🔥 ஒன்பதாம் வகுப்பு – தமிழ் திறன் 2025 | வினா & விடை -CLO -6 + PDF Download 📘

 

ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025

ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025

வகுப்புநிலைத் திறன்கள் – வினா உருவாக்குதல்

6.1. விடைக்கான வினா உருவாக்குக

அ) ஆகஸ்டு – 12 உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
விடை : உலக யானைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஆ) “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் பாரதியார்.
விடை : “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் யார்?
இ) குடைவரைக் கோயில்கள் தொடங்கி, தனித்தனிக் கற்சிற்பங்கள் வரை காணப்படுவது மாமல்லபுரத்தின் சிறப்பு.
விடை : மாமல்லபுரத்தின் சிறப்பு யாது?
ஈ) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்.
விடை : தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?

6.2. வினாச்சொல்லைக் கொண்டு வினா அமைத்து எழுதுக

வினாச்சொல் வினா
எது? உனக்கு பிடித்த பழம் எது?
யார்? அங்கே நிற்பவர் யார்?
எப்போது? நீ எப்போது எழுந்தாய்?
எங்கே? நீ எங்கே போனாய்?
ஏன்? அவன் ஏன் அழுகிறான்?
எப்படி? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
📘 PDF பதிவிறக்க – இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post