WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம் வகுப்பு
தமிழ்
தினசரி சிறப்பு வினாத்தாள்-8-2026
நேரம் : 40 நிமிடம் மதிப்பெண்:30
பகுதி-அ
அ) அனைத்து வினாவிற்கும் விடையளி:-
(5x2=10)
1. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில்
இடம் பெற்றுள்ள
காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
2. மென்மையான
மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
3. சொல்வளத்தை
உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
4. “எழுது என்றாள்
“ என்பது விரைவு காரணமாக “ எழுது எழுது என்றாள் “ என அடுக்குத் தொடரானது.”சிரித்துப்
பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
5. வினைமுற்றை
வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.
அ.கலையரங்கத்தில்
எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.
ஆ. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
பிரிவு-2 / பகுதி-ஆ
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(3+2=5)
6.அ) “தூசும் துகிரும்” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல்
எழுதுக (அல்லது)
ஆ) “ நவமணி “ எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
7. “அருமை” எனத் தொடங்கும் குறளை எழுதுக.
பிரிவு-3 / பகுதி- இ
விண்ணப்பம் நிரப்புக:- (3X5=15)
8. கதவிலக்க எண் 50, மாந்தோப்பு தெரு, பனைநகர், ஈரோடு
என்னும் முகவரியில் வசிக்கும் சத்யபாமா வின் மகள் இ.ச.ஹரிணி என்பார் பத்தாம் வகுப்பு
அங்குள்ள கிளை நூலகத்தில் உறுப்பினராக சேர ரூபாய் 300 உடன் செல்கிறார். தேர்வர் தம்மை
ஹரிணியாக நினைத்து உரிய படிவத்தை நிரப்புக.
9. உங்கள் கிராமத்திற்கு
நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் எழுதுக.
______________________________________________________________________________
இளந்தமிழ்
மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்களுக்கு
பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
வழிகாட்டி
பற்றிய விபரங்களுக்கு……..
தொடர்பு
எண் : 80724-26391
