WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம் வகுப்பு
தமிழ்
தினசரி சிறப்பு வினாத்தாள்-16-2026
நேரம் : 40 நிமிடம் மதிப்பெண்:
30
மொழித்திறன் – பயிற்சிகள்
அனைத்து வினாவிற்கும் விடையளி:-
(5x1=5)
அ) தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.
4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.
ஆ) தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை
செய்க:- (5x1=5)
1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும்
______யாவும் அரசுக்கே சொந்தம்.நெகிழிப் பொருள்களை
மண்ணுக்கு அடியில் ___ __ நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும்.(புதையல்,புதைத்தல்)
2. காட்டு விலங்குகளைச் _____தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச்
______திருத்த உதவுகிறது.( சுட்டல், சுடுதல்
)
3. காற்றின் மெல்லிய ____ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான
________பூக்களை மாலையாக்குகிறது. ( தொடுத்தல்,
தொடுதல் )
4. பசுமையான ___ஐக்_____ கண்ணுக்கு நல்லது.(காணுதல்,காட்சி)
5. பொது வாழ்வில்______கூடாது _______இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது.(நடித்தல், நடிப்பு)
இ). தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
(5x2=10)
1. அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக
)
2. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார்.
அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார்.புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.(தொடர் சொற்றொடராக மாற்றுக )
3. கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர்,
எழுத்துவழியாகத் தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார்.(கலவைச்
சொற்றொடராக மாற்றுக)
4. காற்று மாசுபாட்டைக் குறைக்க குப்பை மேலாண்மையை மேற்கொண்டு
பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை தந்து மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த
வேண்டும். (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக
)
5. ஓடிக் கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றவுடன்,அறையில் உள்ளவர்கள் பேச்சு
தடைபட்டது.
( தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)
ஈ) தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:- (5x1=5)
1. வானம் -------- தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில்
பாடகர் முகம் -----
3. --------------- மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ---- புல்வெளிகளில் கதிரவனின் --- வெயில் பரவிக் கிடக்கிறது.
5. வெயில் அலையாதே;உடல்
-------------- விடும்
உ) பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக. (6x2=12)
|
தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு,
பார்ப்பவர், விருது, தோற்பவர், கவிழும், விருந்து |
1. விரட்டாதீர்கள் – பறவைக்கு ______வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் ___________
2. காலை ஒளியினில் மலரிதழ் _______சோலைப் பூவினில்
வண்டினம் ___________
3. மலைமுகட்டில் மேகம் ____________அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் ___________
4. வாழ்க்கையில் __________ மீண்டும் வெல்வர் – இதைத் தத்துவமாய்த்
_________ முயற்சி மேற்கொள்வர்.
5. கைதட்டலே கவிஞர்க்கு _____________ அவையோரின் ஆர்வமே
அவருக்கு _____________
________________________________________________________________________________
இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..தொடர்பு எண் : 80724-26391
