WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம் வகுப்பு
தமிழ்
தினசரி சிறப்பு வினாத்தாள்-7-2026
நேரம் : 40 நிமிடம் மதிப்பெண்:25
பகுதி-அ
அ) உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(5x1=5)
1. பா எத்தனை வகைப்படும்______
அ) இரண்டு ஆ) நான்கு இ) ஆறு ஈ) ஐந்து
2. முல்லைத் திணையின் பெரும்பொழுது_______
அ) கார்காலம் ஆ) குளிர்காலம் இ) பின்பனிக்காலம் ஈ) இளவேனிற்காலம்
3. “திருமால் குன்றம்” என்று அழைக்கப்படுவது______
அ) அழகர் மலை ஆ) சிறுமலை இ) கொல்லிமலை ஈ) சுருளி மலை
4. வடிவங்களைக்கொண்டு நிகழ்த்துக்கலைகளை எத்தனை வகைகளாகப்
பிரிக்கலாம்_____
அ) மூன்று ஆ) இரண்டு இ) நான்கு ஈ) ஆறு
5. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்______
அ) ஆறு ஆ) ஒன்பது இ) ஏழு ஈ) ஐந்து
பிரிவு-2 / பகுதி-ஆ
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(3+2=5)
6.அ) “விருந்தினனாக” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல்
எழுதுக (அல்லது)
ஆ) “ தண்டலை “ எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
7. “குன்றேறி” எனத் தொடங்கும் குறளை எழுதுக.
பிரிவு-3 / பகுதி- இ
விண்ணப்பம் நிரப்புக:- (3X5=15)
8. , ஏஞ்சல் நகர், தர்கா தெரு, இராமநாதபுரத்தைச் சேர்ந்த
இராபர்ட் என்பவரின் மகன் ஜோசப் என்பவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம்
வகுப்பு படித்து முடித்து, அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு
வணிகவியல் பாடப்பிரிவில் தமிழ்வழியில் சேர விண்ணப்பிக்கிறார். தேர்வர் தம்மை ஜோசப்பாகக்
கருதி உரிய படிவத்தை நிரப்புக.
9. குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக.
பள்ளி
ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலத்தில் படித்த கதை/ கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான
மதிப்புரை எழுதுக.
குறிப்புகள்
: நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின்
நயம் – நூல் கட்டமைப்பு – சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர்.
10. வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள்
நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.
