10th Standard Tamil Daily Special Question Paper | Exam Ready Practice-13-PDF



WWW.TAMILVITHAI.COM                           WWW.KALVIVITHAIGAL.COM

பத்தாம் வகுப்பு

தமிழ்

தினசரி சிறப்பு வினாத்தாள்-13-2026

நேரம் : 40 நிமிடம்                                                                                                           மதிப்பெண்:30

பகுதி-அ

அ) அனைத்து வினாவிற்கும் விடையளி:-                                                                       (10x3=30)

1. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

   மேவன செய்தொழுக லான் – இக்குறளில் வஞ்சப் புகழ்ச்சி அணி இடம்பெற்றுள்ளதை விளக்குக.

2. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

3. “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

4. பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

  பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;

  பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

  கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

  தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

அ) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?       ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.   ஈ) காருகர் – பொருள் தருக.

உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

5. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

6. வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக

7. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

8. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

9.‘சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம் ‘ என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.

 ( குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )

10. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக:-  மருவூர்ப் பாக்கம்

மருவூர்ப்பாக்கம் என்பது நகரின் உட்பகுதியாகும். பட்டின பாக்கம் என்பது கடற்கரைக்குஅருகிலுள்ள பகுதியாகும். தொழில்கள் மிக்க பகுதி மருவூர்ப்பாக்கம்; வாணிபம் செய்வோரும், தொழில் செய்வோரும் வாழ்ந்த பகுதி அது. அங்கே தெருக்கள் தனித்தனியே இன்ன இன்ன தொழிலுக்கு என வகைப்படுத்தி இருந்தன. நறுமணப் பொருள் விற்போர் ஒரு தனித்தெருவில் குடி இருந்தனர். நூல் நெய்வோர் தனிவீதியில் இருந்தனர். பட்டும், பொன்னும், அணி கலன்களும் விற்போர் தனிவீதியில் தங்கி இருந்தனர். பண்டங்களைக் குவித்து விற்கும் தெரு கூலவீதி எனப்பட்டது. அப்பம் விற்போர், கள் விற்போர், மீன் விலை பகர்வோர், வெற்றிலை, வாசனைப் பொருள்கள் விற்போர், இறைச்சி, எண்ணெய் விற்போர், பொன், வெள்ளி, செம்புப் பாத்திரக் கடைகள் வைத்திருப்போர், பொம்மைகள் விற்போர், சித்திர வேலைக்காரர், தச்சர், கம்மாளர், தோல் தொழிலாளர், விளையாட்டுக் கருவிகள் செய்வோர், இசை வல்லுநர்கள், சிறு தொழில் செய்பவர்கள் இவர்கள் எல்லாம் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

___________________________________________________________________________

இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..தொடர்பு எண் : 80724-26391

click here
 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post