அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொது தேர்வுக் குறித்த அச்சத்தைப் போக்கும் விதமாக சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் அலகுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அலகுத் தேர்வுக்கான பாடங்கள் மதிப்பெண் பங்கீடு மற்றும் தேர்வு கால அட்டவணையை நமது கல்விவிதைகள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் அலகுத் தேர்வுக்குரியப் பாடப்பகுதிகள் மற்றும் தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்து அலகுத் தேர்வுக்கு தங்களைத் தயார் செய்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த அலகுத் தேர்வானது அரையாண்டுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு எழுதும் போது அச்சம் இல்லாமல் எதிர்க்கொள்ளவும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் அன்போடு வாழ்த்துகிறது. தற்சமயம் இரண்டு அலகுத் தேர்வுக்கான தேர்வுக்கால அட்டவணை மற்றும் பாடங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வுகள் முடிந்தவுடன் வினாத்தாள்கள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மற்ற ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவும்.
பத்தாம் வகுப்பு - அலகுத்தேர்வு பாடங்கள்
பதினோராம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு - அலகுத் தேர்வு பாடங்கள்
முதல் அலகுத் தேர்வு கால அட்டவணை
பத்தாம் வகுப்பு -
முதல் அலகுத் தேர்வு கால அட்டவணை
பதினோராம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு
இரண்டாம் அலகுத் தேர்வு கால அட்டவணை
பத்தாம் வகுப்பு -
இரண்டாம் அலகுத் தேர்வு கால அட்டவணை
பதினோராம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு
