9TH-TAMIL-THIRAN-ANSWER KEY-4- URAIYADAL AMAITHAL

ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025

ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025

வகுப்புநிலைத் திறன்கள்

4.1 உரையாடலை நீட்டித்து எழுதுக

நகம்: ஏன் அண்ணா, சோகமாக இருக்கிறாய்? என்ன காரணம்?

விரல்: ம்ம்ம்…. என்னுடைய சோகத்திற்குக் காரணம் நீதான் தெரியுமா?

நகம்: நானா? எப்படி என்று விளக்கமாகக் கூறுங்கள் அண்ணா!

விரல்: நீதான் என்னைத் தாண்டி நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கிறாயே!

நகம்: அதுதான் அடிக்கடி என்னை வெட்டி விடுகிறார்களே!

விரல்: இருந்தாலும்… நேற்று ஒரு தாய் தன் மகனிடம், “உன்னுடைய நகத்தை ஒழுங்காக வெட்டாமல் விட்டுவிட்டால் விரலையே வெட்டி விடுவேன்” என்று கூறிக் கண்டித்தார். வளர்வது நீ; வெட்டுவது என்னையா? என்ன கொடுமை இது!

நகம்: அண்ணா! நான் கொஞ்சம் வளர்ந்தாலே, எல்லாரும் “நகம் நீளமா வளருது” என்று சொல்லுகிறார்கள்!

விரல்: ஆமாம், பிறகு என்ன செய்வார்கள் தெரியுமா? கத்தரிக்கோல் எடுத்து உன்னை வெட்டுவார்கள்… ஆனால் வலி எனக்குத்தான்!

நகம்: தற்காக சோகப்படாதே அண்ணா! நான் இல்லாம இருந்தா, உன் கை அழகா இருக்குமா?

விரல்: சரி தம்பி, ஆனால் நீ கொஞ்சம் மெதுவாகவே வளரணும்; இல்லேன்னா மீண்டும் வலி!

நகம்: சரி அண்ணா! இனிமேல் நாம இருவரும் சேர்ந்து வேலை செய்வோம்.

விரல்: நல்ல யோசனை! நகம்–விரல் நண்பர்கள் என்றென்றும் சேர்ந்து இருப்போம்!

4.2 குறிப்புகளைக் கொண்டு உரையாடல் அமைக்க – “விண்வெளி வீரருடன் ஒரு நாள்”

மாணவன்: வணக்கம் அண்ணா! நீங்கள் விண்வெளிக்கு சென்றீர்கள் என்று கேள்விபட்டேன். அது எப்படி இருந்தது?

விண்வெளி வீரர்: வணக்கம்! அது மிகவும் அழகான அனுபவம். விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி.

மாணவன்: அங்கே நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள்?

விண்வெளி வீரர்: நாங்கள் சிறப்பு உணவு பைகளில் இருக்கும் உணவை சாப்பிடுவோம். தண்ணீரும் குழாய்களில் குடிப்போம்.

மாணவன்: அங்கே காற்று இருக்கிறதா?

விண்வெளி வீரர்: இல்லை, காற்று இல்லை. நாங்கள் ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு சுவாசிப்போம்.

மாணவன்: அங்கே எடை இல்லையா?

விண்வெளி வீரர்: இல்லை, புவியீர்ப்பு விசை இல்லாததால் எடை தெரியாது. நாங்கள் மிதந்து செல்வோம்.

மாணவன்: பயணத்துக்கு முன் நீங்கள் எப்படித் தயாராகினீர்கள்?

விண்வெளி வீரர்: உடற்பயிற்சி, மருத்துவப் பரிசோதனை, விண்கலப் பயிற்சி – இவையெல்லாம் செய்தோம்.

மாணவன்: பூமியுடன் நீங்கள் எப்படி பேசுவீர்கள்?

விண்வெளி வீரர்: ரேடியோ மற்றும் செயற்கைக்கோள் மூலம் பேசுவோம்.

மாணவன்: அந்தப் பயணத்தின் நோக்கம் என்ன?

விண்வெளி வீரர்: விண்வெளியில் புதிய விஷயங்களை அறியவும், பூமியைப் பற்றி ஆராய்வதற்கும் தான்.

மாணவன்: ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதா?

விண்வெளி வீரர்: ஒருமுறை கருவி வேலை செய்யவில்லை. நாங்கள் குழுவாக அதை சரி செய்தோம்.

மாணவன்: அந்த அனுபவத்தில் நீங்கள் என்ன கற்றீர்கள்?

விண்வெளி வீரர்: முயற்சி செய்தால் எதையும் செய்யலாம் என்பதைக் கற்றேன்.

மாணவன்: நன்றி அண்ணா! நானும் ஒருநாள் விண்வெளி வீரராக வேண்டும்!

விண்வெளி வீரர்: நிச்சயமாக முடியும்! உன் கனவை விட்டுவிடாதே!

📘 PDF பதிவிறக்க – இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post