www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : நவம்பர் / டிசம்பர்
இயல் : 05
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : காலம் உடன் வரும்
அறிமுகம்:
காலம் அறிதல் மற்றும் காலத்தோடு ஒத்துச் செயல்படுவதன் அவசியத்தை உணர்த்தும்
கதையையும், காலத்தின் அருமையைச் சுட்டிக்காட்டும் விழுமியங்களையும்
அறிதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்
- காலத்தின் அருமை மற்றும் திட்டமிடுதல் குறித்த பட
விளக்கங்கள்.
நோக்கம்:
- காலம் தவறாமை மற்றும் கால மேலாண்மை குறித்து
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் திறனை
வளர்த்தல்.
ஆசிரியர் குறிப்பு:
"காலம் பொன் போன்றது" என்பதற்கேற்ப, ஒரு மனிதன் தன் வாழ்வில் காலத்தை எவ்வாறு சரியாகப் பயன்படுத்த வேண்டும்
என்பதையும், உரிய நேரத்தில் செய்யும் செயல் எப்படி
வெற்றியைத் தரும் என்பதையும் விளக்குதல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
காலம் என்பது
மீண்டும் வராத ஒன்று என்பதையும், வாய்ப்புகளைச் சரியான
நேரத்தில் பயன்படுத்திக் கொள்பவர்களே வாழ்வில் முன்னேற முடியும் என்பதையும்
கதைக்கருவின் மூலம் விளக்குதல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளைத் திட்டமிடும்
கால அட்டவணையை (Time Table) உருவாக்குதல்.
- காலம் தவறியதால் ஏற்பட்ட விளைவுகள் அல்லது சரியான
நேரத்தில் செயல்பட்டதால் கிடைத்த வெற்றிகள் குறித்து வகுப்பில் உரையாடுதல்.
மதிப்பீடு:
- LOT: காலம் ஏன் பொன் போன்றது
எனப்படுகிறது?
- MOT: ஒரு செயலைத்
திட்டமிட்டுச் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
- HOT: 'காலம் உடன் வரும்' என்ற தலைப்பு இக்கதைக்கு எவ்வாறு பொருத்தமாக அமைகிறது?
கற்றல் விளைவுகள்:
- T803: படித்தவற்றைப்பற்றிச்
சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்திக்கொள்ளல்.
- T809: படித்தவற்றைப்பற்றி
நன்கு சிந்தித்து புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.
- T814: தான் எழுதுவதை படிப்பவர்
மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு பயன் விளைவிக்கும்
வகையில் எழுதுதல்.
தொடர் பணி:
உங்கள் வாழ்வில் நீங்கள் காலம் தவறாமல் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கத்தைப்
பற்றிச் சிறு கட்டுரை எழுதி வருக.
