www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
இயல் : 04
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : திருக்குறள்
அறிமுகம்:
திருவள்ளுவர் அருளிய திருக்குறளில், ஒரு தலைவன் அல்லது ஒருவன் தன் வாழ்வில்
கடைப்பிடிக்க வேண்டிய ஆளுமை மற்றும் அறநெறிகளைப் போதிக்கும் அதிகாரங்களை அறிமுகம்
செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- திருக்குறள் புத்தகம்
- திருக்குறள் கருத்துகள் அடங்கிய காட்சி அட்டைகள்
மற்றும் திருவள்ளுவர் ஓவியம்.
- திருக்குறள் அட்டை
நோக்கம்:
- தெரிந்து வினையாடல், செங்கோன்மை,
வெருவந்த செய்யாமை, சொல்வன்மை, அவையறிதல் ஆகியவற்றின் வாழ்வியல் விழுமியங்களை அறிதல்.
- திருக்குறளின் அணிநயங்கள் மற்றும் குறள் சொல்லும்
அறக்கருத்துகளை அன்றாட வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தல்.
ஆசிரியர் குறிப்பு:
திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் முப்பால் பகுப்பு மற்றும்
இயல்களை விளக்குதல். ஒவ்வொரு குறளின் பொருளையும், அதிகாரத்தின் மையக் கருத்தையும் மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
ஒரு செயலைச் செய்வதற்கு முன் ஆராய்ந்து செய்தல், செங்கோன்மை தவறாத அறநெறி, பிறர் அச்சப்படும்படியான
செயல்களைத் தவிர்த்தல்,
சொல்லாற்றலின் முக்கியத்துவம் மற்றும் சபையில் பேச வேண்டிய முறை ஆகியவற்றை
விளக்கமளித்தல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் குறள்களைச் சீர்பிரித்துப் பிழையின்றி
வாசித்தல்.
- குறள் கூறும் அறக்கருத்துகளைத் தற்கால வாழ்வியலோடு
தொடர்புபடுத்திக் கலந்துரையாடுதல்.
மதிப்பீடு:
- LOT: சொல்வன்மை உடையவர்
எவ்வாறு பேச வேண்டும்?
- MOT: செங்கோன்மை பற்றி குறள்
கூறுவது யாது?
- HOT: 'அவையறிதல்' அதிகாரத்தின்
அடிப்படையில், ஒரு அவையில் நாம் பேசும்போது கவனத்தில்
கொள்ள வேண்டியவை எவை?
கற்றல் விளைவுகள்:
- T808: கட்டுரையைப் படித்த
பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் வினாக்களுக்கு
விடை காண முற்படல்.
- T810: பாடலில் காணப்படும்
சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்களைப்
புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
தொடர் பணி:
திருக்குறளில் இருந்து, இந்த அதிகாரங்களிலிருந்து தலா ஒரு குறளை
எழுதி, அதன் பொருளையும் எழுதி வருக.
