WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம் வகுப்பு
தமிழ்
தினசரி சிறப்பு வினாத்தாள்-12-2026
நேரம் : 40 நிமிடம் மதிப்பெண்:30
பகுதி-அ
அ) அனைத்து
வினாவிற்கும் விடையளி:-
(10x3=30)
1. வேலோடு நின்றான்
இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான்
இரவு - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
2. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில்
கூறிய கருத்துகளை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
3. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது
ஏன்? விளக்கம் தருக.
4. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
5. நேற்றிரவு
பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த
மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்” என்றார். “இதோ
சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா
விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,”
நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த
நீரைக் குடித்தாள். - இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப்
பட்டியலிட்டு எழுதுக.
6. மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின்
கலைநயத்துடன் எழுதுக.
7. கம்பராமாயணப் பாடல் அடிகளுக்கு
ஏற்ற பொருளை எழுதுக.
|
கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே |
|
|
தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட |
|
|
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ |
|
8. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட
இரண்டினை எழுதுக.
10. வள்ளுவம்,சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள்
நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
________________________________________________________________________________
இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..தொடர்பு எண் : 80724-26391
