10th Standard Tamil Daily Special Question Paper | Exam Ready Practice-9-PDF

 



WWW.TAMILVITHAI.COM                           WWW.KALVIVITHAIGAL.COM

பத்தாம் வகுப்பு

தமிழ்

தினசரி சிறப்பு வினாத்தாள்-9-2026

( பொதுத்தேர்வு 2020 முதல் ஆகஸ்ட் 24 வரை நடந்தத் தேர்வுகளின் தொகுப்பு)

நேரம் : 40 நிமிடம்                                                                                                           மதிப்பெண்:40

பகுதி-அ

அ) அனைத்து வினாவிற்கும் விடையளி:-                                                                       (15x2=30)

1. நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் எவர் என வள்ளுவர் வாய்மொழி கூறும் செய்தி யாது?

2. ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் இரண்டினை எழுதுக.

3. “ தம்பீ ! எங்க நிக்கிறே?”

     “ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது”

உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

4. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதி, தொடரில் அமைக்க.

5. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

6. கூட்டப் பெயர்களை எழுதுக.       ( அ) கல்          ( ஆ ) ஆடு

7. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

8. மயங்கிய – பகுபத உறுப்பிலக்கணம் தருக..

9. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக. மேகலை, தேன், பூ, மழை, மணி

10. குறிப்பு வரைக – அவையம்

11. தாவரங்களின் இளம்பயிர் வகைகளைக் குறிக்கும் சொற்களில் நான்கினை எழுதுக.

12. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.(அ) விடு – வீடு (ஆ) கொடு – கோடு

13. வெண்பா, ஆசிரியப்பாவின் ஓசைகளை எழுதுக

14. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

15. சந்தக் கவிதையில் வந்த பிழையைத் திருத்துக.

     “ தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை

            தேரும் சிலப்பதி காறமதை

       ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்

            ஓதி யுனர்ந்தின் புருவோமே”

பகுதி-ஆ

அ) அனைத்து வினாவிற்கும் விடையளி. ( கட்டாய வினா : திருக்குறள் )                              (5x2=10)

16. ‘ முயற்சி ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

17. ‘ விடல் ‘ என முடியும் திருக்குறளை எழுதுக.

18. குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்யும் கருத்தினைக் கொண்ட திருக்குறளை எழுதுக

19. ‘ பல்லார் ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

20. ‘ செயற்கை ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

 

___________________________________________________________________________

இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.

வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..

தொடர்பு எண் : 80724-26391


CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post