10th Standard Tamil Daily Special Question Paper | Exam Ready Practice-14-PDF

 



WWW.TAMILVITHAI.COM                           WWW.KALVIVITHAIGAL.COM

பத்தாம் வகுப்பு

தமிழ்

தினசரி சிறப்பு வினாத்தாள்-14-2026

நேரம் : 40 நிமிடம்                                                                                                           மதிப்பெண்: 30

மொழித்திறன் – பயிற்சிகள்

அ) அனைத்து வினாவிற்கும் விடையளி:-                                                                                 (4x1=4)

வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

ஆ) தொடர்களில் உள்ள தடித்த அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.                                                              (5x1=5)

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்

இ). எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.                                                     (5x1=5)

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

 

 

எறும்புந்தன் கையால் எண் சாண்

 

 

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

 

 

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

 

 

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி

 

 

ஈ) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-           (6x2=12)

) இயற்கைசெயற்கை

) சிறு - சீறு

) கொடு - கோடு

) தான்தாம்

) கொள்கோள்

) விதி - வீதி

உ) சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-(4சொற்கள் மட்டும் )                  (2x2=4)

தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ

___________________________________________________________________________

இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..தொடர்பு எண் : 80724-26391

click here

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post