📚 TET 2026 - தமிழ் - 10TH-STD-இயல்-7-மதிப்பீடு, மொழித்திறன் பயிற்சிகள்.-வினாக்கள்

    

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026
தமிழ்
பத்தாம் வகுப்பு தரம்.
(Tnpsc, Tet, Trb, Ttse(11th), and All Compulsary Tamil Competative Exams - Purpose )
வினாக்களும், விடைகளும்
இணையவழித் தேர்வு வினாக்கள்
இயல் - 7 

இயல் – 7

மதிப்பீடு, மொழித்திறன் பயிற்சிகள்

1. மேன்மை தரும் அறம் என்பது

          அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது     

          ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

          இ) புகழ் கருதி அறம் செய்வது

          ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.

2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?

          அ) உதியன்; சேரலாதன்             ஆ) அதியன் ; பெருஞ்சாத்தன்

          இ) பேகன்; கிள்ளி வளவன்         ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

3. வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்று தந்த நூல்

          அ) ஒரு சிறு இசை   ஆ) முன்பின்       இ) அந்நியமற்ற நதி   ஈ) உயரப்பறத்தல்

4. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று _____, _____ வேண்டினார்.

          அ) கருணையன், எலிசபெத்துக்காக             ஆ) எலிசபெத், தமக்காக

          இ) கருணையன் ; பூக்களுக்காக                    ஈ) எலிசபெத்; பூமிக்காக

5. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

          அ) அகவற்பா         ஆ) வெண்பா         இ) வஞ்சிப்பா         ஈ) கலிப்பா

6. அவையம் என்பது

          அ) மாணவர் மன்றம் ஆ) தமிழ் மன்றம் இ) அறம் கூறும் மன்றம் ஈ) இலக்கிய மன்றம்

7.காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் – இதில் காணும் உவமை

          அ) காய் போல் இருந்தேன்         ஆ) நெல்மணி காய்ந்தது போல் காய்ந்தேன்

          இ) பூப்போல் வாடினேன்             ஈ) மழை காணா பயிரானேன்

8. கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்

          அ) குறுந்தொகை  ஆ) புறநானூறு      இ) நற்றிணை        ஈ) அகநானூறு

9. பிரான் மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

          அ) மயிலாடுதுறை  ஆ) இராமநாத புரம்   இ) திருநெல்வேலி         ஈ) சிவகங்கை

10. கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே – இவ்வடியில்  இடம் “ பறம்பு நாடு “ என்பது

          அ) கொல்லி மலை   ஆ) வெள்ளிமலை  இ) பிரான் மலை ஈ) திருவண்ணாமலை

11. குறள் வெண்பாவின் இலக்கணம்

          அ) முதலடி நான்கு சீர், இரண்டாம் அடி மூன்று சீர்

          ஆ) முதலடி ஐந்து சீர், இரண்டாம் அடி நான்கு சீர்

          இ) முதலடி ஆறு சீர், இரண்டாம் அடி வரையறை இல்லை

          ஈ) சீர்கள் கணக்கு இல்லை

12.சங்க இலக்கியத்தில் அரசின் கடமையாக சொல்லப்பட்டவை

          அ) வரி வசூல் செய்வதும், போர் புரிவதும்

          ஆ) போர் புரிவதும், செல்வ செழிப்பைப் பெருக்குவதும்

          இ) நிலவளம் காண்பதும், உணவுப் பெருக்கம் காண்பதும்

          ஈ) குற்றங்களைத் தடுப்பதும், கடுமையான சட்டம் இயற்றுவதும்

13. பழங்களை விடவும் நசுங்கிப் போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?

          அ) நேர்மை            ஆ) நட்பு      இ) மனித நேயம்    ஈ) உழைப்பு 

14. மரம் தேடிய களைப்பு

      மின் கம்பியில்

      இளைப்பாறும் குருவி – இந்த ஹைக்கூ கவிதையை எழுதியவர்

          அ) புதுவை தமிழ் நெஞ்சன்        ஆ) நாணற்காடன்  இ) வைரமுத்து    ஈ) தமிழன்பன்

15. விற்பனையில்

     காற்றுப் பொட்டலம்

    சிக்கனமாய் மூச்சு விடவும்…… இந்த ஹைக்கூ கவிதையை எழுதியவர்

          அ) புதுவை தமிழ் நெஞ்சன்       ஆ) நாணற்காடன்  இ) வைரமுத்து    ஈ) தமிழன்பன்

16. Education is what remains after one has forgotten what one has learned in school – கூறியவர்

          அ) Albert Einstein   ஆ) Spanish Proverb   இ) Aristotle   ஈ) Winstion Churchill

17. Tomorrow is Often then busiest day of the week - – கூறியவர்

          அ) Albert Einstein   ஆ) Spanish Proverb   இ) Aristotle   ஈ) Winstion Churchill

18. It is during our darkest moments that we must focus to see the light – கூறியவர்

          அ) Albert Einstein   ஆ) Spanish Proverb   இ) Aristotle   ஈ) Winstion Churchill

19. Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts – கூறியவர்

          அ) Albert Einstein   ஆ) Spanish Proverb   இ) Aristotle   ஈ) Winstion Churchill

20. லாட்டரி சீட்டு வாங்கியவுடன், கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என பாலன் நினைத்தான்- இத்தொடருக்குப் பொருந்தும் சரியான மரபுத் தொடர்

          அ) மனக்கோட்டை          ஆ) கண்ணும் கருத்தும்  

இ) அள்ளி இறைத்தல்      ஈ) ஆறப்போடுதல்

21. கர்ணன் கேட்டவருக்கெல்லாம், கேட்டத்தைக் கொடுத்து புகழ் பெற்றான். இத்தொடருக்குப் பொருந்தும் சரியான மரபுத் தொடர்

          அ) மனக்கோட்டை          ஆ) கண்ணும் கருத்தும்  

இ) அள்ளி இறைத்தல்     ஈ) ஆறப்போடுதல்

22. தமிழ்ச்செல்வன் போட்டித் தேர்வில் கடின உழைப்பில் வெற்றிப் பெற்றான். இத்தொடருக்குப் பொருந்தும் சரியான மரபுத் தொடர்

          அ) மனக்கோட்டை          ஆ) கண்ணும் கருத்தும்  

இ) அள்ளி இறைத்தல்      ஈ) ஆறப்போடுதல்

23. கந்தன் தனக்கு வந்த கோபத்தினை தள்ளிப்போட்டான். இத்தொடருக்குப் பொருந்தும் சரியான மரபுத் தொடர்

          அ) மனக்கோட்டை          ஆ) கண்ணும் கருத்தும்  

இ) அள்ளி இறைத்தல்      ஈ) ஆறப்போடுதல்

24. அமுதனும், கந்தனும் கண்டும் காணாமல் பழகுவார்கள். இத்தொடருக்கான சரியான உவமையைக் காண்க.

          அ) தாமரை இலை நீர் போல      ஆ) மழை முகம் காணாப் பயிர் போல

          இ) கண்ணினைக் காக்கும் இமை போல  ஈ) சிலை மேல் எழுத்து போல

 

25. தந்தையை இழந்த குடும்பம் வறுமையில் வாடியது. இத்தொடருக்கான சரியான உவமையைக் காண்க.

          அ) தாமரை இலை நீர் போல       ஆ) மழை முகம் காணாப் பயிர் போல

          இ) கண்ணினைக் காக்கும் இமை போல  ஈ) சிலை மேல் எழுத்து போல

26. இளமை தான் கற்ற கல்வி என்றும் நிலைத்திருக்கும். இத்தொடருக்கான சரியான உவமையைக் காண்க.

          அ) தாமரை இலை நீர் போல                 ஆ) மழை முகம் காணாப் பயிர் போல

          இ) கண்ணினைக் காக்கும் இமை போல  ஈ) சிலை மேல் எழுத்து போல

27. செல்வி தன்னுடைய மகளைப் பாதுகாப்பாக வளர்த்து வந்தாள். இத்தொடருக்கான சரியான உவமையைக் காண்க.

          அ) தாமரை இலை நீர் போல                 ஆ) மழை முகம் காணாப் பயிர் போல

          இ) கண்ணினைக் காக்கும் இமை போல  ஈ) சிலை மேல் எழுத்து போல

28. கொல்லி வெற்பன், மலையமான் என்ற பட்டப் பெயர்களுக்கு உரியவர்கள்

          அ) சோழன்            ஆ) சேரர்               இ) பாண்டியர்         ஈ) களப்பிரர்

29. கொல்லி மலையை வென்ற சேரன்

          அ) கொல்லி வெற்பன்  ஆ) மலையமான்  இ) இரும்பொறை ஈ) நெடுஞ்ச்செழியன்

30. பிற மலைப் பகுதிகளை வென்றவர்கள்

          அ) கொல்லி வெற்பன்  ஆ) மலையமான்  இ) இரும்பொறை ஈ) நெடுஞ்ச்செழியன்

31. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

"தம்பீ! எங்க நிக்கறே?"

அ) தம்பி! எங்கு நிற்கிறாய்?         ஆ) தம்பீ! எங்கு நிக்கிறாய்?
இ)
தம்பி! எங்க நிற்கறே?             ஈ) தம்பீ! எங்கு நிற்கறே?

32. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

"நீங்க சொன்ன எடத்துல தாண்ணே!"
அ)
நீங்க சொன்ன இடத்துல தானே!             ஆ) நீங்கள் சொன்ன எடத்துல தான்!
இ)
நீங்க சொன்ன இடத்தில் தானே!               ஈ) நீங்கள் சொல்லிய இடத்தில்தான்

33. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

"எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது"
அ)
எதிர்த்தாப்புல ஒரு தேநீர் கடை இருக்கிறது.ஆ) எதிரில் ஒரு தேநீர் கடை உள்ளது.
இ)
எதிரில் ஒரு டீ கடை இருக்குது.   ஈ) எதிர்த்தாப்பில் ஒரு தேநீர் கடை உள்ளது.

34. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

"அங்ஙனக்குள்ளேயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு...."
அ)
அங்கனே தேநீர் சாப்பிட்டு, செய்தித்தாள் படி.

ஆ) அங்கேயே தேநீர் குடிச்சு, பேப்பர் படிச்சுக்கிட்டு இரு.

இ) அங்கேயே தேநீர் குடித்து, செய்தித்தாளைப் படித்துக்கொண்டு இரு.
ஈ)
அங்கேயே டீ குடித்து, பேப்பர் படித்து இரு.

35. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

        "நா வெரசா வந்துருவேன்"

அ) நான் விரைவாக வந்துவிடுவேன்.  ஆ) நான் வேகமாக வந்துவிடுவேன்.
இ)
நா விரைவா வந்துருவேன்.            ஈ) நான் வெரசா வந்துவிடுவேன்.

36. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

"அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே!"
அ)
அண்ணே! சம்முவத்தையும் கூட்டி வாங்க.

ஆ) அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள்!
இ) அண்ணா! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்க.
ஈ)
அண்ணே! சம்முவத்தை கூட்டிக்கொண்டு வாருங்கள்.

37. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

         "அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு"

அ) அவன பார்த்து மிகவும் நாள் ஆகிவிட்டது.
ஆ)
அவனைப் பார்த்தே ரொம்ப நாள் ஆகிவிட்டது.

இ) அவனைப் பார்த்து மிகவும் நாட்களாகிவிட்டது.
ஈ) அவனை பார்த்து ரொம்ப நாளாச்சு.

38. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

      "அவம் பாட்டியோட வெளியூர் போயிருக்கான்"

அ) அவம் பாட்டியுடன் வெளியூர் போனான்.
ஆ)
அவன் பாட்டியுடன் வெளியூர் போயிருக்கான்.

இ) அவன் பாட்டியோடு வெளியூர் போயிருக்கான்.
ஈ)
அவன் பாட்டியுடன் வெளியூருக்கு போயிருக்கிறான்.

39. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

          "உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்"

அ) உங்கள் ஊருக்கே அவனை கூட்டிக்கொண்டு வருகிறேன்.
ஆ)
உங்க ஊருக்கே அவனை கூட்டிக்கிட்டு வர்றேன்.
இ)
உங்கள் ஊருக்கு அவனை கூட்டி வருகிறேன்.
ஈ)
உங்கூருக்கு அவனை கூட்டிக்கொண்டு வருகிறேன்.

40. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

"ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே!"

அ) மிகவும் சின்ன வயசுல பார்த்தேன்.
ஆ)
ரொம்பச் சிறிய வயதில் பார்த்தது.

இ) மிகவும் சிறிய வயதில் பார்த்ததுண்டு!
ஈ)
ரொம்ப சின்ன வயதில் பார்த்ததுண்டு.

41. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

       "அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்"
அ)
அப்போ அவனுக்கு மூன்று வயசு இருக்கும்.
ஆ)
அப்பம் அவனுக்கு மூணு வயது இருக்கும்.
இ)
அப்போது அவனுக்கு மூணு வயசு இருந்தது.

ஈ) அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்.

42. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

"இப்ப ஒசரமா வளந்துட்டான்!"

அ) இப்ப உயரமா வளர்ந்துட்டான்.
ஆ)
இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான்!
இ)
இப்போது ஒசரமாக வளர்ந்தான்.
ஈ)
இப்ப உயரமாக வளர்ந்தான்.

43. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

"ஒனக்கு அடையாளமே தெரியாது!"

அ) உனக்கு அடையாளமே தெரியாது!
ஆ)
உனக்கு அடையாளம் தெரியாது.
இ)
ஒனக்கு அடையாளம் தெரியாது.
ஈ)
உனக்கு அடையாளமே தெரியாது.

44. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

            "ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்!"
அ)
ஊருக்கு எங்களுடன் வருவாம்.
ஆ)
ஊருக்கு எங்கூட வருவான்.

இ) ஊருக்கு எங்களுடன் வருவான் பாரேன்!
ஈ)
ஊருக்கு எங்கூட வருவான் பாரேன்.

45. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

     "சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்......."

அ) சரி, தொலைபேசியை வையுங்கள். நான் கிளம்பிவிட்டேன்.
ஆ) சரி, போனை வை. நாங்க கிளம்பிட்டோம்.
இ)
சரி, தொலைபேசி வை. நாங்கள் கிளம்பினோம்.
ஈ)
சரி, போனை வையுங்கள். நாங்கள் கிளம்பிட்டோம்

46. தொடரில் உள்ள பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கினைக் காண்க.

"சரிங்கண்ணே"

அ) சரி அண்ணே.  ஆ) சரிங்க அண்ணா.       இ) சரி அண்ணன். ஈ) சரி அண்ணா.

47. சிறு பொழுதின் வகைகளுள் ஒன்று

          அ) மார்கழி             ஆ) சித்திரை          இ) மாலை             ஈ) குறிஞ்சி

48. நேர் – நேர் – வாய்பாடு?

          அ) புளிமா               ஆ) தேமா              இ) கருவிளம்         ஈ) கூவிளம்

49. எட்டுத்தொகை நூல்களில் ஒன்று

          அ) சிலப்பதிகாரம்   ஆ) சிறுபஞ்ச மூலம்         இ) புறநானூறு        ஈ) தொல்காப்பியம்

50. மக்களே போல்வர் ______ என வள்ளுவர் குறிப்பிடுபவர்

          அ) கயவர்    ஆ) தேவர்    இ) கற்றவர்            ஈ) ஒற்றர்

51. முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுது

          அ) குளிர்காலம்      ஆ) முன்பனி         இ) பின்பனி            ஈ) கார்காலம்

52. மொழி ஞாயிறு என அழைக்கப்படுபவர்

          அ) பாவாணர்         ஆ) பெருஞ்சித்திரனார்    இ) நாமக்கல் கவிஞர்  ஈ) தமிழன்பன்

53. நல்ல என்னும் அடைமொழி கொண்ட தொகை நூல்

          அ) நற்றிணை        ஆ) குறுந்தொகை           இ) பரிபாடல்           ஈ) கலித்தொகை

54. கழை என்பதன் பொருள்

          அ) கரும்பு              ஆ) வயல்               இ) மூங்கில்           ஈ) சேறு

55. மதியின் மறுபெயர், இது நிலவையும் குறிக்கும்

          அ) யானை             ஆ) திங்கள்           இ) ஞாயிறு             ஈ) வெண்ணிலவு

56. குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு

          அ) மான்      ஆ) எருமை           இ) கரடி       ஈ) முதலை

57. புறத்திணைகளுள் ஒன்றைத் தேர்க

          அ) குறிஞ்சி           ஆ) வெட்சி           இ) முல்லை           ஈ) மருதம்

58. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் – எனக் கூறியவர்

          அ) திருவள்ளுவர்  ஆ) ஔவையார்     இ) கம்பர்      ஈ) பாரதியார்

59. மதிமுகம் உவமை எனில், முகமதி என்பது

          அ) வேற்றுமை       ஆ) வினைத்தொகை       இ) உவம உருபு     ஈ) உருவகம்

60. வீரமாமுனிவர் இயற்றிய நூல்

          அ) தேவாரம்           ஆ) சிலப்பதிகாரம்            இ) தேம்பாவணி     ஈ) சிறுபஞ்சமூலம்

61. பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம்

          அ) தாலாட்டு    ஆ) காப்பு பருவம்   இ) விளையாட்டு பருவம்    ஈ) பள்ளி பருவம்

62. முப்பால் பகுப்புக் கொண்ட நூல்களில் ஒன்று

          அ) திருக்குறள்      ஆ) நாலடியார்        இ) சிலப்பதிகாரம்    ஈ) மணிமேகலை

63. மன்னனது உண்மையான புகழை எடுத்துக் கூறுவது

          அ) புகழ்ச்சி            ஆ) வரலாறு           இ) வீரம்       ஈ) மெய்க்கீர்த்தி

64. 96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று

          அ) திருக்குறள்      ஆ) சிலப்பதிகாரம்  இ) பிள்ளைத்தமிழ் ஈ) மணிமேகலை

65. செய்தவம் – என்பதன் இலக்கணக் குறிப்பு

          அ) வேற்றுமை       ஆ) வினைத்தொகை      இ) பண்புத் தொகை          ஈ) உவமை

கவிதையைப் படித்து பின் வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

          அம்மா என் காதுக்கொரு தோடு - நீ

   அவசியம் வாங்கி வந்து போடு!

சும்மா இருக்க முடியாது - நான்

   சொல்லிவிட்டேன் உனக்கு இப்போது

காதுக்குக் கம்மல் அழகன்று-நான்

  கழறுவதைக் கவனி நன்று

நீதர் மொழியை வெகுபணிவாய் - நிதம்

  நீ கேட்டு வந்து காதில் அணிவாய்!

கைக்கிரண்டு வளையல் வீதம் - நீ

  கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!

பக்கியென் றென்னை யெல்லோரும் - என்

  பாடசாலையிற் சொல்ல நேரும்

வாரா விருந்து வந்த களையில் - அவர்

  மகிழ் உபசரித்தல் வளையல்!

ஆராவமுதே மதி துலங்கு - பெண்ணே

  அவர் சொல்வ துன்கைட்கு விலங்கு!

ஆபர ணங்கள் இல்லை யானால் - என்னால்

   யார் மதிப்பார் தெருவில் போனால்?

கோபமோ அம்மா இதைச் சொன்னால் - என்

  குறைதவிர்க்க முடியும்.

கற்பது பெண்களுக்கா பரணம் - கெம்புக்

  கல் வைத்த, நகைதீராத ரணம்!

கற்ற பெண்களை இந்த நாடு - தன்

  கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு    - பாரதிதாசன்.

66. இக்கவிதையின் ஆசிரியர் யார்?

அ) பாரதிதாசன்      ஆ) பாரதி     இ) கண்ணதாசன்  ஈ) வள்ளுவர்

67. “தோடு” என்ற சொல்லின் பொருள் என்ன?

அ) வளையல்         ஆ) காதணி  இ) சங்கிலி   ஈ) மாலை

68. இக்கவிதையின் மையக் கருத்து என்ன?

அ) ஆபரணங்களின் அவசியம்                       ஆ) பெண்களின் அழகு
இ) கல்வியே பெண்களின் உண்மையான ஆபரணம் ஈ) செல்வத்தின் முக்கியத்துவம்

69. “கம்மல்” என்றால் என்ன?

அ) கைக்காப்பு        ஆ) மாலை   இ) வளையல்         ஈ) காதணி

70. “பக்கியென் றென்னை” – இங்கு “பக்கி” என்றால் என்ன?

அ) புத்திசாலி          ஆ) அறிவில்லாதவன்      இ) கேலி செய்யப்படுபவன்
ஈ) ஏழை / தாழ்வு படுத்தப்படும் ஒருவர்

71. “கற்பது பெண்களுக்கா பரணம்” – இதில் கூறப்படுவது என்ன?

அ) பெண்களுக்கு நகை அவசியம்       ஆ) பெண்களுக்கு கல்வியே ஆபரணம்
இ) பெண்கள் வேலை செய்ய வேண்டும்

ஈ) பெண்கள் வீட்டு வேலை செய்ய வேண்டும்

72. இக்கவிதை எந்த வகை இலக்கியம்?

அ) செய்யுள்           ஆ) காப்பியம்          இ) சிற்றிலக்கியம்  ஈ) பாடல் இலக்கியம்

73. “மதி துலங்கு” – இங்கு “மதி” என்றால்?

அ) சூரியன்            ஆ) அறிவு   இ) நட்சத்திரம்        ஈ) வானம்

74. “அவர் சொல்வது உன்கைட்கு விலங்கு” – பொருள் என்ன?

அ) அவர்கள் சொல்வது அழகு   ஆ) அவர்கள் சொல்வது நன்மை
இ) அவர்கள் சொல்வது கட்டுப்பாடு / சங்கிலி போன்றது
ஈ) அவர்கள் சொல்வது விளையாட்டு

75. இக்கவிதையில் பெண்கள் எதனை விட முக்கியம் என்று கூறப்படுகிறது?

அ) நகை      ஆ) செல்வம்          இ) அழகு     ஈ) கல்வி

76. “வளையல் வீதம்” – இதில் “வீதம்” என்றால்?

அ) அளவு    ஆ) வீடு       இ) தெரு      ஈ) விலை

77. “ஆபரணங்கள் இல்லை என்றால்” – இதில் கூறப்படும் கருத்து?

அ) மதிப்பு குறையும்          ஆ) மக்கள் பேசுவார்கள்
இ) பணம் இல்லை           ஈ) உடை இல்லை

78. “கற்பது பெண்களுக்கா பரணம்” – இது எந்த அணிக்குச் சேர்ந்தது?

அ) உவமை           ஆ) உருவகம்        இ) எதுகை   ஈ) மோனை

79. தவறான கூற்றை காண்க:

அ) கவிதை கல்வியை வலியுறுத்துகிறது
ஆ) பெண்களுக்கு நகை அவசியம் என்கிறது
இ) கல்வி உயர்ந்தது என்கிறது
ஈ) பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்கிறது

80. சரியான கூற்றை காண்க:

அ) பெண்களுக்கு நகை முக்கியம்       ஆ) கல்வி தேவையில்லை
இ) கல்வியே பெண்களின் ஆபரணம்   ஈ) செல்வமே உயர்வு

81. காரணம் – கூற்று வகை:

கூற்று: பெண்களுக்கு கல்வி அவசியம்
காரணம்: கல்வி அவர்களை மதிப்புக்குரியவர்களாக்கும்

அ) இரண்டும் தவறு         ஆ) கூற்று மட்டும் சரி
இ) காரணம் மட்டும் சரி    ஈ) இரண்டும் சரி;

82. “கம்மல் அழகன்று” – இங்கு என்ன வலியுறுத்தப்படுகிறது?

அ) நகை அழகு     ஆ) கல்வி முக்கியம்        இ) பணம் முக்கியம் ஈ) உடை முக்கியம்

83. “நீதர் மொழியை வெகுபணிவாய்” – பொருள்?

அ) நல்லவர்களின் சொல் கேள்                      ஆ) பெரியோரின் சொல் கேள்
இ) நல்ல அறிவுரையை பணிவுடன் ஏற்று கேள்        ஈ) அனைத்தும் சரி

84. இக்கவிதையின் போதனை என்ன?

அ) ஆடம்பரம் தேவை         ஆ) நகை அவசியம்
இ) கல்வியே உயர்வு தரும்  ஈ) கல்வியே உண்மையான அழகு மற்றும் ஆபரணம்

85. "கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே" – இவ்வரியில் வெளிப்படும் பொருள் நயம் என்ன?

அ) கோடையின் வெப்பத்தை நீக்கும் நிழல் தரும் மரம்      

ஆ) மழைக்காலத்தில் வளரும் பயிர்
இ) குளிர்காலத்தில் மலரும் பூ
ஈ) கடலில் வளரும் தாவரம்

86. "ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண் ணீரே" – இவ்வரியில் காணப்படும் சொல் நயம் எது?

அ) கடினச் சொற்கள் பயன்பாடு            ஆ) இனிமை தரும் சொற்கள் அமைப்பு
இ) வடமொழிச் சொற்கள் மிகுதி           ஈ) பொருள் இல்லாத சொற்கள்

87. "உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே" – இவ்வரியில் இடம்பெறும் அணி எது?

அ) உவமை ஆ) எதுகை  இ) உருவகம்                   ஈ) மோனை

88. "மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே" – இவ்வரியில் காணப்படும் தொடை நயம் எது?

அ) இயைபுத் தொடைஆ) எதுகைத் தொடை இ) மோனைத் தொடை ஈ) எதுகை

89. "மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே" – இவ்வரியில் வெளிப்படும் பொருள் என்ன?

அ) காற்றின் வேகம்                             ஆ) மழையின் தன்மை

 இ) காற்றால் கிடைக்கும் இன்பம்        ஈ) வெப்பத்தின் தாக்கம்

90. "பொதுவில் ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே" – இவ்வரியில் கவிஞர் வேண்டுவது என்ன?

அ) செல்வம் ஆ) அறிவு   இ) ஆட்சி    ஈ) இறைவன் அருள்

91. "தீஞ்சுவைத் தண்ணீரே" – இவ்வரியில் உள்ள சொல் நயம் என்ன?

அ) கடினம்                                   ஆ) அர்த்தமின்மை       

இ) இனிமை தரும் சொல் பயன்பாடு  ஈ) வடமொழிச் சேர்க்கை

92. இந்தப் பாடலின் மொத்தப் பொருள் என்ன?

அ) இயற்கை அழகு மட்டும்                 ஆ) மனித வாழ்வு
இ) போராட்டம்                  ஈ) இறைவனை இயற்கை வடிவில் போற்றுதல்

93. இப்பாடலை இயற்றியவர் யார்?

அ) பாரதியார் ஆ) பாரதிதாசன்     இ) கம்பர்      ஈ) வள்ளலார்

94. "மெல்லியபூங் காற்றே" – இவ்வரியில் வெளிப்படும் உணர்வு என்ன?

அ) கோபம்   ஆ) துயரம்    இ) இன்பம்   ஈ) பயம்

95. கானடை என்னும் சொல்லைப் பிரித்தால், பொருத்தாத பொருள் தரும் சொல்லைத் தேர்க.

          அ) கான் அடை – காட்டைச் சேர்         ஆ) கான் நடை – காட்டுக்கு நடத்தல்

          இ) கால் நடை – காலால் நடத்தல்         ஈ) கால் உடை – காலால் உதைத்தல்

96. வருந்தாமரை என்னும் சொல்லைப் பிரித்தால், பொருத்தாத பொருள் தரும் சொல்லைத் தேர்க.

          அ) வரும் + தாமரை – வருகின்ற தாமரை மலர்        

          ஆ) வரும் + தா + மரை – தாவுகின்ற மான் வருகிறது

          இ) வருந்தும் + மரை – துன்புறும் வேதம்

          ஈ) வருந்தா + மரை – துன்புறாத மான்

97. பிண்ணாக்கு என்பது

          அ) பிளவுபட்ட நாக்கு        ஆ) பின்னப்பட்ட உடல்    இ) எள்ளின் உமி  ஈ) பின் நாக்கு

98. பலகையொலி – என்பது

          அ) தனி மொழி      ஆ) தொடர் மொழி            இ) செம்மொழி       ஈ) பொதுமொழி

99. ஆசுகவி என்பது

          அ) கொடுத்தப் பொருளில் உடனே பாடும் பாட்டு

          ஆ) சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு

          இ) சித்திரத்தில் அமைப்பதற்கேற்ப பாடும் பாட்டு

          ஈ) விரித்துப் பாடும் பாட்டு

100. வித்தார கவி என்பது

          அ) கொடுத்தப் பொருளில் உடனே பாடும் பாட்டு

          ஆ) சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு

          இ) சித்திரத்தில் அமைப்பதற்கேற்ப பாடும் பாட்டு

          ஈ) விரித்துப் பாடும் பாட்டு

102. சித்திர கவி என்பது

          அ) கொடுத்தப் பொருளில் உடனே பாடும் பாட்டு

          ஆ) சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு

          இ) சித்திரத்தில் அமைப்பதற்கேற்ப பாடும் பாட்டு

          ஈ) விரித்துப் பாடும் பாட்டு

103. மதுர கவி என்பது

          அ) கொடுத்தப் பொருளில் உடனே பாடும் பாட்டு

          ஆ) சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு

          இ) சித்திரத்தில் அமைப்பதற்கேற்ப பாடும் பாட்டு

          ஈ) விரித்துப் பாடும் பாட்டு

104. பொருத்துக.

          அ) ஆசுகவி           -        1) சித்திரத்தில் அமைப்பதற்கேற்ப பாடும் பாட்டு

          ஆ) மதுரகவி          -        2) விரித்துப் பாடும் பாட்டு

          இ) சித்தரகவி         -        3) கொடுத்தப் பொருளில் உடனே பாடும் பாட்டு

          ஈ) வித்தாரகவி       -        4) சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு

          அ) 3,4,1,2            ஆ) 4,3,1,2              இ) 2,1,3,4               ஈ) 4,2,1,3

105. படிப்போம் ; பயன்படுத்துவோம் :  HAPPINESS

          அ) செங்கோல்       ஆ) மகிழ்ச்சி          இ) பணிக்கொடை            ஈ) ஈகை

106. படிப்போம் ; பயன்படுத்துவோம் :  SCEPTOR

          அ) செங்கோல்       ஆ) மகிழ்ச்சி          இ) பணிக்கொடை            ஈ) ஈகை

107. படிப்போம் ; பயன்படுத்துவோம் :  TRUTH

          அ) செங்கோல்       ஆ) வாய்மை           இ) பணிக்கொடை            ஈ) ஈகை

108. படிப்போம் ; பயன்படுத்துவோம் :  GRATUITY

          அ) செங்கோல்       ஆ) மகிழ்ச்சி          இ) பணிக்கொடை           ஈ) ஈகை

109. படிப்போம் ; பயன்படுத்துவோம் :  CHARITY

          அ) செங்கோல்       ஆ) ஈகை              இ) பணிக்கொடை            ஈ) வாய்மை

110. பொருத்தமற்ற இணையைத் தேர்க

          அ) HAPPINESS       -        மகிழ்ச்சி

          ஆ) SCEPTOR         -        செங்கோல்

          இ) TRUTH            -       ஈகை

          ஈ) GRATUITY          -        பணிக்கொடை

111. பொருத்துக.

          அ) HAPPINESS       -        1) பணிக்கொடை

          ஆ) SCEPTOR         -        2) வாய்மை

          இ) TRUTH            -       3) மகிழ்ச்சி

          ஈ) GRATUITY          -        4) செங்கோல்

          அ) 4,3,1,2              ஆ) 2,4,1,3              இ) 3,4,2,1              ஈ) 2,3,1,4

112. அறமும் அரசியலும் என்ற நூலின் ஆசிரியர்

          அ) அருணன்        ஆ) எம்.எஸ்.உதயமூர்த்தி    இ) நன்னன்        ஈ) மு.வரதராசனார்

113. தமிழரின் தத்துவ மரபு என்ற நூலின் ஆசிரியர்

          அ) அருணன்        ஆ) எம்.எஸ்.உதயமூர்த்தி    இ) நன்னன்        ஈ) மு.வரதராசனார்

114. எண்ணங்கள்  என்ற நூலின் ஆசிரியர்

          அ) அருணன்        ஆ) எம்.எஸ்.உதயமூர்த்தி    இ) நன்னன்        ஈ) மு.வரதராசனார்

115.   "பிறருக்கு உதவுதல்" என்னும் அறத்தினால் கிடைக்கும் முதன்மையான நன்மை எது?

அ) பொருள் ஈட்டுதல் ஆ) மனநிறைவு பெறுதல்

இ) புகழ் அடைதல் ஈ) ஓய்வு எடுத்தல்

116. "இன்சொல் பேசுதல்" என்ற அறம் எதனை வளர்க்கும்?

அ) பகையை          ஆ) நட்பை இ) பயத்தை            ஈ) தயக்கத்தை

117. "பொறுமை காத்தல்" என்ற அறத்தின் மூலம் ஒருவர் எதனைத் தவிர்க்கலாம்?

அ) கல்வியை                   ஆ) தேவையற்ற மோதல்களை

இ) நேரத்தைச் சேமிப்பதை ஈ) நற்பெயரை

118. "பெரியோரை மதித்தல்" என்ற அறம் எவ்வகையான நன்மையைத் தரும்?

அ) செல்வம் தரும்           ஆ) நல்வழிகாட்டுதலும் ஆசிகளும் கிடைக்கும்

இ) அதிகாரம் கிடைக்கும் ஈ) கவலை தரும்

119. "உண்மை பேசுதல்" என்னும் அறத்தினால் ஏற்படும் நன்மை யாது?

அ) மற்றவர்களின் அவநம்பிக்கை ஆ) மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுதல்

இ) சிக்கல்கள் உருவாதல்            ஈ) பயம் உண்டாதல்

120.      "விட்டுக்கொடுத்தல்" என்ற பண்பு எதற்குக் காரணமாக அமைகிறது?

அ) தோல்விக்கு ஆ) அமைதியான வாழ்விற்கு இ) சண்டைக்கு ஈ) தனிமைக்கு

121. "கடமை உணர்வுடன் இருத்தல்" என்ற அறத்தினால் கிடைக்கும் பயன் என்ன?

அ) பாராட்டு மற்றும் உயர்வு ஆ) தண்டனை இ) சோர்வு ஈ) வெறுப்பு

122.      "சுத்தம் பேணுதல்" என்னும் அறம் எதனை உறுதி செய்கிறது?

அ) அறியாமையை ஆ) நல்வாழ்வையும் ஆரோக்கியத்தையும்

இ) சோம்பலை       ஈ) வறுமையை

123.      "அன்பு பாராட்டுதல்" என்ற அறம் எதனை நீக்கும்?

அ) மகிழ்ச்சியை ஆ) வெறுப்புணர்வையும் கசப்பையும்

இ) கல்வியை         ஈ) செல்வத்தை

124.      "நேரம் தவறாமை" என்ற அறத்தினால் ஒருவருக்குக் கிடைக்கும் நன்மை எது?

அ) குழப்பம் ஆ) காரிய வெற்றி மற்றும் மரியாதை இ) நட்டம் ஈ) தாமதம்

125.      "பகுத்துண்டு வாழ்தல்" என்பது எவ்வகையான அறமாகப் பார்க்கப்படுகிறது?

அ) தற்பெருமை ஆ) பொதுநலம் மற்றும் சமத்துவம் இ) சுயநலம் ஈ) பேராசை

126.     "சினம் தவிர்த்தல்" என்ற அறத்தினால் மனதிற்கு ஏற்படும் நன்மை என்ன?

அ) அமைதி           ஆ) பதற்றம்            இ) கோபம்              ஈ) வருத்தம்

127.      "உழைப்பின் மேன்மை" என்ற அறம் எதனைத் தரும்?

அ) ஏழ்மை             ஆ) தன்னிறைவு மற்றும் கௌரவம்

இ) ஏமாற்றம்          ஈ) மற்றவர்களைச் சார்ந்திருத்தல்

128.     "ஒழுக்கம் பேணுதல்" என்பதன் மூலம் ஒரு சமுதாயத்தில் எதனை உருவாக்க முடியும்?

   அ) குழப்பம் ஆ) நற்பண்புகள் நிறைந்த நாகரிக வாழ்வு இ) பிரிவினை ஈ) போட்டி

129.     "இரக்கம் கொள்ளுதல்" என்னும் அறம் எதனை வளர்க்கிறது?

அ) வன்முறை ஆ) மனிதநேயம் இ) கல்நெஞ்சம் ஈ) அலட்சியம்

130.      "நன்றி மறவாமை" என்ற அறம் எதைக் குறிக்கிறது?

அ) செய்த உதவியை நினைவில் கொள்வது ஆ) செய்த உதவியை மறப்பது

இ) மற்றவர்களை ஏமாற்றுவது              ஈ) யாரிடமும் பேசாமல் இருப்பது

131. "பணிவுடைமை" என்ற அறத்தினால் ஒருவருக்கு ஏற்படும் நன்மை என்ன?

அ) அகந்தை                     ஆ) அனைவரிடமும் நற்பெயர் பெறுதல்

இ) மற்றவர்களின் வெறுப்பு ஈ) அவமானம்

132.      "சிக்கனம்" என்னும் அறத்தின் மூலம் எதனை அடையலாம்?

அ) கடன் ஆ) பொருளாதாரப் பாதுகாப்பு இ) கஞ்சத்தனம் ஈ) செலவு

133.      "நேர்மை" என்ற அறம் ஒருவரை எவ்வாறு அடையாளப்படுத்தும்?

அ) பொய்யராக ஆ) நம்பகமான மனிதராக இ) கோழையாக ஈ) சுயநலவாதியாக

134.      "இனியது செய்தல்" என்ற அறத்தினால் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றம் என்ன?

அ) கவலை ஆ) மகிழ்ச்சியும் இணக்கமும் இ) போராட்டம் ஈ) பொறாமை

135.   போக்குவரத்துச் சமிக்கைகளில் (Signals) 'மஞ்சள்' நிற ஒளி எதனைக் குறிக்கிறது?

அ) வாகனத்தை நிறுத்தத் தயாராக வேண்டும்

ஆ) வாகனத்தை உடனே நிறுத்த வேண்டும்

இ) வாகனத்தைச் செலுத்தலாம்

ஈ) வாகனத்தைப் பின்னோக்கி எடுக்க வேண்டும்

136.  சாலைகளில் காணப்படும் 'வட்ட வடிவக் குறியீடுகள்' எதனைக் குறிக்கின்றன?

அ) எச்சரிக்கைக் குறியீடுகள்               ஆ) தகவல் குறியீடுகள்

இ) கட்டாயக் குறியீடுகள்                     ஈ) திசைக் குறியீடுகள்

137.   'முக்கோண வடிவக் குறியீடுகள்' சாலைப் பயனாளர்களுக்கு எதனை உணர்த்துகின்றன?

அ) வேகத்தைக் குறைக்கச் சொல்கின்றன

ஆ) எச்சரிக்கை செய்யப் பயன்படுகின்றன

இ) தூரத்தைக் குறிப்பிடுகின்றன

ஈ) வாகனத்தை நிறுத்தச் சொல்கின்றன

138.   சதுர அல்லது செவ்வக வடிவக் குறியீடுகள் எவ்வகையான தகவல்களை வழங்குகின்றன?

அ) கட்டாயமாகச் செய்ய வேண்டியவை           ஆ) அபாயமான பகுதிகள்

 இ) வசதிகள் மற்றும் இடங்கள் குறித்த தகவல்கள் ஈ) வேக வரம்பு

139.  'U' வளைவு (U-Turn) இல்லை என்பதைக் குறிக்கும் குறியீடு எவ்வடிவத்தில் இருக்கும்?

                    அ) முக்கோணம் ஆ) சதுரம் இ) வட்டம் ஈ) செவ்வகம்

140.   'வலப்பக்கம் திரும்பாதே' என்ற குறியீட்டில் உள்ள கோட்டின் நிறம் என்ன?

                    அ) பச்சை ஆ) நீலம் இ) சிவப்பு ஈ) மஞ்சள்

141. 'குறுகிய பாலம்' இருப்பதை உணர்த்தும் குறியீடு எந்த வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும்?

                    அ) வட்டம் ஆ) முக்கோணம் இ) சதுரம் ஈ) அருங்கோணம்

142.   மருத்துவமனை மற்றும் பெட்ரோல் பங்க் போன்ற இடங்களைக் காட்டும் குறியீடுகள் எந்த வடிவில் இருக்கும்?

                    அ) வட்டம் ஆ) முக்கோணம் இ) செவ்வகம் / சதுரம் ஈ) பிறை வடிவம்

143.   பாதசாரிகள் கடக்கும் இடத்தைச் (Zebra Crossing) சுட்டிக்காட்டும் குறியீடு எது?

அ) வட்டக் குறியீடு ஆ) முக்கோணக் குறியீடு

இ) சதுரக் குறியீடு ஈ) நீள்வட்டக் குறியீடு

144.   வாகனத்தை நிறுத்தக் கூடாது (No Parking) என்பதைக் குறிக்கும் வண்ணக் குறியீடு எது?

அ) முழுமையான பச்சை வட்டம்            ஆ) நீல நிற வட்டத்தில் சிவப்புக் கோடு

இ) மஞ்சள் நிறச் சதுரம்                          ஈ) கருப்பு நிற முக்கோணம்

145.   பின்வருவனவற்றுள் எது 'தகவல் குறியீடு' (Informatory Sign) ஆகும்?

அ) வலப்பக்க வளைவு                 ஆ) நிறுத்தவும்

இ) தொலைபேசி வசதி உள்ளது ஈ) மிதிவண்டி செல்லத் தடை

146.  'வேகத் தடை' (Speed Breaker) இருப்பதை முன்னரே எச்சரிக்கும் குறியீடு எது?

அ) வட்டக் குறியீடு            ஆ) முக்கோணக் குறியீடு

இ) சதுரக் குறியீடு              ஈ) செவ்வகக் குறியீடு

147.   போக்குவரத்துச் சமிக்கையில் 'பச்சை' நிற ஒளி எப்போது ஒளிரும்?

அ) மஞ்சள் ஒளிக்கு முன்னால் ஆ) சிவப்பு ஒளிக்கு அடுத்து

இ) நீல ஒளிக்கு அடுத்து             ஈ) எப்போதும் ஒளிரும்

148.   குறியீட்டில் ஒரு மனிதன் நடப்பது போல வரைந்து அதன் மேல் சிவப்புக் கோடு இருந்தால் அதன் பொருள் என்ன?

அ) பாதசாரிகள் நடக்கலாம் ஆ) பாதசாரிகள் நுழையத் தடை

இ) ஓடலாம்                        ஈ) அமரலாம்

149.  'முந்திச் செல்லக் கூடாது' (No Overtaking) என்ற குறியீடு எதன் கீழ் வரும்?

அ) எச்சரிக்கைக் குறியீடு ஆ) கட்டாயக் குறியீடு

இ) தகவல் குறியீடு   ஈ) திசைக் குறியீடு

150.   'ஆபத்தான பள்ளம்' அல்லது 'மேடு' இருப்பதை எந்த வடிவம் மூலம் ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்கப்படும்?

                    அ) சதுரம் ஆ) முக்கோணம் இ) வட்டம் ஈ) செவ்வகம்

151. 'வழி விடு' (Give Way) என்ற போக்குவரத்து குறியீடு பொதுவாக எவ்வடிவத்தில் இருக்கும்?

அ) தலைகீழ் முக்கோணம் ஆ) நேர் முக்கோணம்

இ) வட்டம்                        ஈ) ஐங்கோணம்

152.   வாகனத்தின் 'வேக வரம்பைக்' குறிப்பிடும் எண்கள் எந்த வடிவத்திற்குள் எழுதப்பட்டிருக்கும்?

                    அ) முக்கோணம் ஆ) சதுரம் இ) வட்டம் ஈ) நட்சத்திர வடிவம்

153.   சாலையின் ஓரத்தில் உணவகம் இருப்பதை உணர்த்தும் குறியீடு எவ்வகையைச் சார்ந்தது?

அ) உத்தரவுக் குறியீடு ஆ) எச்சரிக்கைக் குறியீடு

இ) தகவல் குறியீடு          ஈ) தடைக்குறியீடு

154.   போக்குவரத்துச் சமிக்கையில் வாகனத்தை நிறுத்தச் சொல்லும் நிறம் எது?

          அ) மஞ்சள் ஆ) பச்சை இ) சிவப்பு ஈ) நீலம்


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post