8TH-TAMIL-UNIT-5-KONAKATHUPATTU-NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       நவம்பர் / டிசம்பர்

இயல்                :         05

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       கோணக்காத்துப் பாட்டு


அறிமுகம்:

இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளையும், அக்கால மக்கள் பேரிடர்களைக் கண்டு அஞ்சாமல் எதிர்நோக்கிய முறையையும் விவரிக்கும் நாட்டுப்புற இலக்கியம் ஒன்றை அறிதல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்
  • புயல் மற்றும் இயற்கை சீற்றங்கள் தொடர்பான படங்கள்.

  நோக்கம்:

  • இயற்கை பேரிடர்கள் குறித்து விழிப்புணர்வு பெறுதல்.
  • நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பாடல்களின் வாயிலாக வாழ்வியல் செய்திகளை அறிதல்.

  ஆசிரியர் குறிப்பு:

 "கோணக்காத்துப் பாட்டு" என்பது கும்மிப்பாடல் வடிவில் அமைந்த நாட்டுப்புற இலக்கியம் என்பதை விளக்குதல். பேரிடர் காலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களையும், அதை அவர்கள் எப்படிப் பாடி வெளிப்படுத்தினர் என்பதையும் மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.

  கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

அக்காலத்தில் வீசிய கடுமையான சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை விவரிக்கும் பாடல் வரிகளை விளக்குதல். இயற்கையின் ஆற்றலைக் கண்டு அஞ்சாமல், துணிச்சலோடு அதை எதிர்நோக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துதல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • மாணவர்கள் பாடலை கும்மிப் பாடலாகப் பாடுதல்.
  • இயற்கைச் சீற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகள் குறித்துக் கலந்துரையாடல்.

  மதிப்பீடு:

  • LOT: கோணக்காத்துப் பாட்டு எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?
  • MOT: புயல் காற்று வீசியபோது மக்கள் என்னென்ன பாதிப்புகளைச் சந்தித்தனர்?
  • HOT: இயற்கை பேரிடர்களின் போது நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

  கற்றல் விளைவுகள்:

  • T804: தமது சுற்றுப்புறத்தில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் கதைகள் பற்றிப் பேசுதல்.
  • T807: பாடலைப் படிக்கும் போது அதனை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதல்.

  தொடர் பணி:

உங்கள் பகுதியில் ஏற்பட்ட ஏதாவது ஒரு மழைக்கால அல்லது புயல் கால அனுபவத்தை ஒரு சிறு கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ எழுதி வருக.


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post