8TH-TAMIL-UNIT-5-KONGU NATTU VANIGAM-NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       நவம்பர் / டிசம்பர்

இயல்                :         05

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       கொங்கு நாட்டு வணிகம்

அறிமுகம்:

கொங்கு நாட்டுப் பகுதியில் பழங்காலந்தொட்டே நடைபெற்று வரும் வணிகச் சிறப்புகளையும், அந்நாட்டின் வளங்களையும் வணிகப் பாதைகளையும் அறிந்துகொள்ளுதல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்
  • கொங்கு நாட்டின் வரைபடம் மற்றும் வணிகப் பொருட்கள் தொடர்பான படங்கள்.

  நோக்கம்:

  • கொங்கு நாட்டு வணிகத்தின் தொன்மையையும், வணிகச் சிறப்புக்குக் காரணமான புவியியல் அமைப்பையும் புரிந்துகொள்ளுதல்.
  • பண்டைய தமிழர்களின் வணிகக் கலாச்சாரத்தை உணர்தல்.

  ஆசிரியர் குறிப்பு:

கொங்கு நாடு இன்றைய சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது என்பதை விளக்குதல். அந்நாட்டு மக்களின் தொழில்கள் மற்றும் வணிகத்தினால் அந்நாடு அடைந்த பொருளாதார முன்னேற்றத்தைக் கற்பித்தல்.

  கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

கொங்கு நாட்டின் வளமான நிலப்பகுதி எவ்வாறு வணிகத்திற்குத் துணை நின்றது என்பதை விளக்குதல். அந்நாட்டின் சிறப்புமிக்க கைவினைத் தொழில்கள் மற்றும் சந்தைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விவரித்தல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • கொங்கு நாட்டுப் பகுதிகளில் விளையும் வணிகப் பொருள்களைக் கண்டறிந்து பட்டியலிடுதல்.
  • பண்டைய கால வணிகமுறைக்கும் இன்றைய வணிகமுறைக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து வகுப்பில் உரையாடுதல்.

  மதிப்பீடு:

  • LOT: கொங்கு நாடு உள்ளடக்கிய இன்றைய மாவட்டங்கள் எவை?
  • MOT: கொங்கு நாட்டு வணிகம் வளர்ச்சி அடையக் காரணமான காரணிகள் யாவை?
  • HOT: கொங்கு நாட்டு வணிகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை இன்றைய காலச்சூழலோடு ஒப்பிடுக.

  கற்றல் விளைவுகள்:

  • T807: கட்டுரைகளைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதல்.
  • T820: உழவுத் தொழில் மற்றும் வணிகம் சார்ந்த செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல்.

  தொடர் பணி:

உங்களது மாவட்டத்தில் நடைபெறும் வணிகச் சிறப்புகள் அல்லது சந்தைகள் குறித்து ஒரு சிறு கட்டுரை எழுதி வருக.


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post