10TH-TAMIL-FIRST MID TERM -QUESTION PAPER -2025

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தின் படி தமிழ் பாடமானது 9 இயல்களிலிருந்து 7 இயல்களாக குறைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவோம். புதிய பாடத்திட்டத்தின் படி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களுக்கு உதவிடும் பொருட்டு நமது தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது பல்வேறு மாதிரி வினாத்தாள்களை தயார் செய்து பதிவேற்றம் செய்து வருகிறோம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதத் தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் தயாரித்து கொடுத்தோம். அந்த வகையில் ஜூன் மற்றும் ஜூலை மாதப் பாடங்களை இணைத்து முதல் இடைத் தேர்வு வினாத்தாளினை தயார் செய்து வழங்கி உள்ளோம். தேர்வு என்பது இம்மாத இறுதியில் வரலாம் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் வரலாம். நீங்கள் இந்த மாதிரி வினாத்தாளினை மாணவர்களுக்கு வழங்கி அவர்களை முதல் இடைத் தேர்வுக்கு தயாச் செய்யவும்.

பத்தாம் வகுப்பு

தமிழ்

மாதிரி முதல் இடைத் தேர்வு 

வினாத்தாள் - 1

மாதிரி முதல் இடைத் தேர்வு – 2025

10 -ஆம் வகுப்பு                                        தமிழ்                                         

நேரம் : 1.30 மணி                                                                           மதிப்பெண் : 50

அ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                            6×1=6

1. கொம்பில் இருந்து பிரிவது ________

) கவை                          ஆ) சினை               இ) கிளை               ) குச்சி

2. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது.

அ) வேற்றுமை உருபு         ஆ) எழுவாய்           இ) உவம உருபு       ஈ) உரிச்சொல்

3. பரிபாடல் அடியில் ‘ விசும்பில் இசையில் ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ) வானத்தையும் பாட்டையும்       ஆ) வான்வெளியில் , பேரொலியில்

இ) வானத்தில், பூமியையும்  ஈ) வானத்தையும் பேரொலியையும்

4. புதிரை விடுவிக்க:- பழைமைக்கு எதிரானது- எழுதுகோலில் பயன்படும்

அ) காடு        ஆ) விண்மீன்          இ) புதுமை      ) நறுமணம்

5. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் _________

) எந் + தமிழ் + நா            ) எந்த + தமிழ் + நா 

) எம் + தமிழ் + நா            ) எந்தம் + தமிழ் + நா

6. பழகப் பழகப் பாலும் புளிக்கும் – இத்தொடரில் ‘ பழகப் பழக ‘ என்பது எவ்வகைத் தொடர்

) உரிச்சொல் தொடர்                 ) அடுக்குத் தொடர்

) எழுவாய்த் தொடர்                  ) பெயரெச்சத் தொடர்

. எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்க.                                   4×2=8

7. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ) ஒரு நாட்டின் வளமும் அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் பாவாணர்.

ஆ) காற்றின் ஆற்றலை வளி மிகின் வலி இல்லை என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார்.

8. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள    

    காப்பியங்களின் பெயர்களை எழுதுக

9. கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் குறித்து எழுதுக.

10. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

11. பகுபத உறுப்பிலக்கணம் தருக:-  கிளர்ந்த

12. படிப்போம்; பயன்படுத்துவோம் : அ) storm                          ஆ) homograph

இ) எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடையளிக்க.                                     3×3=9

13. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக்  காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப்பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து  ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார். –

    வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக.

14. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

15. உயிர்கள் உருவாகி வளர  ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

16. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.

        மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.

ஈ. அடிமாறாமல் எழுதுக:-                                                                            1×3=3

17.  “மாற்றம் ”  எனத் தொடங்கும் காலக்கணிதம் பாடல்

உ. எவையேனும் இரண்டு வினாவிற்கு விடையளி:-                                                 2×4=8

18. அ) உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதுக     ( அல்லது )

ஆ) மாநில அளவில் நடைபெற்ற ‘ கலைத்திருவிழா ‘ போட்டியில் பங்கேற்று ‘ கலையரசன் ‘ பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

19. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

                       ( அல்லது )

20. நாம் பேசும் மொழியில் அதிகமான சொற்களை ஆள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து எழுதுக.

. படிவம் நிரப்புக.                                                                                                      1×4=4

21. எண்-6,பாரதியார் தெரு, நீலகிரி மாவட்டத்தில்  வசிக்கும் இராமுவின் மகள் தர்ஷினி, கணினிப் பயிற்றுநர் பணி வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புகிறார். தேர்வர் தன்னை தர்ஷினியாக பாவித்து பணிவாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புக.

எ) ஏதேனும் ஒரு வினாவிற்கு விடையளிக்க                                                         1×6=6

22. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.   

23. சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

ஏ) ஏதேனும் ஒரு வினாவிற்கு விடையளிக்க                                                         1×6=6

24. புயலிலே ஒரு தோணிகதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

25. “ பிரும்மம் “ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.

 click here to get pdf

click here


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post