அன்பார்ந்த ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இந்த காணொளியில் காண இருப்பது திறன் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு படிவம். இந்தப் படிவமானது அடிப்படைத் திறன்களை அடிப்படையாகக் கொண்டது. ஆகஸ்ட் 1 முதல் 30 வரை ஒரு மாதத்திற்கு நான்கு வாரங்கள் வீதம் பிரித்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நாம் தேர்வுகள் வைக்கிறோம். அந்த தேர்வுகளுக்கான மதிப்பெண்ணை குறித்து வைப்பதற்கு ஏதுவாக இந்த மதிப்பீட்டு படிவம் நிச்சயமாக உங்களுக்கு உதவும். மேலும் இந்த மதிப்பீட்டு படிவமானது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இரண்டு மொழி ஆசிரியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் நீங்கள் எந்த தேதி வேண்டுமோ அந்த தேதியை குறிப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோன்று எத்தனை மதிப்பெண்களுக்கு வேண்டுமோ அத்தனை மதிப்பெண்களுக்கான மதிப்பெண்ணை குறித்துக் கொள்ளவும். நம்முடைய கல்வி விதைகள் மற்றும் தமிழ் விதை வலைதளம் மூலம் இதுவரை மூன்று தமிழ் வினாத்தாள்களும், மூன்று ஆங்கில வினாத்தாள்களும், இரண்டு கணித வினாத்தாள்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு அல்லது நீங்களே உருவாக்கிய வினாத்தாளினை கொண்டு மாணவர்களுக்கு தேர்வு வைத்து அந்த மதிப்பெண்ணை குறித்துக் கொள்ளலாம். இங்கே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண் படிவத்தில் வாசித்தல் மற்றும் எழுதுதல் என்ற இரு பகுதியில் தேர்வு வைத்து மதிப்பெண்ணை குறித்துக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.இந்த மதிப்பீட்டு படிவத்தை கீழுள்ள click here என்பதை அழுத்தி இந்த மதிப்பீட்டு படிவத்திற்கான pdf ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
குறிப்பு : திறன் சார்ந்த வேறு ஏதேனும் தகவல்கள் மற்றும் முக்கிய வடிவங்கள் மற்றும் காணொளிகள் இவற்றுக்கு கீழுள்ள வாட்ஸ் அப் குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்ட காணொளியை கண்டு அதனை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள் என்றும் கல்விப் பணியில் உங்கள் கல்வி விதைகள் மற்றும் தமிழ் விதை வலைகளும் நன்றி வணக்கம். நீங்கள் திறன் சார்ந்து ஏதேனும் காணொளிகள், செயல்பாடுகள், வினாத்தாள்கள் இவற்றை தயார் செய்து இருப்பின் அது அனைத்து மாணவர்களுக்கும் உதவும் பொருட்டு நமது கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதை வலைப்பக்கங்களில் உங்களுடைய பெயர் மற்றும் பள்ளிப் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும். நீங்கள் அனுப்பி உதவ வேண்டுமெனக் கருதினால் 8667426866 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அனுப்பலாம். அல்லது thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
திறன் மதிப்பீடு படிவம்
தமிழ் மற்றும் ஆங்கிலம்