6TH-TAMIL-1ST-TERM-UNIT-3-NOOLAGAM NOKKI- NOTES OF LESSON

 

மாதம்                  :        ஆகஸ்ட்/செப்டம்பர்

வகுப்பு                 :        ஆறாம் வகுப்பு     

 பாடம்                  :        தமிழ்                                   

பாடத்தலைப்பு       :        நூலகம் நோக்கி

அறிமுகம்:

அறிவை வளர்க்கும் நூலகத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நூலகத்தைப் 

பயன்படுத்தும் முறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

நூலகத்தின் புகைப்படங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்பான 

காணொலிகள், நூலக அட்டை (Library Card), புத்தகங்கள்.

நோக்கம்:

·        நூலகத்தின் வகைகளை அறிந்துகொள்ளுதல்.

·        நூலகத்தைப் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் தேவையைப் புரிந்துகொள்ளுதல்.

·        நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துதல்.

ஆசிரியர் குறிப்பு:

நூலகம் என்பது அறிவுச் சுரங்கம் என்பதை விளக்கி, ஆசியாவிலேயே மிகப்பெரிய 

நூலகங்களில் ஒன்றான 'அண்ணா நூற்றாண்டு நூலகம்' குறித்த தகவல்களைத் 

தகுந்த ஆதாரங்களுடன் விளக்குதல்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

நூலகங்கள் பல வகைப்படும். நூலகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவும் மாணவர்களின் 

அறிவு வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும், அங்குள்ள வசதிகள் 

குறித்தும் இப்பாடம் விளக்குகிறது.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

·        பள்ளி நூலகத்திற்குச் சென்று புத்தகங்களைத் தேடி எடுக்கும் முறையைப் பயிற்சி 

      செய்தல்.

·        நூலகத்தைப் பயன்படுத்தும் முறை குறித்த கலந்துரையாடல்.

மதிப்பீடு:

·        LOT: நூலகத்தின் வகைகள் யாவை?

·        MOT: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

·        HOT: உங்கள் ஊரில் ஒரு நூலகத்தை உருவாக்குவதாகக் கருதினால், அதில் எத்தகைய வசதிகள் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?

கற்றல் விளைவுகள் :

·        T610: பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி தமிழில் உள்ள பனுவல்களைப் படித்துப் புரிந்து 

               கொண்டு, அவற்றின் மீதான கருத்துகளைப் பகிர்தல்.

·        T613: நூலகம் மற்றும் புத்தகங்கள் தொடர்பான வெவ்வேறு வகையான கட்டுரைகளைத் 

              தொடர்ந்து படித்தல்.

·        T617: நூலகத் தகவல்கள் மற்றும் கட்டுரைகளைப் படித்துப் புரிந்து கொண்டு, தமது 

             கருத்துகளை வெளிப்படுத்துதல்.

தொடர் பணி:

·        அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று அதன் செயல்பாடுகளைக் குறித்து ஒரு அறிக்கை 

      எழுதி வருக.

·        நூலகத்தைப் பற்றிய சிறு கவிதை அல்லது கட்டுரை எழுதி வருக.

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post