொடைப் பெருமை சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் பதிவு
செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றுப்படை இலக்கியங்கள், கொடை இலக்கியங்களாகவே
உள்ளன. பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது. புறநானூற்றின் கொடைப்பதிவும்
குறிப்பிடத்தக்கது.
அ) கொடை இலக்கியங்களாக உள்ள
இலக்கியங்கள் எவை?
ஆ) சேர அரசர்களின் கொடைப்
பதிவுகளைக் கூறும் நூல் எது?
இ) எழுவரின் கொடைப் பெருமையைக்
கூறும் நூல்கள் யாவை?
20. இளம் வயதிலேயே
சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர், நாகர் கோவில் நகர் மன்றத் தலைவராகவும்,
சட்ட மன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். குமரி மாவட்டப்
போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷ்ல் நேசமணி என்று அழைக்கப்பட்டார்.
1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக
மாறியது.
அ) கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன்
எப்போது இணைந்தது?
ஆ) குமரி மாவட்டப் போராட்டத்தை
முன்னெடுத்துச் சென்றவர் யார்?
இ) நேசமணி அவர்கள் ஆற்றிய
பணிகள் யாவை?
பகுதி – 3
இ) அனைத்து வினாவிற்கும் விடையளிக்க.
4X5=20
26. சிலப்பதிகார
மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக
27. இறைவன்,புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை
நயத்துடன் எழுதுக
28. கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய
கவிதாஞ்சலியை விவரிக்க.
29. வள்ளுவம், சிறந்த்
அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக
மெல்லக் கற்போர் சிறப்பு வழிகாட்டி -2026 -27. தொடர்புக்கு
: 8072426391
.png)