6TH-TAMIL-1ST-TERM-UNIT-3-KALVI KAN THIRANTHAVAR- NOTES OF LESSON

 

மாதம்                  :        ஆகஸ்ட்/செப்டம்பர்

வகுப்பு                 :        ஆறாம் வகுப்பு     

 பாடம்                  :        தமிழ்                                   

பாடத்தலைப்பு       :        கல்விக்கண் திறந்தவர்

அறிமுகம்:

கல்விப்புரட்சி ஏற்படுத்திய கர்மவீரர் காமராசரின் கல்விப்பணிகளையும், அவர் 

பள்ளிக் குழந்தைகளுக்காகச் செய்த திட்டங்களையும் அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

காமராசர் படம், கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விளக்கப்படங்கள், மதிய உணவுத் 

திட்டம் தொடர்பான தகவல்கள்.

நோக்கம்:

·        காமராசரின் கல்விப்பணிகளை அறிந்துகொள்ளுதல்.

·        கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் தனிநபர்களின் பங்களிப்பைப் புரிந்துகொள்ளுதல்.

·        கல்வி கண் போன்றது என்ற கருத்தை உணர்த்துதல். 

ஆசிரியர் குறிப்பு:

காமராசர் அவர்கள் ஒரு நிகழ்வின் மூலம் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை 

உணர்ந்து, பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்காகப் பள்ளிகளைத் திறந்த 

வரலாற்றை எடுத்துரைத்தல்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

காமராசர் அவர்கள் பல ஊர்களுக்குச் சென்று, பள்ளிகளைத் திறந்து, மதிய 

உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் ஏழை மாணவர்களின் 

கல்வியறிவு மேம்பட்டது.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

·        காமராசர் கல்விக்காகச் செய்த திட்டங்களைப் பட்டியலிடுதல்.

·        கல்வி குறித்த நிகழ்வுகளை வகுப்பறையில் கலந்துரையாடுதல்.

மதிப்பீடு:

·        LOT: காமராசர் ஏன் 'கல்விக்கண் திறந்தவர்' என்று அழைக்கப்படுகிறார்?

·        MOT: மதிய உணவுத் திட்டத்தால் பள்ளி மாணவர் சேர்க்கை எவ்வாறு அதிகரித்தது என்பதை விளக்குக?

·        HOT: ஒரு தலைவராக நீங்கள் கல்வி வளர்ச்சிக்கு எத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்?

கற்றல் விளைவுகள் :

·        T602: உள்ளூர் சமூக நிகழ்வுகள், செயல்பாடுகள் பற்றி தயக்கமின்றி வினா எழுப்பவும் 

                  கலந்துரையாடவும் செய்தல்.

·        T603: மாணவர்கள் தாம் படித்த நிகழ்வுகள் மீதான கருத்துகளை முன்னெடுத்துச் 

                  செல்லுதல்.

·        T610: தமிழில் உள்ள பனுவல்களைப் படித்துப் புரிந்து கொண்டு, அவற்றின் மீதான 

                கருத்துகளைப் பகிர்தல்.

தொடர் பணி:

·        காமராசர் அவர்களின் கல்விப்பணிகள் குறித்து ஒரு கட்டுரை எழுதி வருக.

·        கல்வி குறித்த உங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தும் ஒரு சிறு பனுவலை எழுதி வருக.

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post