10th Standard Tamil Daily Special Question Paper | Exam Ready Practice-17-PDF

 



WWW.TAMILVITHAI.COM                                                                                WWW.KALVIVITHAIGAL.COM

பத்தாம் வகுப்பு

தமிழ்

தினசரி சிறப்பு வினாத்தாள்-17-2026

நேரம் : 40 நிமிடம்                                                                                                                     மதிப்பெண்: 35

மொழித்திறன் – பயிற்சிகள்

அனைத்து வினாவிற்கும் விடையளி:-                                                                                              (5x1=5)

அ) பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

1. வரப் போகிறேன்                

2. இல்லாமல் இருக்கிறது

3. கொஞ்சம் அதிகம்            

4. முன்னுக்குப் பின்            

5. மறக்க நினைக்கிறேன்

ஆ) தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக                                           (10x1=10)

          மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகின்றன.

இ). மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-                                 (4x1=4)

         1. மனக்கோட்டை     

2. கண்ணும் கருத்தும்          

3.அள்ளி இறைத்தல்            

4.ஆறப்போடுதல்

ஈ) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;-                                                (4x1=4)            

1.     தாமரை இலை நீர் போல

2.    மழை முகம் காணாப் பயிர் போல

3.    கண்ணினைக் காக்கும் இமை போல

4.    சிலை மேல் எழுத்து போல

உ) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.                                                             (4x2=8)

1. கானடை      2. வருந்தாமரை          3. பிண்ணாக்கு    4. பலகையொலி

ஊ) பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக;-          (4x1=4)

          கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்

            கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை

            காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை

            செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ

________________________________________________________________________________

இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..தொடர்பு எண் : 80724-26391

click here

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post