SALEM DT-10TH-TAMIL-2ND MID TERM-AK-2026-PDF

  


பத்தாம் வகுப்பு - தமிழ்

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு -2026

சேலம்  மாவட்ட விடைக்குறிப்பு

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                               மதிப்பெண் : 50

பகுதி – 1 | மதிப்பெண்கள் - 7

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ) இளவேனில்.

1

2.

அ) திருப்பதியும் திருத்தணியும்.

1

3.

ஆ) தமிழெண்: ௭௦.

1

4.

இ) சிவந்தது.

1

5.

இ) கலைஞர்.

1

6.

ஆ) சிலப்பதிகாரம்.

1

7.

அ) நெய்பவர்

1

பகுதி – 2  (கட்டாய வினா – 17 )                                                                                             ( 8x2=16)

8

v  விடைக்கேற்ற வினா பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

2

9

மகரந்தம் சிந்தும் சோலைகள், செண்பகக் காடுகள், அரும்புகள் மலரும் பொய்கைகள், புதுமணல் தடங்கள், மாதவிக் கொடிகள் வேலியாக அமைந்த பூக வனங்கள், வயல்கள் ஆகிய இடங்களில் சரயு ஆறு பாய்கிறது.

2

10.

ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் காணும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

2

11.

சிலப்பதிகாரத்தில் செய்யுள் பகுதிகளுக்கு இடையில் உரைநடையாகச் செய்திகளை விளக்கிக் கூறும் பகுதி ‘உரைப்பாட்டு மடை’ எனப்படும்.

2

12

·         பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல்

·         உணவுக்கானப்  பணத்தில் புத்தகம் வாங்குதல்

2

13

இன்று நான் படித்ததைவிட நாளை இன்னும் கொஞ்சம் அதிகம் படிப்பேன்.(பொருத்தமான வேறு விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)

2

14.

அ) REBELLION கிளர்ச்சி / புரட்சி.             ஆ) SCREENPLAY திரைக்கதை.

2

15

v  வெட்சி – கரந்தை

v  வஞ்சி – காஞ்சி

v  நொச்சி – உழிஞை

2

16

மயங்கிய – மயங்கு + இ (ன்) + ய் + அ

மயங்கு – பகுதி

இ(ன்) – இறந்த கால இடைநிலை; ‘ன்’-புணர்ந்து கெட்டது.

ய் – உடம்படு மெய்,அ – பெயரெச்ச விகுதி

1

1

17

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்

2

இ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி (22வது வினா – கட்டாயம்)                                   ( 3*3=9 )

18.

v கல்வித்துறையை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்தார்.

v “ தமிழ் வளர்ச்சித் துறை “ எனப் புதியதாக ஒரு துறையை உருவாக்கினார்.

v தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அனைத்து அரசு விழாக்களிலும் தொடக்கப் பாடலாக பாடச் செய்தார்.

v 2010 இல் கோவையில் “ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை “ நடத்தி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.

1

1

1

19

முத்தொள்ளாயிரம் சேரநாட்டின் வளத்தைச் சிறப்பாக எடுத்துரைக்கிறது. சேரநாடு மலைவளம், காடுவளம், நீர்வளம், வயல்வளம், வணிகவளம் ஆகியவற்றால் செழித்திருந்தது.

நறுமணப் பொருள்கள், அகில், முத்து, மணிகள் போன்ற வளங்களும் வணிகச் செழிப்பும் அந்நாட்டின் பெருமையை உணர்த்துகின்றன.

1 ½

1 ½

 

  

20

உவமை அணி பயின்று வருகிறது. மலைமேல் ஏறி நின்று யானைகள் மோதிப் போரிடுவதைக் காண்பது எளிது; அதுபோலத் தன் கையில் தேவையான கருவி/வளம் உடையவன் ஒரு செயலைச் செய்வதும் எளிது என்று ஒப்பிட்டுக் கூறுகிறது.

 ‘குன்றேறி யானைப்போர் கண்டற்றால்’ என்பது உவமை; ‘தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை’ என்பது உவமேயம்.

1 ½

1 ½

 

21

திணை

நிலம்

குறிஞ்சி

மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை

காடும் காடு சார்ந்த இடமும்

மருதம்

வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல்

கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை

சுரமும் சுரம் சார்ந்த இடமும்

3

22 அ

நாட்டுப்படலம்

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்

வண்டுக  ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ

3

22ஆ

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;            -இளங்கோவடிகள்

3

எவையேனும் இரண்டனுக்கு விடையளி ( 2*4=8 )

23

v  செயல்களை செய்ய முறைகள், நேரம், கருவிகள், நடைமுறைகள் பற்றி தெரிந்து செயல்பட வேண்டும்.

v  மனவலிமை, விடாமுயற்சி, நூல் அறிவு, உலகியல் நடைமுறை ஆகியவை முக்கியம்.

v  இயற்கை நுண்ணறிவு மற்றும் நூல் அறிவுடன் செயல்படுவதால் எந்த சூழ்ச்சியும் சாதிக்க முடியும்.

4

24

அனுப்புநர்

                        அ அ அ அ அ,

                        100,பாரதி தெரு,

                        சக்தி நகர்,

                        சேலம் – 636006.

பெறுநர்

                        ஆசிரியர் அவர்கள்,

                        தினத்தந்தி நாளிதழ்,

                        சேலம் – 636001.

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு

          வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “  எனும் தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளேன். அதை உங்களுக்கு இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையைப் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:    கட்டுரை                                                                     இப்படிக்கு,

இடம் : சேலம்                                                          தங்கள்உண்மையுள்ள,

நாள் : 04-03-2025                                                            அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

            ஆசிரியர் அவர்கள்,

            தினத்தந்தி நாளிதழ்,

,           சேலம் – 636001.

4

25

காட்சிக்குப் பொருத்தமான கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண்

வழங்கலாம்.

4

26

Ø  கல்வெட்டுகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்பேன்.

Ø  அவற்றில் எழுதவோ கீறவோ மாட்டேன்.

Ø  குப்பை அல்லது விளம்பரங்களை ஒட்டாமல் பார்த்துக் கொள்வேன்.

Ø  பிறருக்கும் கல்வெட்டின் முக்கியத்துவத்தை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

Ø  அரசு பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி காப்பாற்ற உதவுவேன்

4

படிவம் நிரப்புக                                                                                                              ( 1*4=4 )

27.

·     கொடுக்கப்பட்ட விவரங்களை உரிய படிவத்தில் சரியாக நிரப்பி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

4

விரிவாக விடையளி                                                                                                     ( 1*6=6 )

28.ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

அனுமார்

அனுமாரின் நெருப்பாட்டம்

அழகுவின் உதவி

அழகுவின் ஆட்டம்

அனுமாரின் மகிழ்ச்சி

முடிவுரை

முன்னுரை

கலைஞன் தனது கலையைத் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் வாரிசை காணும் மகிழ்ச்சி ‘பாய்ச்சல்’ கதையின் மையம்.

அனுமார்

Ø  அனுமார் மின்னல் போல பாய்ந்து ஆடுகின்ற திறமையான கலைஞர்.

அனுமாரின் நெருப்பாட்டம்

Ø  வாலில் நெருப்புடன் பெருங்குரல் எழுப்பி ஆடுவதைக் கண்டதும் குழந்தைகள் ஆச்சரியப்பட்டனர்.

அழகுவின் உதவி

Ø  அனுமார் வாலை அழகிடம் வைக்கச் சொல்லி சென்றார்.

Ø  அழகு அதை அக்கறையுடன் தூக்கிச் சென்றான்.

அழகுவின் ஆட்டம்

Ø  அனுமாரின் ஆடை, சலங்கை போட்டுக் கொண்டு அவன் போல் ஆடத் தொடங்கினான்.

அனுமாரின் மகிழ்ச்சி

Ø  “உடனே கற்றுக்கொண்டாயே!” என்று அனுமார் பெருமையுடன் பாராட்டினார்.

Ø  அழகுவின் ஆட்டத்தில் தன்னுடைய வாரிசை கண்ட சந்தோஷம் அளவற்றது.

முடிவுரை

Ø  திறமையைப் பின்பற்ற ஒரு நல்ல வாரிசு கிடைப்பதே கலைஞனின் பெருமை.

இதை அழகு மற்றும் அனுமார் உறவு அழகாக வெளிப்படுத்துகிறது.

6

26.

முன்னுரை

·        பழங்கால வணிகமும் இக்கால வணிக முறையும் வேறுபாடுகள் கொண்டவை.

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

Ø தனித்தனி பொருளுக்குத் தனித்தனி தெருக்கள் இருந்தன

Ø    எல்லாப் பொருட்களும் ஒரே கட்டிடத்தில் கிடைக்கின்றன

Ø தரம் உயர்ந்த பொருட்கள் கிடைத்தன

Ø    விலை அதிகமாக உள்ளது

Ø கலப்படமில்லாத நேர்மை வணிகம்

Ø    சில நேரங்களில் கலப்படம் உள்ளது

Ø பண்டம் கொடுத்து பொருள் வாங்குதல்

Ø    பணம், கார்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

Ø நம்பிக்கை மற்றும் நேர்மை வணிகம்

Ø    இலாப நோக்கம் அதிகம்

Ø இடைத்தரகர்கள் இல்லை

Ø    பல இடைத்தரகர்கள் உள்ளனர்

Ø இயற்கையான வணிக சூழல்

Ø    சி.சி.டி.வி கண்காணிப்புகள் உள்ளன

முடிவுரை

·        பழங்கால வணிகம் எளிமை; இன்று வசதி அதிகம் ஆனால் செலவு கூடுதல்.

6

விடைக்குறிப்பு தயாரிப்பு : வெ.ராமகிருஷ்ணன்,      

தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி,  வளைய செட்டிப்பட்டி


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post