www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : நவம்பர் / டிசம்பர்
இயல் : 05
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : வளம் பெருகுக
அறிமுகம்:
உழவின் சிறப்பையும், மழையின்மையால் ஏற்படும் பாதிப்புகளையும்,
இயற்கையோடு இயைந்த உழவுத் தொழிலின் மேன்மையையும் இப்பாடத்தின் வழி
அறிதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்
- உழவுத் தொழில் மற்றும் விளைநிலங்கள் குறித்த
படங்கள்.
நோக்கம்:
- உழவுத் தொழிலின் இன்றியமையாமையைப்
புரிந்துகொள்ளுதல்.
- மழையை எதிர்நோக்கும் உழவர்களின் வாழ்வியலை உணர்ந்து
இயற்கை வளத்தைப் போற்றுதல்.
ஆசிரியர் குறிப்பு:
உழவுத் தொழில் நாட்டின் முதுகெலும்பு என்பதை விளக்குதல். மழையின் வருகையையும், அதனால் ஏற்படும் வளத்தையும்,
மழை பொய்த்தால் ஏற்படும் வறட்சியையும் கவிதை நயத்துடன்
எடுத்துரைத்தல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
மழையின் வருகையால் ஏர் உழுதல், பயிர் வளர்தல், அறுவடை
செய்தல் போன்ற வேளாண் செயல்பாடுகள் எவ்வாறு செழிக்கின்றன என்பதை விளக்குதல்.
இயற்கையின் கொடையான மழையே வாழ்வின் வளம் என்பதைக் கற்பித்தல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் பாடலை உணர்ச்சியுடன் வாசித்தல்.
- உழவுத் தொழிலின் நன்மைகள் குறித்து வகுப்பில்
கலந்துரையாடல்.
மதிப்பீடு:
- LOT: உழவுத் தொழிலுக்கு
அடிப்படையான இயற்கை வளம் எது?
- MOT: வளம் பெருக உழவர்கள்
மேற்கொள்ளும் செயல்பாடுகள் யாவை?
- HOT: நாட்டின்
பொருளாதாரத்தில் உழவுத் தொழிலின் பங்கு என்ன?
கற்றல் விளைவுகள்:
- T820: உழவுத் தொழில், விதை விதைத்தல் போன்ற செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப்
பயன்படுத்தி எழுதுதல்.
- T811: படிக்கும்போது பல்வேறு
எழுத்தியியல் நடைகளையும், இயற்கை அழகின் வர்ணனை முறைகளையும்
இனங்காணுதல்.
தொடர் பணி:
"உழவுத் தொழிலின் சிறப்பு" என்ற தலைப்பில் ஒரு
சிறு கட்டுரை எழுதி வருக.
