🌟 ஒவ்வொரு வாக்கும் ஒரு வலிமை! உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் உறுதி செய்யுங்கள்!

 


உங்கள் பகுதிக்கு யார் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் என்பதனை அறிய கீழ் உள்ள இணைப்பினை பயன்படுத்துங்கள்

CLICK HERE

04.11.2025 முதல் 04.12.2025 வரை தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சிறப்பு வாக்காளர் திருத்தம் நடக்க உள்ளது. 

இந்த சூழலில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல் இவை

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரும் 04.11.2025 முதல் 04.12.2025 வரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தற்போதுள்ள வாக்காளர்களின் முன் அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டு படிவத்தினை இரட்டை பிரதிகளில் விநியோகிப்பார்கள்.

 அப்போது, அவர்களே வாக்காளர்கள் படிவத்தை நிரப்புவதற்கும் வழிகாட்டுவர். 

கணக்கீட்டு நேரத்தில் எந்தவொரு வீடும் பூட்டப்பட்டிருப்பதை அல்லது மூடப்பட்டிருப்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர் கண்டறிந்தால், அவர் கணக்கீட்டு படிவங்களை அந்த வீட்டிலேயே வைத்துவிட்டு வருவர்.

அந்த படிவங்களை பொதுமக்கள் நிரப்பி வைத்தால் போதுமானது.

 நிரப்பப்பட்ட படிவங்களை சேகரிக்க குறைந்தது மூன்று முறை வருகை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தருவர்.

 தற்போதுள்ள வாக்காளர்களுக்கு முன்கூட்டியே நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கும், நிரப்பப்பட்ட படிவங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைன் முறையில் பதிவேற்றுவதற்கும் https:// Voters.eci.gov.in, மற்றும் https://electors.eci.gov.in அல்லது ECINet mobie App மூலம் வசதி செய்யப்பட்டள்ளது. ஒவ்வொரு வாக்காளரும் இந்த படிவத்தை கணக்கெடுப்பு காலத்தில் வாக்காளர்கள் எந்தவொரு ஆவணத்தையும் தரவேண்டிய அவசியமில்லை.

வாக்காளர் பதிவு அலுவலர்களால் தங்களது பெயர் முந்தைய சிறப்பு தீவிர திருத்த பட்டியலுடன் இணைக்கப்படாத காரணத்தினால் அறிவிப்பு வழங்கும் பட்சத்தில் மட்டுமே சுய சான்றளிக்கப்பட்ட கீழ்கண்ட ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்க்கு சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர்களால், சுயச்சான்று அளித்து சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள்

1. மத்திய அரசு/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்களின் வழக்கமான
2. ஊழியர்/ஓய்வூதியம் பெறுபவருக்கு வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டை/ஓய்வூதிய ஆணை 01.07.1987 க்கு முன்னர் இந்தியாவில் அரசு/உள்ளூர் அதிகாரிகள்/வங்கிகள்/அஞ்சல் அலுவலகம்/ எல்ஐசி/ பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டை/சான்றிதழ்/ஆவணம்
3. தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்.
4. பாஸ்போர்ட்
5. அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள்/பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மெட்ரிகுலேஷன்/கல்விச் சான்றிதழ்
6. தகுதிவாய்ந்த மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிட சான்றிதழ்
7.வன உரிமைச் சான்றிதழ்
8. ஓபிசி/எஸ்சி/எஸ்டி அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட எந்தவொரு சாதிச் சான்றிதழ்
9.தேசிய குடிமக்கள் பதிவேடு (அது எங்கிருந்தாலும்)
10. மாநில/உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு
11. அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு நிலம்/வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்
12. ஆதார்

வாக்குச்சாவடி நிலை அலுவலர் கணக்கெடுப்பு படிவங்களை வீடு தோறும் சென்று விநியோகம் செய்து முடித்த நிலையில், மீண்டும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவத்தின் நகலை சேகரிப்பர். வாக்குச்சாவடி நிலை அலுவலர் கணக்கீட்டு படிவத்தின் ஒரு நகலை அவருடன்/அவளுடன் தேவையான ஆவணங்களுடன் வைத்திருப்பர். மேலும் விண்ணப்பதாரரால் தக்கவைக்கப்பட வேண்டிய கணக்கீட்டு படிவத்தின் மற்ற நகலில் படிவம் மற்றும் வண்ண புகைப்படம் கிடைத்ததற்கான ஒப்புதலை வழங்குவார்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி 
*பகிர்வு: முத்தமிழ் மன்றம் பாஸி*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post